Friday, October 5, 2018

மாளய அமாவாசை சிறப்பு.

மாளயபட்ச அமாவாசையின் அன்னதானத்தில் விளையும் “பிதரசுஜம்” எனும் சக்திகள்தாம் பிரபஞ்சத்தின் அண்ட சராசரங்களிலும் பயன்படும் ஆன்மீக நாணயமும் ஆகும். இதைப் பெறுதல் மிகவும் கடினம். அன்னதானப் புண்ய சக்திகள்தாம் இதனை மலர வைக்கும்.
புண்ணியங்களிலும் பல வகைகள் உண்டு. நற்காரியம் செய்த உடனேயே அதில் திரளும் புண்ய சக்தி உடனேயே, கலியுகத்தில் தற்போதைய வாழ்க்கையிலேயே பயன்படுவது, பாவ வினைகளைக் கழிக்கப் பயன்படுவது, நன்கு விருத்தியாகித் திரண்டு சந்ததிகளுக்கும் ஆகி வந்து ஆசிகளை அளிப்பது, கொடிய பாவங்களை ஓரளவு தணிக்க உதவுவது, அவரவர் குடும்பத்திற்கு மட்டும் பயனாவது, பிறருக்கு அர்ப்பணித்துப் பயன் தர வல்லது என்று புண்ய சக்திகளும் பல்வகைப்படும். அன்னதானத்தில்தாம் இவை அனைத்தும் ஒருமித்துக் குவிகின்றன.
பிற யுகங்களில் உணவின்றி மனிதன் பல்லாண்டு கள் வாழ முடியும். ஆனால் கலியுகத்தில், மனித உடல் அன்னமய கோசமாக, உணவைச் சார்ந்து உயிர் ஜீவிப்பது விளங்குவதால், அன்னதானத்தில் தான் அனைத்து வகைப் புண்ய சக்திகளும் திரண்டு வருவதாய் அமைந்துள்ளன.
அமாவாசைத் திதிகளுக்கு எல்லாம் மூலத் திதி மூர்த்தியாய் அமைவதே மாளய அமாவாசை! மாளயம் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. மால் + அயம் என்றால் திருமாலின் திருவருளானது பல தெய்வீகக் காரியங்களின் பலா பலன்களாக அமாவாசைத் திதித் திதியில் தாமே திரண்டு வருதல் என்றும் அர்த்தமாகும். திருமாலுக்கும் ப்ரீதி தருவதாகவும், பித்ருக்கள் தம் பெருமாள் பூஜைகளைத் தம் சந்ததியர்க்கும் அர்ப்பணிப்பதாக வும் அமைகின்றது.
பித்ருக்கள் தம் சந்ததியினருக்கு உதவுகின்றனர் எனும் போது இந்த அருளும் அணுகு முறை குறுகிய தாக இருக்கிறதே என்று பலரும் எண்ணுவர். இது தவறான எண்ணம். ஒவ்வொரு பித்ருவின் சந்ததிய ரும் அனைத்து நாடுகளிலும், தற்போதைய அனைத்து மதங்களிலும் மனிதர்களாகவும், தாவர, விலங்கினங்களாகவும் பிறப்பு எடுத்திருக்கலாம் அல்லவா! இவ்வாறு ஒரு பித்ருவிற்கே கோடிக் கணக்கான உயிரினங்களைக் கடைத்தேற்ற வேண்டிய அருளார்ந்த பொறுப்பும், கடமையும் உண்டு என்பதையும் அறிந்திட்டால்தான், பித்ரு பரிபாலனம் என்பது ஜாதி, சமய, இன, குல வேறு பாடுகளைத் தாண்டுவதோடு, மனிதன், ஆண், பெண், மாக்கள், தாவரங்கள், ஜடப் பொருட்கள் என்ற வேறுபாடுகளையும் கடந்த ஜீவகாருண்ய தேவ நிலையில், பூவுலகப் பித்ரு சாந்த ஜோதிப் பரிபாலனமாக நடைபெறுகின்றது என்பதை உணரலாகும்.
சிறிது எள்ளும், நீரும் வார்ப்பதையே மகத்தான வழிபாடாகப் பித்ருக்கள் ஏற்கின்றனர் எனில் என்னே பித்ரு வழிபாட்டு மஹிமை! இறந்த தாத்தா, பாட்டி, பெற்றோர்களின் விருப்பமான உணவு வகைகளை தானமாக அளிப்பதால், ஒரு சிறு வடைகறி, அடை அவியல், காபி மேல் வைத்த ஆசையைக் கூட நீக்க முடியாது இறந்து, பிறவித் தளையில் மாட்டி அவதியுறும் முன்னோருடைய ஆசைத் தளைகள் விலகி, அவர்களுடைய ஜீவசக்தியானது ஆசைப் பின்னலில் இருந்து விடுபட்டு, அடுத்த நிலைக்குச் செல்ல உதவிடும்.
மாளய பட்ச அமாவாசைத் திதி நேரம் முழுதும்
ஓம் நமோ நாராயணாய
ஓங்கார சுஜாதீய ஔஷதாம்
ஓம் பூர, பர பிரம்ம சர்வக்ஷேம சுதாம்ருதாம்!
ஓம் பொருளானவாறே மாதவா, மால்குணமாறா
ஓதியே கண்ட கீதம் நினைவது ஆகுமாறே
ஓம் அதுவென்றே ஓதி ஆதவா நீ ஆகிய ஜோதி
ராம் பரபிரம்ம ராமா! ரங்கனாய் ராகவ ராமா!
சோதித்த திருவடி ஆகி சோபனாய் ஜோதி பாதம்
வேதமே பரந்த ஜோதி வேய்ந்தாய்ந்த பரிபாதயோகம்!
