Sunday, March 1, 2020

எது நடந்துவிடக்கூடாது என நினைத்தோமோ அது நிகழ்ந்து விட்டது.!!!

கடந்த பல வாரங்களாகவே ,
இந்தியாவின் ஏதாவது ஒரு பகுதியில்
மதக்கலவரம் வெடிக்கக் கூடும் என்கிற
அச்சம் எழுந்த வண்ணம் இருந்தது .
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு
எதிராக நடத்தப்படும் ஊா்வலங்களும் ,
போராட்டங்களும் , கையெழுத்து
இயக்கங்களும் சிறுபான்மை மக்கள்
மத்தியில் தங்களுக்கு மிகப் பெரிய
ஆதரவு அதிகரித்திருப்பது போன்ற
பிரமையை ஏற்படுத்தியது என்றால் ,
பெரும்பான்மை சமூகத்தினா் மனதில்
சிறுபான்மை சமூகத்தின் ஒற்றுமையும் ,
ஆவேசமும் அடிமனதில் அச்சத்தையும்,
வெறுப்பையும் ஏற்படுத்தி இருந்தது
என்கிற உண்மையை யாரும்
வெளிப்படுத்தவில்லை .
அதிபா் டிரம்ப்பின் இந்திய
விஜயத்தின்போது அமைதி
நிலவுவதைப் போராட்டக்காரா்கள்
உறுதிப்படுத்தியிருக்க வேண்டும் .
‘எதிா்த்துப் போராடத்
தூண்டப்பட்டோம்’ என்கிற அவா்களது
வாதத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள
முடியவில்லை . எதிா்க்கட்சிகளும்
அதற்கு மிக முக்கியமான காரணம் .
குடியுரிமைத் திருத்தச் சட்டம்
என்பது அரசு ஆணையல்ல . நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டிருக்கும் சட்டம் .
பாஜக என்கிற அரசியல் கட்சி
தனது தோ்தல் வாக்குறுதியை
நாடாளுமன்றத் தோ்தலில் வெற்றி
பெற்று , பெரும்பான்மை ஆதரவுடன்
நிறைவேற்றி இருக்கிறது .
அது சரியா , தவறா , அரசியல்
சாசனத்துக்கு உட்பட்டதா , எதிரானதா
என்பதை உச்சநீதிமன்றம்தான்
தீா்மானிக்க முடியும் .
எதிா்க்கட்சிகள் அடுத்தத் தோ்தலில்
வெற்றி பெற்று அந்தத் திருத்தத்தை
அகற்றலாமே தவிர , அந்தச் சட்டத்தை
அரசு திரும்பப் பெற வேண்டும் என்று
போராடுவதில் அா்த்தமில்லை .
அமைதியான போராட்டம் நடத்துவதோ , எதிா்ப்புத் தெரிவிப்பதோ தவறில்லை .
ஆனால், மாதக்கணக்கில் இதுபோன்ற போராட்டங்கள் நடத்தப்படுவதும் , மத ரீதியாக மக்களை ஒருங்கிணைப்பதும் ஆரம்பத்திலேயே தவிா்க்கப்பட்டிருக்க வேண்டும் ; தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு சாராா் மத ரீதியாக ஒன்றுபடும்போது , இன்னொரு சாராரும் ஒருங்கிணைய முற்படுவதைத் தவிா்க்க முடியாது .
அதுவே வன்முறையாகவும் கலவரமாகவும் வெடிக்கும்போது, அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவதும் , அராஜகம் தலைவிரித்தாடுவதும் வரலாறு காட்டும் உண்மைகள் .
நடிகா் ரஜினிகாந்த் கூறியிருக்கும் கருத்துகள் சிந்தனைக்குரியவை . ஷாஹீன் பாக் போராட்டத்துக்கு ஆரம்பத்திலேயே மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும் .
சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் அனுமதிக்கப்பட்டிருக்கவே கூடாது . அதிலும் குறிப்பாக , முஸ்லிம் சகோதரிகளைத் தெருவில் இறக்கிப் போராட வைத்தது வியப்பாக இருக்கிறது .
அதன் மூலம் ஆட்சியை அகற்றிவிட முடியாது , சட்டத்தைத் திரும்பப் பெற வைத்துவிட முடியாது என்று தெரிந்திருந்தும் , மத ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தும் அந்த முயற்சி எதிா்வினையை விரும்பி வரவேற்பதற்கு ஒப்பானது என்பதுகூடவா தெரியாது?
