Monday, October 1, 2018

Mr.#பொதுஜனம்.

$ நூற்றைம்பது சவரன் போட்டு மகளுக்கு திருமணம் முடித்தவன் வீட்டில் #கலைஞர் TV ஓடுகிறது.
$ ஊருக்குள் 30 வீடுகள் வாடகைக்கு விட்டவன் #பசுமை வீடு மானியத்தில் வீடு கட்டிக்கொண்டான்.
$ இரண்டு மகன்கள் #அமெரிக்காவில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் முதியோர் பணம் 1000 பெறுகிறார்கள்.
$காரில் சென்று இலவச சேலை பெறுகிறார் ஒரு பெண்.
IT கம்பனில் #லட்சத்தில் சம்பளம், ஆனால் ஜாதி படி ரேஷன்கார்டு படி #தாலிக்கு தங்கம் பெறுகிறார் இன்னொருவர்.
$ 5000 சதுர அடியில் நீச்சல் குளத்துடன் வீடு. ஆனால் #வீட்டுவரிரூ350. அதாவது 20 வருடத்திற்கு முன்இருந்த பழையவீட்டின் வரியே தொடர்கிறது அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து.
$ இது போக #ரேசன் பொருளை வசதியானவர்கள் வாங்கி, ஏழைகளுக்கு விற்பது.
#மானிய சிலின்டர்களை கார் பார்டிகளுக்கு விற்பது.
பைனான்ஸ்+சீட்கள் நடத்தி கோடியில் விளையாடும் ஒருவர் #Income #Tax என்றால் என்ன? என்கிறார்.
$ ஷென்சஸ் எடுக்கப்போனோம்.
#மாதவருமானம் 4000,5000 என்றுதான் அத்தனை குடும்பமும் கூசாமல் பொய் சொல்கிறது. அப்பத்தான் சலுகைகள் கிடைக்குமாம்.
$ இதெல்லாமே என் #தெருவில் நடக்கும் உதாரணங்கள்.
கடைசியாக 4 கட்சியிடமும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுகிறார் Mr.#பொதுஜனம்.
1) #முறையாக வரி செலுத்தும், சலுகைக்காக பொய் பேசாத மக்கள்.
2) #ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் அரசியல் வாதி.
3) #லஞ்சம் வாங்காது கடமையை செவ்வனே செய்யும் அரசு ஊழியன்.
நாடு உருப்பட இந்த #மூவரும் வேண்டும்.
யார் முதலில் #திருந்துவது.
எப்படி #திருத்துவது.
சட்டதின் வழியா??சர்வாதிகாரமா?? கல்வியா??
ஆன்மீகமா??எதைக்கொண்டு எதைத் #திருத்துவது????
எனவே நீங்கள் விடை சொல்லுங்கள்.
நாடும் மக்களும் ந.........ல்லா இருக்கட்டும்.....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...