காசியில் உயிரை விட வேண்டும் என்பது பெரும் அளவிலான வயதானவர்களின் எதிர்பார்ப்பு. முக்தி கிடைக்கும் என்ற ஒன்று தான் காரணம். ஆனால் அங்கே இதற்காகவே ஒரு விடுதி இருப்பதை அறிந்து வியப்படைந்தேன். ஆனால் 14 நாட்கள் மட்டுமே.
யோசித்து பாருங்கள், ஒரு அறையில் இறப்பதற்காக தங்குவது !! 14 நாளில் இறக்காவிட்டால் அறையை காலி செய்துவிட வேண்டும்.
காசி லாப் முக்தி பவன் தான் அது. வாரணாசியில் இருக்கும் இது 1908 டில் ஆரம்பிக்கப்பட்டது.
நீங்கள் இறக்கும் முன் எல்லாவிதமான சண்டைகளையும் தீருங்கள். (குடும்பத்தில் சண்டையிட்டு வீட்டின் நடுவே சுவர் எழுப்பி 40 வருடமாக தம்பியுடன் பேசாத அண்ணன், இறக்கும் தருவாயில் தன் தம்பியை அழைத்து பேசி இருக்கிறார். பேசும் போதே உயிர் பிரிந்தது. மனதை உருக்குவதாக இருந்ததாம்.)
எளிமையாக இருப்பதே சிறப்பான வாழ்வு ! அதீத உணவின் சுவையை நாடாதீர்கள்.
எல்லாரிடமும் குறை இருக்கும். அதை விடுத்து, நல்லவை மட்டுமே பார்க்க வேண்டும். குறைகள் இருப்பதாலேயே விலகி செல்வது வேண்டாம்.
நீங்கள், உங்களுக்கு தேவையான உதவியை தைரியமாக கேட்டு பெற வேண்டும்.
வாழ்க்கையில் அழகு என்பது சிறு சிறு விடயங்களில் தான் உள்ளது. (People who are too proud or too critical, are the ones who find it hard to appreciate joy in small things)
ஏற்றுக்கொள்வது தான் விடுதலை. Acceptance is liberation - இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது. இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
அனைவரையும் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்ளுங்கள். சாதி ,மத, இன, நிற வேறுபாடுகள் வேண்டாம்.
உங்கள் வாழ்வில் நோக்கத்தை கண்டறிதல் என்பது முக்கியமானது. அதை கண்டறிந்து விட்டால், சும்மா விட்டு விடாதீர்கள். (நடிகர் விவேக் மரம் நடுகிறார். இது போல)
உங்கள் பழக்க வழக்கம் தான் உங்களது மரியாதையை கூட்டுகிறது. ( உடற்பயிற்சி செய்தால் தான் தேகம் வலுப்படும்; நல்ல பழக்கம் இருந்தால் தான் மரியாதை வலுப்படும்)
உங்களுக்கு தேவையானவற்றை தேடி படியுங்கள், அறிந்து கொள்ளுங்கள். கடைசி காலத்தில், நடக்க கூட முடியாத நிலையில், இனிமையான நினைவுகள் இருந்தால் தான் மனதில் அசை போட முடியும்.
நீங்கள் ஒருவருடன் உறவை முறித்துக்கொள்வது என்பது அவருடன் அல்ல. அவரின் கருத்துகளுடன் மட்டுமே ! ( For example the divorce, is with the thought and never with the person)
நீங்கள் சம்பாதிக்கும் பணத்தில் 10% புண்ணிய காரியங்களுக்காக எடுத்து வையுங்கள். ( Many people do charity only towards the end of life)
No comments:
Post a Comment