Friday, November 5, 2021

இவர் சறுக்கியது சறுக்கியதுதான். மெய்யான காரணம் அதுவல்ல என சாமானியனும் அறிவான்.

#Rajini கடந்த சில நாட்களாக அவரது ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களது நாமாவளி தான் அதிகமாகவும் அதிக சப்தத்தோடும் கேட்கப்பட்டது.
அவரது முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, படம் இன்று வந்தால்.. ஏன் ஸ்ரீ ராகவேந்திரர் படமே இன்று வந்தால்.. இது 2021.. நிச்சயமாக விமர்சனத்தில் இருந்த தப்ப போவதில்லை..
படத்தை பார்க்கும் முன்னரே அவரது எதிர்ப்பை சொல்ல ஏது கிடைக்கும் என தான் இறங்குகிறார்கள்..
அவரது 99.9% படங்கள் எதுவுமே விமர்சன பாராட்டு பெற்றதே கிடையாது. ஆனால் அவரது ரசிகர்களுக்கு அவை தான் ஆனந்தம்.. ஆர்ப்பாட்டம்.. திருவிழா.. பண்டிகை..
அவரை வைத்து படம் எடுக்கப்படுவது அவரது ரசிகர்களுக்காக.. அவரது ரசிகர்கள் என்றால் பொதுமக்களின் பெரும்பாலானவர்கள் என தான் அர்த்தம்.
விமர்சிப்பவர்கள் பற்றி கவலைப்பட தேவை இராது. அது தெரிந்த ஒன்று.
இப்போது அது மேலும் சில டைமன்சன் பெற்றுள்ளது.
அவரது அரசியல் முனைப்பும் பின்வாங்கலும் .. அதற்கு மேலே சேர்ந்து கொண்டது. அவ்வளவே
அவரை எதிர்ப்போர் எல்லாம் ஒரு வகையறா அல்ல..
ரஜினி தமிழன் இல்லை. அதனால் எதிர்ப்போம்.. இது போராளீஸ்..
ரஜினி ஆன்மிகம் பரப்புகிறார்.. இது நாத்திக நாதாரீஸ்..
ரஜினி தேசியம் பேசுகிறார். இது திராவிட உண்டக்கட்டீஸ்..
ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து வந்து பாஜகவை வெற்றி பெற செய்யாமல் பயந்து ஓடி விட்டார்.. இது பாஜகவை எவனாவது வந்து வெற்றி தேடி தந்தால் ஆட்சிக்கு வரலாம் என நினைத்த திண்ணை பேச்சு வீர தேசியவாதிகள்.
ரஜினி திமுகவுக்கு சாதகமாக ஒதுங்கிவிட்டார்.. இது திமுகவை சொந்த உழைப்பால் வீழ்த்த இயலாத இயலாமை கூட்டத்து கதறல்..
ரஜினி சுயநலவாதி.. ரஜினி மாறன்களின் சூழ்ச்சிக்கு வீழ்ந்து விட்டார்.. அப்ப கொரொனா அவர் சொன்ன மாதிரியே அதிகம் ஆட்டம் போட்டதே.. அதுக்கு என்ன பதில்..
அதெல்லாம் தெரியாது ரஜினி நம்ப வைத்து ஏமாற்றினார்.. இது ஒரு வகையினர் குற்றச்சாட்டு.
உங்க கட்சிக்கும் கொள்கைக்கும் அவர் என்ன நேர்ந்து விடப்பட்டவரா..
சுருக்கமாக அவர் என்ன செய்தாலும் செய்யாவிட்டாலும். பேசினாலும் பேசாவிட்டாலும்.. எல்லாமே குற்றம் தான்.
தேசியவாதியாக நடிகர் திலகம் சிவாஜியும் ரஜினியும் தான் ஜெய்ஹிந்த் என வீர முழக்கம் செய்து தமிழகத்தில் பேச்சை நிறைவு செய்யும் பழக்கத்தவர்கள் அதனால் இவர்களை ஆதரிக்க எனக்கு எந்த தயக்கம் இல்லை.
நடிகர் அர்ஜுன் ஜெய்ஹிந்த் என படமே எடுத்தார். அதனால் அவரும் பிடிக்கும்.
இவர்களை ஆதரிப்பது தேசியவ்வாத எண்ணம் கொண்ட எவருக்கும் இயல்பு.
இதை எழுதினால் ரஜினியை பரப்பும் இடமாக TRC ஆகி விட கூடாது என சொல்வோர்..ப்எதிர் மறை பரப்புரை செய்தோர்களே.. எனவே அந்த உரிமை இரு சாரருக்கும் உண்டு.
ஓவரா அவரை திட்டி திட்டி.. என்னையும் இப்படி ஒரு பதிவு போட வைத்து விட்டார்கள்..
வந்தே மாதரம் #ஜெய்ஹிந்த் !!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...