நம்மை சுற்றி இருக்கும் அனைவரும் நமக்கு நன்மைகளை தான் செய்வார்கள் என்று எந்த ஒரு நிர்பந்தமும் கிடையாது. சொந்த ரத்த உறவுகளில் ஆரம்பித்து, அன்னியர்கள் வரை அனைவருமே நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்வது கிடையாது. நன்மை, தீமையை பகிர்ந்து பார்க்கக்கூடிய அவர்களுக்கு பொறாமை என்னும் குணமும் சில சமயங்களில் மேலிட துவங்கிடும். இதனால் நமக்கு துரோகமும், சூழ்ச்சிகளும் புரிவார்கள். இத்தகைய பகைவர்களையும், துரோகிகளையும் எளிதாக வென்று அவர்களின் சூழ்ச்சியை முறியடிப்பதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? நமக்குத் தெரிந்த எதிரிகளை விட தெரியாத எதிரிகள் தான் அதிகமாக இருப்பார்கள் அப்படி இருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளையும் முறியடிக்க கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. இந்த பரிகாரத்தை நாள், கிழமை எதுவும் பார்க்காமல் நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரம் செய்பவர்களுக்கு பகைவர்கள் தொல்லை நீங்குவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமும் வலுப்பெறுகிறது. உடலில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும், கெட்ட கழிவுகள் அகழும். அந்த அளவிற்கு ரொம்பவே சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை எப்படி செய்வது? காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் அருகம்புல் சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அருகம்புல் சாறு உடலில் இருக்கும் கழிவுகளை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதனால் தான் காலை எழுந்ததும், வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு பருகுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு டம்ளர் அருகம்புல் சாறுடன் நான்கைந்து மிளகுகளை எடுத்து பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ‘மிளகு’ பகைவர்கள் மற்றும் துரோகிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் எந்திரமாக செயல்படுகிறது. ‘பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’ என்கிற ஒரு பழமொழி உண்டு. மிளகு உடலில் இருக்கும் விஷத்தை முறியடித்து விடும். இதனால் பகைவர் வீட்டில் உணவு உண்டாலும், அதாவது அவர்கள் நமக்கு சூழ்ச்சி செய்து விஷம் வைத்திருந்தாலும், அந்த விஷயத்தை முறியடித்து விடும் ஆற்றல் மிளகிற்கு உண்டு. அதனால் விருந்தில் மிளகு இருந்தால் பகைவரிடமும் உணவு உண்ணலாம் என்பதால் இந்த பழமொழி கூறப்பட்டது. அது போல மிளகு வராகி அம்மன், கால பைரவர் மற்றும் சனி பகவானுக்கு உகந்த ஒரு பொருளாகவும் இருந்து வருகிறது. இம்மூவரும் பகைவர்களையும், துரோகிகளையும் மன்னிக்கவே மாட்டாத தெய்வங்களாக இருக்கின்றனர். கெட்டது நினைத்து நம்மை நெருங்குபவர்களை ஓட ஓட விரட்டி அடிப்பவர்கள். எனவே இவர்கள் அம்சமாக இருக்கக்கூடிய மிளகாய் தட்டி போட்டு, அருகம்புல் சாற்றை தினமும் ஒரு டம்ளர் வீதம் பருகி வர வேண்டும். தினமும் முடியாதவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறையாவது இதுபோல பருகி வரவேண்டும். நீங்கள் இந்த சாற்றை பருகும் பொழுது கீழ் வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். மந்திரம்: விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம் விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம் விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித த்ருசா மஹா ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ! இந்த மந்திரத்தை உச்சரித்து விட்டு அருகம்புல் சாற்றை பருகி விட வேண்டும். இவ்வாறு நீங்கள் உங்களுடைய வீட்டில் இருந்தே வாரம் ஒருமுறை இந்த பரிகாரத்தை மேற்கொண்டு வந்தால், உங்களை சுற்றி இருக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும். மேலும் துரோகிகள் உங்களை நோக்கி எந்த விதமான சூழ்ச்சிகளை புரிந்தாலும், துரோகங்கள் செய்ய துணிந்தாலும் அவர்களால் உங்களை எதுவுமே செய்ய முடியாமல் நீங்கள் வென்று காட்டலாம். இந்த தாந்த்ரீக பரிகாரத்தை நீங்களும் நம்பிக்கையோடு செய்து பாருங்கள், உங்களுடைய எதிரிகளையும் ஓட ஓட விரட்டி அடிக்கலாம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
ஒருபுறம் நடிகர் கார்த்திக் கலாய்க்க, மறுபுறம் குஷ்பு சதாய்க்க, ஜி.கே வாசனை மாற்று போல உசுப்பேற்றுகின்றன தமிழக ஊடகங்கள்! “ கு ஷ்புவை தூ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment