உடைத்து வைத்திருந்த உருண்டை வெல்லத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து டீயில் போடும்போது,அதிலிருந்து ஒரு சிறு உருண்டை கைதவறி கீழே விழ...தரையில் விழுந்ததை எடுக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டு,டீ யை குடித்துவிட்டு,எதேச்சையாய் கவனித்தால்,அந்த வெல்ல உருண்டையின்மேல் அவ்வளவு எறும்புகள்..!!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, November 6, 2021
*தேவைக்கேற்று தேடுவோம்*
இனிப்புக்கு எறும்புகள் வருவது இயற்கைதான் என்று எடுத்துக்கொண்டாலும்...
அந்த உருண்டை விழுந்த இடத்தைச் சுற்றிலும்,சுமார் 30 மீட்டர் சுற்றளவுக்கு காலி இடம்.அதுவும் சுத்தமாக துடைக்கப்பட்டது.
இது விழுந்த அடுத்த சில விநாடிகளில் எப்படி அந்த எறும்புகள் எல்லாம்,வெல்லம் இருக்கும் திசையை கண்டறிந்து அதைநோக்கி வந்துவிடுகின்றன என்பது ஆச்சர்யமான ஒன்று..!
யார் அவைகளுக்கு சமிக்ஞை கொடுத்தது..?!!!
*இங்குதான் இயற்கையின் இயக்க ஒழுங்கின் அற்புதத்தை காணமுடிகிறது.*
எறும்பு மட்டுமே உணவை தேடவில்லை...
உணவும் எறும்பை தேடியிருக்கிறது..
தோற்றத்தில் இவற்றுள் ஒன்று உயிராகவும்,
மற்றொன்று பொருளாக இருந்தாலும்,இவையிரண்டுக்குமான மையப்புள்ளி ஒரேத்தன்மையாக இருக்கவேண்டும்
*நீ எதைத் தேடுகிறாயோ,*
*அதுவும் உன்னைத் தேடிக்கொண்டுஇருக்கிறது.*
*என்பது எவ்வளவு பேருண்மை..!!!*
இந்த இடத்தில் நமக்கு நியாயமான ஒரு சந்தேகம் ஏற்படும்...
எறும்பு தேடியது விரைவாக கிடைத்துவிடுகிறது.
நாமும் தேடுகிறோம்,ஆனால் நமக்கு அப்படி கிடைப்பதில்லையே...அல்லது காலதாமதமாகிறதே...?!
*ஒரே வித்தியாசம்தான்...எறும்பு தனது தேவைக்கு தேடுகிறது...*
*நாம் தேவைக்கும்மேல் தேடிக்கொண்டிருக்கிறோம்..!*
*நமக்குத் தேவையானது*
*இருந்தும் நமது முயற்சிகள் மேற்கொண்டு தேடுவதிலேயே இருப்பதால்,*
*தேவைக்கு நம்மிடம் உள்ள இருப்பு,நம் கவனத்திற்கு வருவதில்லை...!*
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment