சென்னையின் இந்த நிலைமைக்கு, ஏரிகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது, நீர் வழித்தடங்கள் மறிக்கப்பட்டுள்ளது மட்டுமே காரணங்களா.....????
பொதுமக்களுக்கு அதில் பங்கு இல்லையா? கழிவு நீர் ஓடும் கால்வாயில் குப்பைகளை கொட்டும் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு.இப்படிப்பட்டவர்கள் இனியும் திருந்தாவிட்டால் எந்த கட்சி ஆண்டாலும் இதே நிலைதான்..
ஆளும் கட்சி மக்கள் குப்பை கொட்டுவதை முறைப்படுத்தி ,அதற்கான சட்டம் இயற்றி கடுமையாக நடைமுறைப்படுத்தினால் நம் தண்ணீர் தேங்கும் பிரச்சினை பாதியளவு குறைந்துவிடும்.
மக்களே சிந்தியுங்கள்.தீர்வு நம் கையில். மற்றவர்கள் ,உங்கள் வீட்டருகே கடை வைத்திருப்பவர்கள் யார் குப்பையை கால்வாயில் கொட்டினாலும் தடுத்து நிறுத்துங்கள்.அடுத்தவர்கள் செய்யும் தவறுக்காக நாம ஏன் கஷ்டப்படணும்.
படித்தற்கு நன்றி. 



No comments:
Post a Comment