Wednesday, June 14, 2017

நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க.

இசுடாலின் அவர்களே,
உங்களுக்கும் 66 வயதாகிவிட்டது.
முதல்வர் பதவிக்கும்
உங்களுக்கும் ராசி இல்லை.
அம்மாவின் மறைவுக்குப் பின் - அதிமுகவில் சலசலப்புகள் இருந்தாலும் - மக்களின் ஆதரவு உங்கள் பக்கம் திரும்பவில்லை.
அம்மாவின் ஆதரவு பெற்ற OPS
முதல்வராக மூன்று முறை இருந்தார்.
சசிகலா ஆதரவோடு EPS முதல்வரா தற்போது முதல்வராக இருக்கிறார்
உங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை.
காரணம் கருணாநிதி.
சரியான நேரத்தில் உங்களைத்
தலைமைபர பொறுப்பில் அமரச் செய்து கருணாநிதி ஒதுங்கியிருந்தால், சென்ற தேர்தலிலேயே நீங்கள் வெற்றி பெற்று முதல்வராகியிருக்கலாம்.
கருணாநிதியின் பதவிவெறி அந்த வாய்ப்பைத் தடுத்துவிட்டது.
நீங்களாவது நிதர்சன நடைமுறை அரசியலை புரிந்து கொண்டு ஹிந்து த்வேஷ போக்கை கைவிட வேண்டும்.
என்ன செய்வது? எல்லாம் விதிப்பயன்.
ஏதோ எதிர்க்கட்சித் தலைவர்
பதவியோடு திருப்திபட்டுக் கொள்ளுங்கள்.
ஒரு கறுப்பு பைலோடு சட்டசபைக்கு போனோமா? பத்து நிமிடத்தில் வெளியே வந்தோமா? என்று இருக்க பழகிக் கொள்ளுங்கள். புது புது சட்டைகளை கிழித்துக் கொள்ளாதீர்கள்.
நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க.
பாவம் இசுடாலின், உங்கள் நிலை.
வேண்டுமானால் திருத்தணி முருகனுக்கு பால்காவடி பன்னீர்காவடி எடுத்துப் பாருங்களேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...