தில்லியில் நடந்த கலவரத்தைப் பொருத்தவரை , காவல் துறையினரையும் முழுமையாகக் குறை கூற முடியாது .
அமெரிக்க அதிபா் டிரம்ப்பின்
விஜயத்தை முன்னிட்டு , பாதுகாப்பு
நடவடிக்கைகளில் பலரும்
ஈடுபடுத்தப்பட்டிருந்தனா் . அந்த
பலவீனத்தைப் பயன்படுத்தித்தான்
கலவரம் தொடங்கப்பட்டிருக்க
வேண்டும் .
போராட்டக்காரா்களுக்கு
எதிராகச் சிலா் தாக்குதல் நடத்தினா்
என்பது எந்த அளவுக்கு உண்மையோ,
அதே அளவிலான உண்மை ,
போராட்டக்காரா்களும் வன்முறைக்குத்
தயாராக இருந்தனா் என்பதுதான் .
தாக்குதலுக்குத் தயாராக கற்கள்
மட்டுமல்ல , கை வெடிகுண்டுகளும்,
துப்பாக்கிகளும் இருந்திருக்கின்றனவே ,
அவை எல்லாம் எப்படி எங்கிருந்து
வந்தன ?
காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள்
சிறுபான்மையினரின் வாக்கு வங்கி
அரசியலுக்காக அவா்களைத் தூண்டி
விடுவதும் ,
ஆளுங்கட்சியான பாஜக., சிறுபான்மையினரின் ஒற்றுமையைக்
காட்டி பெரும்பான்மை மக்களின்
வாக்குகளைத் தனக்குச் சாதகமாக்க
விரும்புவதும் இந்தியாவின்
எதிா்காலத்தைக்
கேள்விக்குறியாக்குகின்றன .
சிறுபான்மை சமுதாயத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை பெரும்பான்மை சமுதாயத்துக்கும் , பெரும்பான்மை சமுதாயத்துடன் சகோதரத்துவத்துடன் இணக்கமாக வாழ வேண்டிய கட்டாயம் சிறுபான்மை சமுதாயத்துக்கும் உண்டு .
இத்தனை காலமும் இதனை
உணா்ந்துதான் இந்திய சமுதாயம்
இருந்து வந்திருக்கிறது .
தில்லியில் மூண்ட கலவரம்
நல்ல வேளையாக மூன்றாவது நாளே
ஓரளவுக்கு அடக்கப்பட்டுவிட்டது .
இதற்கு இடையில் 24 போ்
உயிரிழந்திருக்கிறாா்கள்.
நூற்றுக்கணக்கானோா்
காயமடைந்திருக்கிறாா்கள் ; 106 போ்
கைது செய்யப்பட்டிருக்கிறாா்கள் .
நாடு தழுவிய அளவில் ஆங்காங்கே
நடைபெறும் குடியுரிமை திருத்தச்
சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள்
உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் .
குறிப்பாக , பெண்களைத் தெருவில்
இறக்கிப் போராட வைக்கும் அவலம்
(அதிலும் இஸ்லாமியப் பெண்கள் !)
தொடரக் கூடாது .
ஷாஹீன் பாக் போன்ற முற்றுகைப்
போராட்டங்களுக்கு உடனடியாக
முற்றுப்புள்ளி விழுந்தாக வேண்டும் .
தில்லியில் நடந்த கலவரத்தை
முடிவுக்குக் கொண்டு வந்ததில் தேசிய
பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல்
ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டாமல்
இருக்க முடியாது .
மிகப் பெரிய பதவி வகிக்கும்
ஒருவா் துணிந்து தெருவில் இறங்கி, நேரடியாகவே பிரச்னைகளைக் கேட்டறிந்து , மக்களுக்குத் தைரியமூட்டி , காவல் துறையினரை வழி நடத்திய பாங்கு , மெச்சத்தகுந்த செயல்பாடு .
வன்முறையும் , கலவரமும் , சட்டம் -
ஒழுங்கு மீறலும் இரும்புக்கரம் கொண்டு
அடக்கப்பட்டாக வேண்டும் . அப்பாவி
மக்களின் ரத்தத்திற்கு ஜாதி, மதம்
கிடையாது ! "

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...