ஒருவர் தன்னை புத்திசாலியாகக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
பணமோ., பதவியோ .,
அதிகாரமோ.,
விருப்பமான ஏதோ ஒன்று ..
இதன் எல்லைதான் என்ன.?
எதை அடைய விருப்பம்.?
எதை நோக்கிய பயணம்.? நிறைவு எவ்விடத்தில் ?
கொஞ்சம் யோசிக்கலாம் …
உணர்ந்து பாருங்க. ,உள்ளுக்குள் பாருங்க, உற்றுப் கேளுங்க..
இதயத்தின் பக்கத்தில் காதுகள் இரண்டும் இருக்கட்டும் …
நன்றாகக் கேட்கிறதா ..?
இன்னும் கொஞ்சம் விரிவடைய வேண்டும்,
இதுதானே உங்கள் விருப்பம்.. எனது விருப்பம்,
எல்லோர் விருப்பமும் ….
நம் வாழ்க்கை.. நம் அனுபவம்…
பயணத்தின் நிறைவு எவ்விடத்தில் ..?
பார்க்கலாம் ..
ரெண்டு பேருமே தகுதியானவங்க , வசதியானவங்க,நேர்மையானவங்க , நினைச்சதை செயல்படுத்தி சாதித்துக் காட்டுபவர்கள் …
வளர்ச்சி குறைவான விருதுநகர் மாவட்டம், (1954-1963)
சுட்டெரித்தது வெயில் மட்டுமல்ல,..
வறுமை, வேலையின்மை ..
பொசுங்கியது பூமி மட்டுமல்ல ..
வயிறு, வாழ்க்கை ..
கருகியது பயிர் மட்டுமல்ல,..
கல்வி,கனவு ..
குறைந்தது குடிநீர் மட்டுமல்ல..
விவசாயம் ,வேலை ..
கூடியது கடன் மட்டுமல்ல.."
குற்றம், குறை ..
தீர்வுக்கான சாவி … ? எங்க இருக்கு யார்கிட்ட இருக்கு.?, தெரிஞ்சது யாரு .?திறந்தது யாரு.? ,…அந்த மேதை யாரு..?
படிங்க ..
ஒருத்தரு,
நகரத்துக்குப் பக்கத்திலேயே சொந்த இடம் எண்பது ஏக்கர், பள்ளிக்கூடம் , சாலை மின்சாரம் ,போக்குவரத்து, தண்ணீர் … குறைந்தது 200 பேருக்கு வேலைவாய்ப்பு ..
இன்னொருத்தரு,
சாலை , மின்சாரம் போக்குவரத்து, தண்ணீர் பள்ளிக்கூடம் எந்த வசதியும் இல்லை.
பட்டிக்காடு கூடப் பக்கத்தில் இல்லாத பொட்டக் காடு முப்பத்தி எட்டு ஏக்கர்.
ஐயா,
புதுசாத் தொழில் தொடங்கனும் ,
பஞ்சாலை( ginning factory) வைக்க அனுமதிவேணும் .
அரசாங்கத்தின் அனுமதி,அதிகாரிகள் ஒத்துழைப்பு நடைமுறைகள் அத்தனையும் செஞ்சு தரணும்,
ரெண்டு பேருமே கேட்டாங்க ..
நல்ல விஷயம். செய்யலாம்ணே..
சரி,
திட்ட அறிக்கை ,கட்டடத்திற்கான பிளான், நிதி ஆதாரம், எதிர்பார்க்கும் வருமானம் எல்லா விவரங்களும், எழுத்துப்பூர்வமா, விதி மீறாமல் தயார் செய்து கொண்டு வாங்க,
தொழில் செய்யும் இடம் , முதலீடு, மக்களுக்கு கிடைக்கும் பலன்,வசதிகள், வேலைவாய்ப்பு , கல்வி .
அரசாங்கம் செய்து தர வேண்டிய வேலைகள் ,அதற்கான செலவு,
விவசாயம் பாதிக்குமா? நகரத்தில் இருந்து ஆலை அமையவிருக்கும் தூரம், மின்சாரம், போக்குவரத்து வசதி ,
எல்லாம் சரி பார்த்து , முடிவு செய்யலாம் போயிட்டு வாங்க ..
