Saturday, September 3, 2022

"செளக்கியமா?"

 "செளக்கியமா?" என்று கேட்டேன் அறிந்தவர் ஒருவரைப் பார்த்து.

"செளக்கியமா இருக்கறதுனாலதான பார்க்கிறீங்க" என்று கேட்டார்.
"செளக்கியமா?" என்று கேட்டேன் இன்னொருவரைப் பார்த்து.
"நான் சௌக்கியம், நீங்கள் செளக்கியமா?" என்றார்.
"செளக்கியமா?" என்று கேட்டேன் வேறொருவரைப் பார்த்து.
"நீங்கள்லாம் இருக்கும்போது செளக்கியத்திற்கென்ன குறைச்சல்?" என்றார்.
"சௌக்கியமா?"என்று கேட்டேன் மற்றுமொரு நானறிந்த நபரைப் பார்த்து.
"இதெல்லாம் ஒரு கேள்வியா?
பார்த்த இடத்தில் குசலம் விசாரிப்பது என்ன பண்பு?" என்றார்.
"சௌக்கியமா?"என்று கேட்டேன் என்னைத் தெரிந்த நபரைப் பார்த்து.
இருக்கேன். நேரம் வந்தா கிளம்பிப் போக வேண்டியதுதான் என்றார்.
கேள்வி ஒன்று தான்
எத்தனை எத்தனை பதில்கள்.
மனிதர்கள் எத்தனை விதமோ,
அத்தனை பதில்கள்.
பதில்களில் வெளிப்படுகிறது
அவரவர் பண்பும் ,நிலையும், அவரவர் குணமும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...