ஒரு மனிதன் வேறு உணவு வகைகளையன்றி முழுவதுமாக பழ வகைகளை மட்டுமே உண்டு வந்தால் போதிய சத்துக்கள் கிடைக்குமா?
அவ்வாறெனில் எந்தெந்த பழ வகைகளை எந்த நேரம் எந்தெந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?
பழங்களை மட்டும் சாப்பிட்டு உயிர் வாழலாம் என்பது சித்தர்கள் கண்ட உண்மை. நார்ச்சத்து, வைட்டமின், தாதுபொருட்கள், இனிப்பு ஆகியவை பழங்களில் அடங்கியுள்ளன.
பழங்களில் காணப்படும் பெரிய சிறப்புத் தன்மை என்னவென்றால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடலின் எடையை கூட்டாமல் இருக்கும்.. .பழங்களில் கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. கார்போ-ஹைட்ரேட் , சிறிது புரோட்டின் ஆகியவை காணப்பட்டாலும் , உடல் எடையை அதிகமாக்கி விடாது.
பழத்தை நறுக்கி சாப்பிடுவதைவிட கடித்து சாப்பிடுவது நல்லது. நறுக்கி சாப்பிடும்போது வைட்டமின் ‘சி’ மற்றும் ‘ஏ’ சத்துக்கள் குறைந்து விடுகின்றன.
நறுக்கிய பழத்தை பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடுவதால் பழங்களின் சத்தைக் குறைத்து விடுகின்றன.
நறுக்கிய பழத்தை பிரிஜ்ஜில் வைத்து சாப்பிடுவதால் பழங்களின் சத்தைக் குறைத்து விடுகின்றன.
காலை 6 மணி முதல் 9 மணி வரை சாத்துக்குடியில் செய்த பழச்சாற்றை சாப்பிடலாம்.9 மணி முதல் 12 மணி வரை ஆரஞ்சு, பப்பாளி , பேரிக்காய் போன்றவை சாப்பிடலாம்.மாலை நேரங்களில் மாம்பழம்,மாதுளம் பழம் ,செர்ரி, திராட்சை , தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடலாம்.
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.
இதனால், உடலுக்கு புத்துணர்ச்சியும், தெம்பும் கிடைக்கும். சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் ஜீரணமாகும். உணவுகள் செரிக்க
கூடுதல் நேரமாகும்.
கூடுதல் நேரமாகும்.
உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.
அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவதுதான் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
பழங்களை தனியாக சாப்பிடாமல், அதனுடன் இனிப்பு சேர்த்து மிக்சியில் போட்டு அடித்து ஜூஸாக சாப்பிடும் வழக்கம் பலரிடம் உள்ளது. இது தவறு.
பழங்களை ஜூஸாக சாப்பிடுவதைவிட பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.
அவ்வாறு சாப்பிடுவதால் நார்ச்சத்து நிறைய கிடைக்கும். சத்தும் முழுமையாக கிடைக்கும்.
No comments:
Post a Comment