ஆம். இதை இப்படித்தான் இனி சொல்லப் போகிறார்கள்.
ஆனால் இப்போது அரசு ஒத்துக் கொள்ளாது.
அதுவும் சிலிண்டர் விபத்து என்று சொன்ன ஒரு சாதாரண சிலிண்டர் வெடி அல்ல ....வெடின்னு சொன்னா உங்களுக்கு ரொம்ப கோபம் வரும்....
சிலிண்டர் விபத்து
ஒரு சிலிண்டர் விபத்துக்கு ஒரு டிஜிபி லெவல் அதிகாரி சம்பவம் நடந்த ஊருக்கு.... மாநிலத்தின் தலைநகரத்திலிருந்து ..ஓடோடி வந்த சரித்திரம் எங்காவது உண்டா?
சிலிண்டர் வெடித்த தெருவை முழுவதும் மூடி நூற்றுக்கணக்கில் போலீஸ் வந்து பந்தோபஸ்து போட்ட வரலாறு உண்டா ?
டிஜிபி அவர்கள் நிச்சயமாக முழு உண்மையும் தெரிந்த பிறகும்.... முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல
அல்லது மறைக்க முயற்சிப்பது போல
ஒன்றுமே தெரியாதது போல
ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார்...
சம்பந்தப்பட்ட சிலிண்டர் விபத்தில் இறந்தவர் ஒரு முஸ்லிம் பயங்கரவாதி....
ஏற்கனவே விசாரிக்கப்பட்டு இருக்கிறார் ...
அதை பூசி மெழுக அவர் மீது வழக்கு இல்லை என்ற சமாதானம் ....
அவர் தொடர்பு சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் ஒரு மணி நேரத்தில் அள்ளிக் கொண்டு வந்து அடைத்து விசாரணை செய்திருக்க முடியும் ...
அதைச் செய்யாமல் ஏதோ முழுவதுமாக கண்டுபிடித்ததாக கோவை மாநகர சிஓபிக்கு பாராட்டு தெரிவிக்கின்ற நகைச்சுவை ....
திமுக ஆட்சியில் இருப்பதால் ஐபிஎஸ் படித்துவிட்டு அதற்கான எந்த கடமைகளையும் சரிவர செய்யாமல் ஆட்சியின் கைத்தடியாக செயலிழந்து கிடக்கும் தமிழக காவல்துறையை பார்த்து வருத்தப்படுகிறோம்.
1998 பிப்ரவரி 14 கோவை மாநகரம் குண்டு மழைகளால் இரத்தக்காடாகி 58 உயிர்களைப் பலி கொண்டது....
அதற்குப் பிறகு அதே எண்ணத்துடன் அதே திமுக தலைமையின் ஆட்சியினல் இப்போது மறுபடியும் அதே முயற்சி செய்யப்பட்டு,
அது இறைவனின் அருளால்... ஆண்டவன் அருளால்.... கோவை கோட்டை ஈஸ்வரன் .... கோனியம்மன் அருளால்.... நிறைவேறாமல் போய் இருக்கிறது....
காவலர்கள் முயற்சியால் அல்ல. காவல்துறையின் கண்ணியமான செயல்பாட்டினால் அல்ல ..
அரசின் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டினால் அல்ல ....
தோண்டத் தோண்ட உண்மைகள் வெளியே வரப் போகிறது.... அப்போது திமுக ஆட்சிக்கும் தோண்டிய குழி தயாராக இருக்கும்....
No comments:
Post a Comment