இந்தத் தொடரை நாம் ஆரம்பிக்கும்போது--இவ்வளவு ஆதரவு இத்தொடருக்குக் கிடைக்குமென்று நாம் நினைக்கவே இல்லை!!
எந்த ஒரு உள் நோக்கமும் இல்லாமல்--அ.தி.மு.கவின் தனிப் பெரும் ஆளுமை இன்னமும் பன் மடங்கு சிறக்கவும் இத்தொடரை ஆரம்பித்தோம்1
விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே நம் மீது--
லாஜிக் இல்லாத கண்டனங்களை எறிந்திருந்தனர்!
பெரும்பாலான,,,நம் மேல் அன்பு வைத்திருக்கும் கட்சி விசுவாசிகள் விவாதத்துக்குள் வரவே இல்லை
நம் மீது வைத்திருக்கும் அன்பு காரணமாகவே அவர்கள் வரவில்லை என்று நாமாக நினைத்துக் கொண்டு திருப்தியடைந்தோம்
சில வெள்ளந்தியான கட்சிக்காரர்கள்,,,,வேறுவிதமாக அர்த்தம் செய்து கொண்டிருந்தது வினோதம்!
எடப்பாடியார்,,,,இனி ஆட்சியைப் பிடிக்கவே மாட்டார் என்றும்--
அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என்று நாம் சொன்னது போலவும் அனர்த்தம் செய்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது1
ஒரு அ.தி.மு.க அனுதாபியோ--பெயரையே சொல்கிறேனே--
தமிழ் செல்வன் D--என்பவர்--
கொஞ்சம் தரம் தாழ்ந்த விதத்தில்--
நம்மை அரசியல் ஞான சூனியம் என்றும் அரசியலைப்ப் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியாது என்றும் கூறியிருந்தார்??
ஞானம் ஒருவனுக்குப் பிறந்தால் அவன்தான் தேர்ந்த அறிவாளி
சூனியம் என்றால்--ஒன்றுமே இல்லாத வெளி!!
ஒன்றுமே இல்லாத சூனியம் என்னும் சைபர் இல்லையென்றால் வாழ்க்கையின் இயக்கமே இல்லை
அவ்வகையில்--அதைக் கண்டு கொண்டவன் ஞானி!!
அந்த முறையில் அவர் ,,,நம்மை---
அனைத்தும் தெரிந்த ஞானி என்று பாராட்டுகிறார் என்று எடுத்துக் கொள்ளலாம் தானே???
ஓ..பன்னீர் செல்வம்1
இவர் தான் இனி,,,அ.தி.மு.கவின் கட்சிக் கொடி--சின்னம் எதையுமே பயன்படுத்தக் கூடாது என்று நீதி மன்றமே சொல்லியாகி விட்டதே
அவரது அனுதாபி ஒருவர்--இவர் பெயரையும் குறிப்பிடுகிறேனே--சக்தி RD--
எடப்பாடியாரைப் புலியோதரை--இன்ன பிற கண்ணியமற்ற சொற்களால் வசை பாடுவதாக சிலர் வருத்தம் தெரிவித்ததோடு--
அந்த சக்தியை நாம் கண்டிக்காததன் மூலம்--நடு நிலை தவறி விட்டோம் என்றும் குறைப் பட்டுக் கொண்டார்கள்
நாம் ஏற்கனவே ஒருமுறை சக்தியை பகிரங்கமாகவே கண்டித்திருந்தோம் என்பதோடு--
ஊடகங்களில்--எம்.ஜி.ஆரையும்,,,,ஜெ வையும் பச்சைப் பச்சையாக--படு கேவலமாக சிலர் இன்னமும் காணொளி மூலம் குப்பையென வார்த்தைகளைக் கொட்டுகிறார்களே--
அவர்களைக் கண்டித்து இவர்கள் ஏன் பதிவுகள் மூலம் கண்டனங்கள் தெரிவிப்பதே இல்லை???
அந்த யூ டியூப் ஆசாமிகளை விட--இந்த சக்தி என்னும் இளைஞர் பெரிய ஆளுமையா??
அல்லது--எம்.ஜி.ஆர்,,,,ஜெ வை விட எடப்பாடியாரின் கரீஷ்மா உயர்ந்ததா???
உடனே,,,,சக்தி என்னும் இளைஞருக்கு நாம்--
பரிந்து பேசுவதாகப் புரிந்து கொண்டு நம் மேல்
வரிந்து கட்டிக் கொண்டு,,,,,,தங்கள் புருவங்களை
விரிந்து காட்டி-- நம் நடு நிலைமை
சரிந்து விட்டது என்று நம் மேல்
எரிந்து விழக் கூடாது??
ஒருவரை நாம் விமர்சிக்கிறோம் என்றால் உடனேயே
அவரை வெறுக்கிறோம் என்று அர்த்தமல்ல!
