Sunday, September 4, 2022

இலவசம் விவகாரத்தில் தமிழக அரசுக்கு நாம் தமிழர் சீமான் கேள்வி?

 மக்களின் வரிப்பணத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்துவிட்டு எதற்கு இலவசம் என்று ஏமாற்ற வேண்டும்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டைக் கடந்தும், தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்கத்தொகையை நிதிநிலை சரியானவுடன் வழங்குவோம் என்கிறார் முதல்வர்.
அப்படியென்றால், கலால் வரி, சொத்துவரி என்று பலமடங்கு வரிச்சுமையை மக்கள் தலையில் சுமத்தி, அதன் மூலம் அரசின் வருமானம் பெருகிவிட்டது என்று நிதியமைச்சர் கூறுவது பொய்யா? அல்லது இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியில் அபார வளர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்று கூறுவது பொய்யா?
பல மடங்கு வரியை உயர்த்தியும், மதுவிற்பனையை இருமடங்கு அதிகரித்தும் நிதிநிலைமை சரியாகவில்லை என்றால், அத்தனை மோசமான நிதிநிலைமையை வைத்துக்கொண்டு எதற்கு இலவசம் கொடுக்க வேண்டும்? இலவசம் என்பது மறைமுகமான அடித்தட்டு மக்களின் வரிப்பணம்தானே? அவர்களின் பணத்தை எடுத்து அவர்களுக்கே கொடுத்துவிட்டு எதற்கு இலவசம் என்று ஏமாற்ற வேண்டும்?
May be an image of 1 person, sitting and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...