‘லியோ வசூலில் சாதனை படைத்தது ‘என்கிறது தயாரிப்பு நிறுவனம்! ‘எங்களுக்கு லாபமில்லை’ என்கிறது தியேட்டர்கள் தரப்பு!
”ஏன் லாபமில்லை? என்றால், மொத்த கலெக்ஷனில் 80 சதவிகிதத்தை படத் தயாரிப்பாளர் தரப்பு எடுத்துக் கொள்கிறது! 20 சதவிதம் தான் எங்களுக்கு வருகிறது! ஜி.எஸ்.டி வரிக்கு 26 சதவிகிதம் போக வழக்கம் போல 70;30 என இருந்திருந்தால் அவர்களோடு சேர்ந்து நாங்களும் மகிழ்ந்து இருக்க முடியும்” என்கிறது தயாரிப்பு தரப்பு!
விஜய்க்கு மிகப் பெரிய சமபளம் தர வேண்டியுள்ளது. மொத்த தயாரிப்பு செலவில் அவரது சம்பளம் மட்டுமே 70 சதவிகிதமாகிறது! இப்படி தந்த பணத்தை திருப்பி எடுக்கவே தியேட்டர்களுக்கு நெருக்கடி தருகிறோம். டிக்கெட் விலையை முதல் மூன்று நாட்கள் வரை ஆயிரம், இரண்டாயிரம் என விற்கிறோம். என்கிறது தயாரிப்பு தரப்பு! சட்டப்படி டிக்கெட் விலையை உயர்த்த அதிகாரம் இல்லை என்றாலும், இந்த முறைகேடு சகல தரப்பு ஒத்துழைப்புடனும் அரங்கேறுகிறது.
டிக்கெட்டில் கிடைக்காத பணத்தை ஸ்நாக்ஸில் அள்ளுகிறோம் என்கிறார்கள் தியேட்டர் முதலாளிகள்! டிக்கெட்டில் உரிய காசு கிடைத்தாலும் அள்ளுவார்கள் என்பதே உண்மை! 15 ரூபாய் பாப்கார்னை 150, 200 என விற்கிறார்கள்..!
கடைசியில் சுரண்டலுக்கு உள்ளாவது சாதாரண ரசிகன் தான்! தினக் கூலி, வாரக் கூலி என வேலை பார்க்கும் இளைஞர்களே விஜய் ரசிகர்களாக முதல் நாள் ஆயிரம், இரண்டாயிரம் தந்து படம் பார்க்கிறார்கள். சற்று பொறுத்து குடும்பத்துடன் சென்றாலும், டிக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ்க்கு ஒரு குடும்பத்தின் செலவு ரூ2000 ஆகிறது! இந்த நாட்டில் மாதம் 10,000 20,000 க்குள் சம்பளத்தில் குடும்பம் நடத்துபவர்களே 70 சதவிகிதம்!
உண்மைகளை ஆராய்ந்தால், பெரிய மாஸ் ஹீரோக்களை வைத்து படமெடுப்பதன் மூலம் பல அநீதிகளும், மெகா சுரண்டல்களுமே பல தரப்பிலும் அரங்கேறுகிறது..!
ஆக, ஒரு தனி நபரின் மட்டுமீறிய பேராசையால் அதிகமாக எளிய ஜனங்க தான் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்!
தன் மீது மக்கள் கொண்ட அளவுக்கு அதிகமான அன்பை அல்லது மோகத்தைக் கொண்டு இந்த உச்சபட்ச நடிகர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் தங்கள் சம்பளத்தை உயர்த்திவாறே செல்கிறார்கள்! இப்படிப்பட்ட நடிகர்களே நம் தலை எழுத்தை தீர்மானிக்கும் அதிகாரத்திற்கும் வரத் துடிக்கிறார்கள்..! மக்கள் சுதாரித்துக் கொண்டால் நல்லது!
No comments:
Post a Comment