1990 களில்--விடுதலைப் புலிகளுக்கு,,,,ராஜீவ் காந்தி மேல் இருந்த வெறுப்பையும்,,,,கடுங்கோபத்தையும்
அன்றைய கருணா நிதி உணர்ந்திருந்தும்--அசட்டையாகவும்--இங்கேத் தமிழர்களின் வாக்குகள் போய்விடுமே என்ற அச்சத்தாலும் இருந்ததால் தானே-
ராஜீவை முடிக்க இங்கே,,,ஸ்ரீ பெரும்பத்தூரைத் தேர்ந்தெடுத்தது அன்றைய விடுதலைப் புலி?/
இன்றைய வரை அது தமிழ் நாட்டுக்கு தீராத களங்கம் தானே??
அந்த நிலை இங்கே மீண்டும் ஏற்படக் கூடாதே என்று நாம் கவலை கொள்கிறோம் அவ்வளவே11
சிறுபான்மையினரும்,,,நம் சகோதரர்கள் தான்.
அவர்களுக்கு செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் ஆனால்
அவர்கள் முன்னால்,, ஓவராக நடுங்கிக் கொண்டிருந்தால்--
சிறுபான்மையைச் சார்ந்த தீவிரவாத அமைப்புக்கள் அதையே சாக்காக வைத்து---
தமது விஷம விளயாட்டுக்களுக்கு தமிழகத்தை
விளையாட்டு மைதானம் ஆக்கிக் கொள்ளாதா??
வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக--
பி.ஜே.பியை எதிர்க்கிறேன் பேர்வழி என்று தீவிரவாதிகளின் கையில் நாடு மாட்டிக் கொள்ளக் கூடாதல்லவா?
இரண்டு கழகங்களும்--அவர்களை ஆராதித்தால்--அதைச் சார்ந்த தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் இங்கே அதிகரிக்கும் என்பதே இத்தொடரின் மையக் கருத்து என்பதை மீண்டும் உங்களுக்கு உரைக்கிறேன்1
எம்.ஜி.ஆர்--ஜெ வை விடுங்கள்
யோகி ஆதித்ய நாத் என்னும் சன்னியாசி ஒருவர்--
இஸ்லாமியர்கள் நிறைந்த உத்தர பிரதேசத்தில் இரண்டாம் முறையும் அரியணை ஏறவில்லையா?
எனில்--
அங்குள்ள சிறுபான்மையினர்களுக்குத் தேவையானவற்றை அவர் செய்து வருகிறார் என்று தானே அர்த்தமாகிறது??
எடப்பாடியாரின் நாலரை வருட ஆட்சியை நாமேப் புகழ்ந்து பதிவிட்டிருக்கிறோம்1
இன்று மக்களுக்கே,,,தி.மு.க மீது கடும் வெறுப்பு தோன்றியிருக்கிறது1
அ.தி.மு.க வே,,,அடுத்து ஆட்சியைப் பிடிக்கும்
அதற்கு ஏதுவாக--
தங்களது நாலரை வருட சாதனைகளை நாள்தோறும் பட்டியலிட்டுக் கொண்டும்--
தி.மு.க வின் ஒவ்வொரு தவறுகளையும் கடுமையாக எதிர்த்து,,,,அவற்றை மக்கள் மன்றத்தில் வைப்பதன் மூலமே செயல்பட வேண்டும்
நீ நல்லவன்,,,நல்லதையே செய்கிறாய்11--இது அக்கட்சிக் காரர்களின் ஊக்குவிப்பு என்றால்--
நீ,நல்லவன்! அதனால் உன்னையறியாமல் நீ செய்யும் சிறிய தவறு கூட உன்னை நாளைக்கு வீழ்த்தி விடும் என்று அக்கறையால் அவரை எச்சரிக்கிறோம்!
இது தான் வித்தியாசம்!
அ.தி.மு.க என்னும் பெரிய கப்பலில்--
விமர்சனம் என்னும் சிறிய விரிசலைக் கண்டு
கப்பலின் நிர்வாகிகள் என்னும் ஏனைய பாகங்கள்
அகந்தையோடு அசட்டையாக இருந்தால்??
கப்பலே ஒரு நாள் கடலுக்குள்ளே
காணாமல் போய்விடும் அல்லவா??
அதற்காகவே--
அ.தி.மு.க கப்பலின் காப்டன் எடப்பாடியாரை நாம் விமர்சிக்கிறோம்!!
மற்றபடி--
இத்தொடருக்கு--இத்தொடரை விட அருமையான --
தங்களின் பின்னூட்டங்களால் பெருமை சேர்த்த அனைவருக்கும் நன்றி கூறுவதோடு
அடுத்தொரு தொடரில் விரைவில் சந்திப்போம் என்று கூறி விடை பெறுகிறோம்!!
ஜெய் ஹிந்த்!!
No comments:
Post a Comment