Friday, January 17, 2020

கால் பிடித்து காலம் கடத்தியவர்: ரஜினியுடன் மீண்டும் உதயநிதி மோதல்.

'கால் நூற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்திய காரியக்காரர்' என நடிகர் ரஜினியை தி.மு.க. இளைஞரணி செயலர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார். இது ரஜினி ரசிகர்களை கொதிப்பில் தள்ளியுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினி பங்கேற்று பேசினார். அப்போது 'முரசொலி பத்திரிகையை ஒருவர் வைத்திருந்தால் அவரை தி.மு.க.,காரர் என்பர். ஆனால் துக்ளக் இதழை வைத்திருப்பவரை அறிவாளி என்பர். காலம் கெட்டு போச்சு அரசியல் கெட்டு போச்சு சமுதாயமும் ரொம்ப கெட்டுப் போச்சு' எனக் கூறியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சை விமர்சித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் மகனும் கட்சியின் இளைஞரணி செயலருமான உதயநிதி டுவிட்டரில் சில கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

கால் பிடித்து காலம் கடத்தியவர்:  ரஜினியுடன் மீண்டும் உதயநிதி மோதல்

அதில் உள்ள கருத்துகள் ரஜினியின் சினிமா மற்றும் அரசியல் வாழ்வை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு ரஜினி ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உதயநிதியின் 'டுவிட்டர்' பதிவு'முதல்வர்னா முத்தமிழ் அறிஞர், தலைவர்னா புரட்சித்தலைவர், தைரியலெட்சுமின்னா அம்மா' என்று -கால் நுாற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்தி 'தலை சுத்திருச்சு' என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில் முரசொலியை கையிலேந்தி பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே தி.மு.க.காரன். நான் தி.மு.க. காரன்; பொங்கல் வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தி.மு.க. நடத்திய குடியுரிமை சட்ட திருத்த எதிர்ப்பு பேரணியின் போது 'வயதானவர்களை வீட்டிலேயே விட்டு வருமாறு ரஜினியை மறைமுகமாக உதயநிதி விமர்சனம் செய்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினியுடன் மோதலை ஆரம்பித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...