கடந்த ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
உத்தரவு
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 'இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தரப்பில், ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இன்றி, பொதுக்குழுவை கூட்ட முடியாது' என உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், 'தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்த இயலாது; அரசியல் கட்சியின் உள் விவகாரங்களில், நேரடியாக தலையிடுவதாக உள்ளது. 'கட்சி செயல்பாடுகளில் மட்டுமின்றி, பெரும்பான்மையினரின் விருப்பத்திலும் இந்த உத்தரவு குறுக்கிடுகிறது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்; விசாரணை முடியும் வரை, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
பழனிசாமி தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், அரிமா சுந்தரம், சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதாடினர்.
பன்னீர்செல்வம் தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன்; வைரமுத்து சார்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆகியோர் வாதாடினர்.
தள்ளி வைப்பு
ஒரே நாளில் மேல்முறையீட்டு வழக்கில், மூத்த வழக்கறிஞர்களின் வாதம், 2022 ஆகஸ்ட் 25ல் முடிந்தது. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளி
வைத்திருந்தனர். மேல்முறையீட்டு வழக்கில் இன்று காலை, நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, தீர்ப்பு அளிக்கிறது.
No comments:
Post a Comment