இலங்கையினை பிரிட்டிஷார் ஆளும்போது மதமாற்ற சக்திகளின் கண்களை உறுத்திய இடங்களிலொன்று கதிர்காமம்
அந்த முருகன் ஆலயம் சிங்களரால் கொண்டாடபடுவது தமிழரும் விரும்பி செல்வார்கள், அந்த தலத்தின் மகிமை அப்படியானது
இப்படி இரு இனங்களும் கொண்டாடும் தலத்தை முடக்க அங்குவரும் மக்களை குறைக்க பிரிட்டிஷ் அரசு தன் வஞ்சக திட்டம் ஒன்றை அறிவித்தது
1918ல் அரச அனுமதி இல்லாமல் கதிர்காமம் சென்றால் ஆயிரம் ருபாய் அபராதம் என சொல்லபட்டது, அது இன்று பல லட்சங்களுக்கு சமம்
இது மக்களை அந்த ஆலயத்திலிருந்து படிபடியாக பிரிக்கும் முயற்சி முதலில் அடிதட்டு மக்கள் பெருவாரியானவர்களை விலக்கினால் கொஞ்சம் கொஞ்சமாக வசதியானவர்களையும் விரட்டினால் காலவோட்டத்தில் அது மங்கிவிடும் ஆலயம் இல்லாமல் போய்விடும் எனும் நூதன திட்டம்
மக்களிடம் இருந்து பெரும் பணத்தை பறித்து கடைசியில் ஆலயத்தையும் பலவீனமாக்கும் திட்டம் என்பதை அறிந்த மக்கள் கொதித்தனர்
பொன்னம்பலம் தலமையில் போராட்டமும் வழக்குகளும் பெருகின, பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது
"எங்கள் முருகனை காண உங்களுக்கு ஏன் பணம் தரவேண்டும்" என மொத்த இலங்கையும் கொதித்ததில் பிரிட்டிஷ் அரசு பின்வாங்கிற்று, அச்சட்டம் திரும்பபெறபட்டது
இது இலங்கையில் நடந்த வரலாறு
கோவில்கட்டன உயர்வு என்பது பல காரணங்களை சொன்னாலும் அதன் பின்னணி அஞ்சதக்கது, கடுமையான சதிகளை கொண்டது
இதனை என்றோ இலங்கை மக்கள் புரிந்துகொண்டார்கள்
அதே சட்டம் இப்பொது இந்திய தமிழகத்தில் திருசெந்தூர் ஆலயத்தின் தரிசனங்களில் விதிக்கபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன
ஆக இந்திய தமிழகம் இன்னும் சிலரிடம் இருந்து சுதந்திரம் பெறவில்லை என்பதும், ஒரு காலத்தில் கதிர்காமத்தில் நடந்த சோதனைகள் இப்போது திருசெந்தூரில் நடப்பதும் தெரிகின்றது
கதிர்காமம் மீண்டது போல் திருசெந்தூரும் மீளும், காலம் அதனை ஒருநாள் செய்யும், நிச்சயம் செய்யும்!!
No comments:
Post a Comment