பூஜை அறையில் வைணவர்கள் வீட்டில் என்ன என்ன இருக்க வேண்டும், சைவர்கள் வீட்டில் என்ன என்ன இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு;
பண்டிகைகள் எப்படி எப்படி கொண்டாட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு;
வைணவக் கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தை என்ன செய்யக் கூடாது என்று சொல்லிக் கொண்டு;
ஸ்ரீ முருகன் கிருபானந்த வாரியாரின் மாணவி என்றும் கூறிக் கொண்டு;
ஸ்ரீரங்கம் கோவிலையும் சிதம்பரம் கோவிலையும் வெடி வைத்து தகர்க்கும் நாள்தான் என் வாழ்வின் பொன் நாள் என்று கூறிய ஒரு நாத்திகரை; எப்படி புகழ்ந்து பேசினார் தேச மங்கையர்க்கரசி. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
இந்த அம்மையாரின் பேச்சை கேட்பதற்கென்று ஒரு ஆன்மீக கூட்டம் இருக்கிறது தமிழ்நாட்டில். இனி அந்த கூட்டம் இவர் பேச்சை எப்படி கேட்கும்.
தேச மங்கையர்க்கரசி ஆன்மீகவாதி என்று எப்படி இனி நினைக்க முடியும். ஏற்க முடியும்.
No comments:
Post a Comment