பிரதமர் மோடி இத்தாலிக்கு G20 மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற போது நடந்த பல சம்பவங்கள் பாஜகவையும் பிரதமரையும் கதி கலங்க வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் நம்பத்தகுந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
முதலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மோடியை பார்த்து "வெல்கம் PM ஸ்டாலின்" என்று கூறியிருக்கிறார். கூட இருந்த இங்கிலாந்து மற்றும் பிரெஞ்சு அதிபர்களும் அதையே சொல்ல, மோடி சற்று தடுமாறி போயிருக்கிறார். இருந்தாலும் சுதாரித்து கொண்டு, "ஐ ஆம் இந்தியன் ப்ரைம் மினிஸ்டர் மோடி" என்று சொல்ல, அவர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்கிறார்கள்.
அப்புறம் தான் பிரதமருக்கு அனைத்து வல்லரசு நாடுகளுமே இந்தியாவுக்கு ஸ்டாலின் தான் பிரதமர் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது. ஸ்டாலினின் ஆளுமையை எண்ணி ஒரு நிமிடம் அப்படியே மிரண்டு போய் நின்றுள்ளார் மோடி.
அதன் பிறகு மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்து நாட்டு தலைவர்களும், நமக்கு நாமே திட்டத்தில் ஆரம்பித்து ஆவின் நிறுவனத்தில் ஸ்வீட் பாக்ஸ் ஆர்டர் செய்ததது வரை கழக அரசின் சாதனைகள் குறித்து மோடியிடம் சிலாகித்து பேசியிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய பிரதமர் தானும் ஸ்டாலினை பின்பற்றி தனது நாட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் டாலர்கள் வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் அதற்காக ஸ்டாலினுக்கு ஆஸ்தேரிலிய aunty கள் சார்ப்பாக தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் அப்படியே வாயடைத்து நின்றாராம்.
உதய் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி தங்கள் நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டதாக மோடியிடம் உருக்கமாக பேசியிருக்கிறார் கனடா அதிபர்.
இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அஜித் தோவல் செய்வதறியாமல் திகைத்து போனாராம்.
இந்த தகவல்களை உளவுத்துறையிடம் இருந்து அறிந்து கொண்ட அமித் ஷா அப்படியே ஆடிப்போய் விட்டாராம். இனிமேல் ஸ்டாலினை தவிர்த்துவிட்டு இந்தியாவில் யாராலும் அரசியல் செய்ய முடியாது என்றே இந்த நிகழ்வுகள் உணர்த்துவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே 2024 தேர்தலில் ஸ்டாலினை முன்னிறுத்தியே எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக உலக அரசியல் நோக்கர்கள் கருதுவதாக தி வயர் மற்றும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment