-------------------------------------------------------------
தெலுங்கானாவில் ஹுசுராபாத் சட்டமன்றத்
தொகுதிக்கான இடைத்தேர்தல். மூன்று கட்சிகள்
போட்டியிட்டன.
1) தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
2) காங்கிரஸ்
3) பாஜக.
பாஜக 11,000 வாக்குகள் அதிகம் பெற்று
வெற்றி பெற்றுள்ளது.
சந்திர சேகர ராவின்
கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தோல்வி அடைந்துள்ளது.
இதை விட்டு விடுங்கள்.
நமக்கு காங்கிரசின் மீதுதான் அக்கறை.
காங்கிரஸ் எவ்வளவு வாக்குகளைப்
பெற்றுள்ளது?
வெறும் 2,133 வாக்குகள் மட்டுமே
காங்கிரஸ் பெற்றுள்ளது. வெறும் 2133.
காங்கிரஸ் என்றாலே,
சாவு, பாடை, பிணம்,
நீர்மாலை, பிண ஊர்வலம், காடாத்து, கல்லடுப்பு,
தாலியறுப்பு, கருமாதி ஆகிய சொற்களே என்றாகி விட்டது.
தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள்
1,36,495. இதில் காங்கிரஸ் பெற்றுள்ள 2,133 வாக்குகள்
என்பது 1.56 சதவீதம் மட்டுமே.
(ஆதாரம்: இந்தியத் தேர்தல் ஆணையம்)
காங்கிரசின் கருமாதியில் பங்கேற்க தெலுங்கானா
செல்கிறேன்.
விரும்புவோர் உடன் வரலாம்.
---------------------------------------------------------------
No comments:
Post a Comment