Saturday, November 13, 2021

சவுதியில் நடக்கிற மாதிரி தண்டனை பெரியதாக கொடுக்க வேண்டும்.

 இந்த பாலியல் சில்மிஷம் பண்றவங்க வேற கிரகத்தில் இருந்து வர்றவங்களா ?அவங்க நம்ம கூடவே இருக்கிறவங்க தானே..

பஸ்ல பயணிக்கும் போது இடி வாங்காத லேடீஸ் உண்டா...இடி வாங்காத வரணும் னா கார் ல போக வேண்டிய தானே என்று சொல்லாத குற்ற உணர்வு உள்ள இடிக்கும் ஆண்கள் உண்டா?
ஏன் இன்பாக்ஸ் பாலியல் தொல்லைகள் பற்றி புலம்பாத பதிவு போடாத ஃபேஸ்புக் பெண்கள் எத்தனை பேர்?
ஏன் சில ஆண்கள் இப்படி இருக்கிறார்கள் என்று கேட்டால் ஆண்களால் பெண்களை பார்த்ததும் உணர்ச்சிகளை அடக்க முடியாது..அது டிசைனில் இருக்கு என்று ஆண் பெருமை பேசுபவர்கள் இங்கே தான் இருக்கிறார்கள்..
எவ்வளவு போதையிலும் சொந்த வீட்டில் தாய் யார் மகள் யார் மனைவி யார் என்பது தெரிந்த ஒரு ஆணுக்கு.. தன் குடும்ப பெண்களை பாதுகாக்க தெரிந்த ஆணுக்கு ஏன் பிற வீட்டு பெண்களும் அப்படி தான் என்பது தெரியவில்லை?
எப்படி தன் மகள் வயது குழந்தையிடம் பாலியல் சில்மிஷம் செய்ய மனம் துணிகிறது? எதையும் டோண்ட் கேர் டேக் இட் ஈசி மனநிலை உள்ளவர்களா...
பாலியல் சில்மிஷம் செய்பவர்கள் தப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையை தருபவர்கள் செய்தவனை விட எச்சை பிறவிகள்...
மறுபடியும் மறுபடியும் பாதிக்கப்பட்டவர் உயிரை போக்கி தான் நீதி யே கேட்க வைக்கிறார்கள்.... எல்லா விசயத்துக்கும்....
ஈன சந்தோஷத்துக்காக....சே.... யாரோ பெற்ற பிள்ளை என்று பேசாமல் போக முடியாமல்......வலிக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...