என்று ஓதி அமாவாசைத் திதித் தர்ப்பணம் அளிப்பதும், நாள் முழுதும் இத்துதியை ஓதியவாறு நாராயண நினைவில் இருத்தி நிற்றலும் நன்று.
மாளய அமாவாசை அன்று எத்தனை பெருமாள் ஆலயங்களில் அன்னதானம்தனை நிகழ்த்துகின் றீர் களோ அந்த அளவிற்கு, பித்ருக்களின் ஆசியால் குடும்பத்தில் அமைதி பூரிப்பதை நீங்களே கண்டிடலாம்.
மாளய அமாவாசையுடன் வைதிருதி சேர்ந்து வருவது மஹா வைதிருதி யோக நாளாகும். 1000 மடங்கு வைதிருதித் தர்ப்பண நாள் பலன்களை அளிக்க வல்லதாம்.
பொதுவாக, பித்ருக்கள், காக்கை வடிவில் வருவர். அல்லது பித்ரு லோகம் சென்று வந்த காக்கை வீட்டிற்கு வந்து குரல் கொடுத்து, பித்ரு சக்திகளை சப்த வடிவில் அளிக்கும். தினமும் காக்கைக்கு உணவிடுவது கரி தோஷங்களைப் போக்க உதவும்.
தான் எவ்விதத் தவறும் செய்யாத போது, பலரும் வீண் பழி, ஏசுதலுக்கு ஆளாவதுடன், பலத்த மானப் பிரச்னை, பெரும் நஷ்டத்திற்கும் ஆளாவதும் உண்டு. இவை எல்லாம் கரி தோஷங்களில் அடங்கும்.
தனக்கு உதவி செய்த வரை நன்றி மறந்திடினும் பலத்த கரிதோஷமாக வந்து விடும். இதற்குப் பிராயச்சித்தம் தர வல்லவை 96 நாட்களில் ஆற்றப் பெறும் ஷண்ணாவதி வகைத் தர்ப்பண சக்திகளே!
தான் செய்யாத தவறுக்காகத் தணடிக்கப்படுகின் றேனே என்று புலம்புவோர், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். எத்தனை முறை தான் செய்த தவறுக்காகத் தண்டிக்கப்படாது தப்பித்தோம், தனக்காகப் பிறர் தண்டனைக்கு ஆளானார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். செய்த தவறுகளை மனதார உணருவதும் தக்க பரிகாரத்தைப் பெற உதவும்.
கரிநாள், வைதிருதி யோகம், மாளய அமாவாசை மூன்றும் சேர்ந்து வருவது பிஞ்சாலத் தர்ப்பணம் ஆகும்.
இந்நாளில் எந்த மூதாதையர் மேலுலகில் நன்னி லை பெற வேண்டும் என எண்ணுகின்றீர்களோ, அவருக்காக விசேஷமாக 24 முறை எள்ளும், நீரும் கூடிய விசேஷத் தர்ப்பணம் அளித்திட, பிஞ்சாலத் தர்ப்பண சக்தியால், அவருடைய சாயைச் சரீரம் எங்கிருந்தாலும் சரி, எங்கோ பிறந்து எங்கு வாழ்ந்தாலும் சரி, பிறப்பில்லாது ஏதேனும் சாயைச் சரீரத்தில் அவதியுற்றாலும் சரி, இத்தகைய பிஞ்சாலத் தர்ப்பண பலன் நிச்சயமாக அவரைச் சென்றடையும். வண்ணம் வைதேஹி லோகப் பித்ருக்கள் உதவுகின்றனர்.
கரிநாள், வைதிருதி யோகம், மாளய அமாவாசை மூன்றும் சேர்ந்து வந்த பிஞ்சாலத் தர்ப்பண நேரத்தில் பிறந்த குழந்தையின் குடும்பத்தினர் மனம் குளிரும்படி, இன்றோ அல்லது அடுத்த பட்சமான நவராத்திரிக்குள்ளோ அன்னம், உடை, தானியங்கள், மளிகைச் சாமான்கள் அளித்தலா னது, கரிதோஷ நிவர்த்திக்கு மிகவும் உதவிடும். இதனால் உண்மையை மறைத்ததால் வரும் வல்வினைகள் தீரவும், பிறருடைய பெருந் தவறாமல் தானும் அதர்மமாக சிக்கி அவதியுறுகின்ற தீவினைகளும் அகல தக்க நல்வழியைக் காட்டும்.
சொற் பொருளுக்கு அப்பாற்பட்ட மகத்துவம் வாய்ந்ததே இன்றைய பிஞ்சாலத் தர்ப்பணம் ஆகும். தான் செய்யாத தவறுக்காக வாட்டப்படுகின்றோம் என்று எண்ணுவோர், சனித் தீர்த்தம், சனி மூர்த்தி வழிபட்ட தலங்கள், நெல்லி, நெய்க் கொட்டா மரம், சந்தன மரம் தல விருட்சமாக உள்ள தலங்கள், இறை மூர்த்திக்கு முன் சாளரம் உள்ள ஆலயத் தீர்த்தம் இவற்றில் ஷண்ணாவதித் தர்ப்பண சங்கல்பத்துடன் தர்ப்பணம் அளிப்பதுடன், கரி தோஷ நீக்கப் படலமாக, கறுப்பு நிறக் கிஸ்முஸ் (சிறு உலர் திராட்சை) கலந்த சாம்பார் சாதப் பொட்டலங்களை களிப்பாக்கு வைத்த தாம்பூலத்துடன் தானமாக அளித்திட வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...