மத்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்காக 10 % இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது....தமிழக அரசு இதுவரை அதை செயல்படுத்த முனையவில்லை....மத்திய அரசு பணிகளில் இந்த 10 % இட ஒதுக்கீட்டை பெற வேண்டுபவர்கள் தங்களின் வருமானம் மற்றும் சொத்து குறித்த சான்றிதழை தங்கள் பகுதி தாசில்தாரிடம் விண்ணப்பித்து பெற வேண்டும்...
ஆனால் தற்போது தமிழக அரசு அனைத்து தாசில்தாருக்கும் இந்த சான்றிதழை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது...
மாநில அரசு வேண்டுமென்றால் 10 % இட ஒதுக்கீட்டு விஷயத்தில் முடிவெடுக்காமல் இருந்திருக்கலாம்....ஆனால் மத்திய அரசு பணிகளில் இந்த இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது...
இதன் பலனை பெறுவதற்க்கு அந்த நபர் வருமான மற்றும் சொத்து சான்றிதழை தாசில்தாரிடம் பெற்று மத்திய அரசின் துறையிடம் சமர்பிக்க வேண்டும்....மாநில அரசின் முடிவின் காரணமாக தற்போது இது சாத்தியமில்லாமல் போகிறது...

மாநில அரசின் இந்த முடிவு பாராளுமன்றத்திற் முடிவையே கேள்விக்குறியாக்கின்றது....

No comments:
Post a Comment