குடித்தால்தான் அவருக்கு பாட்டெழுத வரும் என்று கண்ணதாசன் பற்றி ஒரு கருத்து மக்கள் மனதில் தவறான புரிதலால் பதிந்திருந்தது.
இன்று அது உடைபடுகிறது. இன்றைய குமுதம் இதழ் காலடிச் சுவடுகள் கட்டுரைத் தொடரில் கண்ணதாசன் இப்படிச் சொல்கிறார்:
உண்மையில் நான் எழுதிவிட்டும், பேசிவிட்டும்
குடிப்பேனே தவிர, குடித்துவிட்டு எழுதுவதில்லை.
ஒரு திறந்த புத்தகமாக வாழ்ந்தவர் கண்ணதாசன். வனவாசம் படித்தவர்களுக்குத் தெரியும்..அவர் எதையுமே மறைத்ததில்லை. ஆகவே இந்த வாக்குமூலத்தை நாம் முழுமையாக நம்பவேண்டும்.
எனவே படைப்பின் ஆக்கத்தின்போது அவர் குடித்ததில்லை என்பதை வளரும் படைப்பாளிகள் மனதில் பதித்துக்கொள்வது அவசியம்.
கண்ணதாசன் குடித்துவிட்டு எழுதியதால்தான் பாடல்களின் வரிகள் சிறப்பாக வந்தன என்கிற தவறான புரிதலில் சிறப்பாக படைப்பதற்கான ரெசிபி லிஸ்ட்டில் மதுவை எவரும் இனி வைத்துக்கொள்ள வேண்டாம். இழந்தவரைக்கும் போதும்!
குறிப்பு: கண்ணதாசன் அவர்களை அழகான ஓவியமாக வரைந்திருப்பவர் ஓவியர் ஜீவாநந்தன். அவருக்கு என் நன்றி.

No comments:
Post a Comment