இலங்கை பார்லிமென்ட் ஆயுள் காலம், இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிரடியாக கலைத்தார், அதிபர் கோத்தபய ராஜபக்சே. ஏப்., 25ல், பொதுத் தேர்தல் நடக்கிறது.
இலங்கையில், கடந்த நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடந்தது. முன்னாள் ராணுவ அமைச்சரான கோத்தபய ராஜபக்சே, அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே, தனது பதவியை ராஜினாமா செய்தார்.கோத்தபயாவின் மூத்த சகோதரரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே, கடந்த டிசம்பரில் இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். 225 உறுப்பினர்கள் கொண்ட பார்லியில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என, ராஜபக்சே சகோதரர்கள் உறுதியாக இருப்பதால், பார்லியை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த திட்டமிட்டனர்.
கடந்த தேர்தலில் ரணில் வெற்றி பெற்றபோது, அதிபருக்குரிய பல அதிகாரங்களை பார்லிமென்ட் ரத்து செய்தது. இழந்த அதிகாரங்களை, அதே பார்லி வழியாக மீட்டெடுக்கவே, இன்னும் ஆறு மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், பார்லியை கலைத்து தேர்தலுக்கு உத்தரவிட்டுள்ளார், கோத்தபய ராஜபக்சே. இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, நான்கரை ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்தால் மட்டுமே, பார்லியை கலைக்க முடியும். நேற்று முன்தினம்(மார்ச் 2) இரவு நான்கரை ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், பார்லியை கலைத்து கோத்தபய உத்தரவிட்டார்.
ஏப்., 25ல் பொதுத் தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷனும் அதிரடியாக அறிவித்துள்ளது.புதிய பார்லிமென்ட் முதல் கூட்டம், மே 14ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12 முதல், வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. மொத்தமுள்ள, 2.2 கோடி மக்களில், 1.62 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

மகிந்தா மீண்டும் போட்டி:
இலங்கையில் இருமுறை அதிபராகவும், மூன்று முறை பிரதமராகவும் இருந்த மகிந்த ராஜபக்சே, இலங்கை பொதுஜன பெரமுனா (மக்கள் முன்னணி) சார்பில், மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். ராஜபக்சே குடும்பத்திடம் ஆட்சி அதிகாரம் இருப்பதால், அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் மைத்ரிபால சிரிசேனாவும், ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்து, அந்த கூட்டணியில் இணைந்துள்ளார். 'எங்களுக்கு வெற்றி பொருட்டல்ல; பார்லியில் அறுதிப்பெரும்பான்மை தான் முக்கியம்' என, ராஜபக்சே சகோதரர்கள் கூறுகின்றனர்.
ஆனால், 'ராஜபக்சே கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்றால், ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரே குடும்பத்துக்கு சென்றுவிடும்' என, எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன.எதிர்க்கட்சி தரப்பில் பிரதமர் பதவிக்கு வலுவான வேட்பாளர்கள் இல்லை. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை (ஐக்கிய தேசிய கட்சி) உட்கட்சி பூசல் காரணமாக, பிரதமர் பதவிக்கு முன்னிறுத்துவதில் சிக்கல் உள்ளது.
No comments:
Post a Comment