Monday, June 1, 2020

வராத தேர்தலுக்கு வாரக்கடன் போல் வடக்கத்தியானுக்கு வாரி வழங்கும் கோடிகளை பார்த்து இந்த மேலுகமே சிரிக்கிறது உடன் பிறப்பே.

என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்பே... பார்த்தாயா உடன் பிறப்பே இந்த பார்ப்பனர்கள் காவிகள் பாசிச பாஜக ஆதரவாளர்கள் சூழ்ச்சியை.. ஜீன் 3என்று 3வாரங்களுக்கு முன்பே முகநூலில் என்னை வெச்சு செய்யும் விதண்டாவாதங்களை.. இதையெல்லாம் கண்டு அஞ்சுபவன் அல்ல இந்த அஞ்சுகம் பெற்றெடுத்த அருந்தவம் புதல்வன் என்பதை நீ அறிவாய் உடன் பிறப்பே... இந்த கருணாநிதி ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு ஒப்பற்ற தலைவன் என்பதால் தானே இந்த சதி நடக்கிறது... திருவாரூர் ல் இருந்து 3.50பைசா கொடுத்து முதல் வகுப்பில் பயணம் செய்த வரலாற்றை மறந்து விட்ட சோற்றாலாடித்த பிண்டமாகிபோன தமிழனை என்ன சொல்லி திட்டுவது உடன் பிறப்பே... சிலர் வனவாசம் என்ற ஒரு வரலாற்றை வைத்து கொண்டு பெருமை பீத்திக்கொள்கிறார்கள்... அவர்களை நினைத்து விலாநோக சிரிப்பு தான் வருகிறது...100 க்கும் மேற்பட்ட வனவாச கதாநாயகன் நான் தான் என்பது எனக்கும் உனக்கும் தானே தெரியும் உடன் பிறப்பே எதை சொல்வது? எதை மறைப்பது..?
தம்பி வா தலைமையேற்க வா என்று என்னைத்தான் சொன்னார் அண்ணா என்று அனைவரையும் நம்ப வைத்து நண்பர்MGR ஆதரவோடு முதல்வராகி அவரையே கணக்கு கேட்டார் என்று அவரையே கட்சியில் இருந்து நீக்கியது இந்த கருணாநிதி.. அதுமட்டுமல்ல அவருக்கு ஆதரவாக பேசிய மந்திரக் கோல் மைனர் என்று அன்புடன் நான் வசைபாடிய நாஞ்சில் மனோகரனை இரட்டை இலை சின்னத்தை கையில் பச்சை குத்திய கையோடு கழகத்தில் இணைந்து பெருமை சேர்த்தவன் தானே இந்த ஒப்பற்ற தலைவன் என்பதை உலகம் அறியும்... எனக்கு தெரியும் உடன் பிறப்பே இந்த இந்த சாமர்த்தியம் எனக்கு பிறகு யாருக்கும் வராது என்பதால் தானே நான் உயிருடன் இருக்கும் வரை கழக தலைவர் பதவி உட்பட எதையும் உயில் கூட எழுதி வைக்க வில்லை... இந்த கருணாநிதி நிதி வாங்கி தான் பழக்கமே தவிர கொடுத்து இல்லை என்பதை இனமான பேராசிரியர் என்கூட இப்போதும் இருந்து வரும் அவர் அறிவார்....
எல்லோருக்கும் இதயத்தில் இடம் தருவேனே தவிர வேறு எதுவும் தரமாட்டேன்..இது புரியாமல் கம்யூனிஸ்டுகளுக்கு கொடுத்த 25கோடியை நினைத்து 1வருடமாக நரகத்தில் தூக்கமின்றி துவண்டு வருகிறேன்... இதில் வட இந்திய போலி பார்ப்பனன் பிரசாந்த் கிஷோருக்கு 380கோடி என்ற தகவலை கேட்டு தலையே வெடித்து விடும் போல் இருக்கிறது உடன் பிறப்பே... கழகத்தின் கஜானா வை காலி செய்ய இதுகூட பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன் நீ இருக்கும் மனோநிலையில் தான் நானும் இருக்கிறேன் உடன் பிறப்பே...
வராத தேர்தலுக்கு வாரக்கடன் போல் வடக்கத்தியானுக்கு வாரி வழங்கும் கோடிகளை பார்த்து இந்த மேலுகமே சிரிக்கிறது உடன் பிறப்பே
ஏதோ ஜீன் 3ம்தேதியில் என்னை முகநூலில் வைத்து செய்ய கேலி செய்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் உடன் பிறப்பே...
கற்றது கையளவு....கல்லாதது உலகளவு..
அதேபோல்
இந்த கருணாநிதியின் அருமை பெருமைகளை அறிந்து கொண்டு எழுத நினைப்பதும் ஒன்று தான்....
வீழ்வது நீயாக இருந்தால் வாழ்வது திருக்குவளை முத்துவேலர் குடும்பமாக இருக்கும் என்பதை மனதில் வைத்து கொண்டு செயல் படுவாய் உடன் பிறப்பே...
அன்புடன்.
மு.க..
(நரகத்தில் இருந்து)
கட்டுமரத்தின் கடித போக்குவரத்து அமைச்சர்..
Image may contain: 1 person, sitting and sunglasses

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...