வரலாற்றைத் திரிப்பதில் வல்லுனர்கள் தீராவிடக் கும்பலை விட்டால் வேறு ஆளே கிடையாது...
சென்னை தமிழகத்தோடு இணைந்திருக்கக் காரணம் கருணாநிதியாம்.
அடப்பாவிகளா...
பொட்டி ஸ்ரீராமுலு ஆந்திரமாநிலம் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தது 15.12.1952 ல்...
அதையடுத்து ஆந்திர பகுதிகளில் கலவரம் வெடித்தது...
ஆந்திர மாநில பிரிவினைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது..
" மதறாஸ் மனதே " என்ற கோஷத்தோடு சென்னையை ஆந்திரத்துடன் இணைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது..
அப்போது தமிழக முதல்வராக இருந்தவர் ராஜாஜி... ஆந்திர லாபிக்கு பயந்துகொண்டு சென்னையை ஆந்திரத்துடன் இணைக்க நேரு அழுத்தம் கொடுத்தார்...
ராஜாஜியும் காமராஜும் சென்னையை விட்டுக்கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தார்கள்.... அதிலும் ராஜாஜி நேருவின் போன்காலைக்கூட எடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்... அத்தோடு நேருவின் அபிமானத்தையும் இழந்தார்...
பின்னர் தெலுங்கு லாபி திருத்தணியைக் கேட்டது... ம.பொ.சி திருப்பதியை தமிழகத்திடன் இணைக்க வேண்டும் என்று போராடத் தொடங்கிய பின்னரே ஆந்திரம் திருத்தணியை விட்டுக்கொடுத்தது...
ஆந்திரப்பிரிவினையின் போது முதல்வராக இருந்தவர் ராஜாஜி... பின்னர் கர்நாடகம் , கேரளம் போன்ற மாநிலங்கள் பிரிந்தபோது முதல்வராக இருந்தவர் காமராஜ்... தமிழகத்தின் இன்றைய எல்லையை நிர்ணயித்தவர்கள் இந்த இருவரே....கழகங்களுக்கு இதில் எந்தப்பங்கும் கிடையாது...
சொல்லப்போனால் அப்போது திமுக என்ற கட்சிக்கு தமிழகத்தில் எந்த முக்கியத்துவமும் கிடையாது... இன்னும் சொல்லப்போனால் அப்போது கருணாநிதி சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்...
வெல்லத்தை காங்கிரஸ் காய்ச்ச , விரல் சூப்பியதுதான் கழகங்களின் சாதனை....
வெட்கமே இல்லாமல் அடுத்தவன் பிள்ளைக்கு தன் இனிஷியல் போட்டுக்கொள்ளும் இந்த தீராவிட கும்பல்...
No comments:
Post a Comment