Monday, June 1, 2020

தமிழை விற்று எப்படி அரசியல் பிழைப்பு நடத்தினார் என்பதை காண்போம்.

அனைவருக்கும் அன்பு வணக்கம் கருணாநிதியின் அரசியல் தந்திரங்களில் நாம் அடுத்து காண இருப்பது கருணாநிதி தமிழ்மொழிக்கு செய்த துரோகங்களையும் தமிழை விற்று எப்படி அரசியல் பிழைப்பு நடத்தினார் என்பதை காண்போம்.
1. தமிழர்கள் இன்று தமிழகத்தை தாண்டி எங்கு சென்றாலும் பிழைக்க முடியாது என்ற நிலை ஏற்ப்பட காரணம் தி.மு.க. நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் எனும் தமிழர் எமாற்று போராட்டம்
2. இந்தியை எதிர்த்து போராடிய அத்துனை தி.மு.க. முன்னோடிகளின் வாரிசுகளும் இன்று தமிழகத்தில் இந்தி படித்து நல்ல நிலையில் உள்ளனர் இதற்க்கு 2019 MP தேர்தலில் போட்டியிட்டதன் மகனுக்கு ஓட்டுகேட்ட திரு.துரைமுருகன் என் மகனுக்கு நன்றாக இந்தி தெரியும் அவரை உங்கள் குறைகளை மத்தியில் பேசி தீர்த்து வைக்க நாடாளுமன்றத்திற்க்கு அனுப்புங்கள் என்று வாக்கு சேகரித்ததே உதாரணம்.
3.தமிழகத்தில் இந்தியை எதிர்த்த அதே தி.மு.க.வினர் இன்று பல இந்தி பள்ளிகளை திறந்து கல்லாக் கட்டி வருவதை நாம் எல்லாம் கண்கூடாக காண்கிறோம்.
4. தமிழின தலைவர் தமிழ் இன காவலர் என்று பட்டங்களை பெற்ற கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் ஸ்டாலின், உதயாநிதி, தயாநிதி, சபரீசன், இவற்றில் எது தமிழ் பெயர்?
5. தமிழ்மொழியை வளர்க்க கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகிறது இன்றுவரை அந்த மாநாட்டால் தமிழ்மொழி எப்படி வளர்ந்தது என்ற விளக்கம் உண்டா? அதற்க்காக செலவு செய்த 400 கோடிக்கான கணக்கு விபரங்களை வெளியிட்டிர்களா?
6. செம்மொழி மாநாடு என்று 400 கோடி செலவு செய்து அதன்மூலம் திரு.கருணாநிதி வளர்த்து தன் மகள் கனிமொழியையும் அவர் நடத்திய சங்கமம் குழுவையும் தான் என்பது நாடறிந்த உண்மை.
7. தமிழர் நலன் என்று கூவிய கருணாநிதி முல்லைபெரியாறு காவிரி விவகாரங்களில் தன் குடும்ப தொலைகாட்சிகள் சூர்யா,உதயா போன்றவற்றின் ஒளிபரப்பு பாதிக்கும் என்று வாய்மூடி மவுனம் காத்த தமிழின துரோகி திரு.கருணாநிதி.
8. தமிழின் மீது பற்றும் பாசமும் உள்ள திரு.கருணாநிதி மத்தியில் 18 ஆண்டு அங்கம் வகித்துள்ளார் இன்றுவரை பாராளுமன்றத்தின் விவாதமொழியாக கூட தமிழ் அங்கிகரிக்கப்படவில்லை என்பது தான் மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மை
9. தமிழகத்தில் இருந்து 38 திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த பின்பும் தமிழக நிதி அமைச்சர் கேட்ட ஒருபுறநானூறு பாடல் விளக்கத்திற்க்கு பல்லு மயிரை காட்டும் அளவுக்குதான் இன்றைய தி.மு.க. உறுப்பினர்களின் தமிழ் புலமை உள்ளது.
10. தமிழ் தமிழ் என்று கூவிய திரு.கருணாநிதி 1.5 இலட்சம் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டபொழுது மத்திய அரசுக்கான ஆதரவை ஒரு கடிதம் மூலம் வாபஸ் பெற்றிருந்தால் இன்று 1.5. லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்குமே அதை செய்தாரா திரு.கருணாநிதி.
11. தமிழின தலைவர் என்று கூறுபவரின் மகன் நாளை தமிழ் இனத்தை ஆள துடிக்கும் திரு.ஸ்டாலின் இன்றளவும் துண்டு சீட்டில் எழுதிய தமிழ் வார்த்தைகளை கூட படிக்க தட்டுதடுமாறுவதுதான் திரு.கருணாநிதி வளர்த்த தமிழின் லட்சனமா?
12. இந்தியை ஏற்க்க மாட்டோம் என்று இந்தி பெயர் பலகையை தார்பூசி அளித்த திரு.கருணாநிதியும் அவர்கூட்டமும் 5 முறை தமிழகத்தை ஆண்டோம் என மார்தட்டுபவர்கள் இந்த 5 முறையில் என்றாவது தமிழ்மொழியை காக்க பேரவையில் ஒரு வலுவான சட்டமுன்வடிவை கொண்டுவந்தது உண்டா?
13. மதுரையில் புரட்சி தலைவர் நடத்திய தமிழ்மொழி மாநாட்டையும் தஞ்சையில் புரட்சிதலைவி நடத்திய தமிழ்மொழி மாநாட்டையும் எள்ளிநகையாடிய கருணா கூட்டம் கோவை செம்மொழி மாநாட்டின் பயன் குறித்து விளக்கம் தராதது ஏன்?
14. ஒட்டுமொத்தத்தில் பார்த்தோம் என்றால் தமிழ்மொழிக்கு திரு.கருணாநிதியாலும் அவர்தம் கூட்டத்தாலும் எள் அளவோ எள்முனை அளவோ கூட நன்மைகள் நடைபெறவில்லை மாறாக அவர் கூட்டம் தமிழுக்கும் தமிழர்க்கும் செய்த துரோகங்கள்தான் அதிகம் என்பது மறுக்க முடியாதா மறைக்க முடியாத உண்மை.
15. தமிழ்மொழிக்காக கருணாநிதி செய்த நன்மைகள்மடு அளவு என்றால் அவர் செய்த துரோகங்கள் மலை அளவு என்பதே நிதர்சனமான உண்மை ஆகும்.
16.தி.மு.க.வின் நயவஞ்சகத்தால் இந்தி எதிர்ப்பு போராட்டதில்பல உயிர்கள் பலியானதே அவர்களின் குடும்பத்திற்க்கு தி.மு.க.செய்த கைமாறு என்ன? அவர்களின் வாரிசுகளில் எத்தனை பேர் தி.மு.க.வின் உயர் பொறுப்பில் உள்ளனர்?
17. தமிழை வைத்து பிழைப்பு நடத்திய கட்சிக்கு இன்று அடுத்து ஆட்சிக்கு வருவது எப்படி என ஆலோசனை கூற ஒரு ஹிந்தி காரன் தேவைப்படுகிறான் இவ்வளவுதான் நீங்க தமிழ் வளர்த்த லட்சனம் மயிரு உ.பி.க்களே.
(நன்றி)
தீயசக்தியின் திமைகள் அடுத்தடுத்து.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...