சரிங்க ஐயா,
முதலில் வந்தவர் போய்விட்டார்,
உடனே ஆரம்பிச்சா எவ்வளவு நாள்ல முடியும்ணேன் .
ஐயா, ஏழிலிருந்து எட்டு மாசத்தில ஆரம்பிச்சுடலாம் ஐயா ..
உடனே வேலையை ஆரம்பிங்க, அரசாங்கத்தோட அனுமதி எல்லாம் கிடைச்ச மாதிரி நினைச்சு வேலையைச் செய்யுங்க .. குழந்தைகள் படிக்கிறதுக்கு பள்ளிக்கூடம் உள்ளேயே இருக்கணும்ணேன். அது முக்கியம்ணேன்.
குழந்தைகள் படிக்க ,பள்ளிகூடம் கட்டித்தான் நடக்கும் ஐயா,.
நன்றி வாறேன் ..
இரண்டாவது வந்தவர் மலர்ச்சியோடு போனார் ..
தொழில்துறை செயலாளருக்கு ஒரு சந்தேகம் ..
ஐயா,
முதல்ல வந்தவர் ,நகரத்துக்கு பக்கத்திலேயே பெரிய மில் கட்டுறார், போக்குவரத்து ,மின்சாரம் பிரச்சனைஇல்லை , நிறையப் பேருக்கு வேலை கொடுக்கிறார், ஊர் வளர்ச்சியாகும்,.
அவங்களுக்கு நடைமுறைப்படி எல்லாம் சரியா இருந்தால்தான் அனுமதி என்று சொல்லிவிட்டு ..
சாலை வசதி மின்சார வசதி கூட இல்லாத பொட்ட காட்டில் கட்டுற மில்லுக்கு முதலில் உடனடி அனுமதி கொடுக்குறீங்க ..
முதல்ல வந்தவரைவிட குறைந்த இடம், வேலைவாய்ப்பு, வசதிகள் .. விரிவடையக் காலம் பிடிக்கும் ..
முன்னுரிமை இரண்டாம் நபருக்கு ..
என்ன காரணம் ..?
இங்க பாருங்க சார்,
அந்தப் பொட்டக் காட்டுக்குப் போற வழியிலே எத்தனை கிராமம் இருக்கு சொல்லுங்க ..?
34 கிராமம் இருக்கு ஐயா, அங்க மின்சாரமும் இல்லை, சாலை வசதியும் இல்லை ..
ஒரு பஞ்சு ஆலை கட்ட கண்டிப்பா மின்சாரம் வேணும், மின்சாரம் கொண்டு வருவதற்காக கம்பங்களை அவங்களே அமைச்சுடுவாங்க .. பாதைக்காக ஏதோ ஒரு ரோடு போடுவாங்க ..
அந்த மின்சாரக் கம்பங்களைப் பயன்படுத்தியே கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுக்கலாம் .. சாலை வசதியும் தரலாம் .. வேலையும் தரலாம் முக்கியமா. குழந்தைகளுக்குப் படிப்பும் தரலாம் ..
கிராமப் புள்ளைங்க படிக்கிறதுக்கு அவங்க செலவிலேயே பள்ளிக்கூடம் கட்டச் சொல்லிட்டேனே.
குழந்தைகள் படிக்கும்ல ,அரசாங்கத்தின் தேவை அதுதானே .. அதுதான் முக்கியம்ணே..
ஒருவர் தன்னை புத்திசாலியாகக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
அந்த மேதை யார்? என்னவெல்லாம் செய்தார்?
படிப்பவர்களுக்குத் தெரியாமலா இருக்கும் ..
திருவாசகத்தில் ஒரு வாசகம் :--
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க ..
ஏகன் (ஒருவர்) அநேகன் (பலவுருவம்)
ஒருவராகவும், பலவுருவம் கொண்டும் இருக்கும் இறைவன் திருவடி வாழ்க.
No comments:
Post a Comment