Saturday, November 19, 2022

மூளை எப்படியெல்லாம் வேலை செய்யுது. ரூம் போட்டு யோசிப்பாங்களோ🤓🤓🤓😂😂😂😂😂 செம்ம brains🤓🤓🤭🤭👌👍

 கொளத்தூர்ல ஒருத்தன் வீட்ல கிரவுண்ட் ஃப்ளோர் ஃபுல்லா தண்ணி வந்துடுச்சுன்னு, மொட்ட மாடில போய் இருந்துக்கிட்டு, கடவுளே என்னையக் காப்பாத்துன்னு வேண்டினானான்.

கடவுளும், அவர் இருக்க பிஸில, சரின்னு மொதல்ல அவனோட பக்கத்து வீட்டுக்காரரை அவண்ட்ட அனுப்பி, நான் என் ஃபிரண்ட் வீட்டுக்குப் போறேன், வர்றியான்னு கேட்டிருக்கான். அதுக்கு அவன், இல்ல கடவுள் வருவாரு, நீ போன்னு சொல்லிட்டு, மறுபடியும் கடவுள்ட்ட வேண்டினானாம்.
அதான் ஆள் அனுப்பினோமே, அப்பறம் ஏன் இவன் திரும்பி ஹெல்ப் கேக்கறான்னு டவுட்ல, தீயணைப்பு வீரர்கள்ட்ட இவன் வீட்டு அட்ரஸைக் கொடுத்து, போய் காப்பாத்துங்கன்னு சொல்லி இருக்காரு. ஆனா அவங்கக்கிட்ட நம்மாளு, இல்ல நீங்க போங்க, கடவுள் வருவாருன்னு, திருப்பியும் கடவுள்ட்ட வேண்டினானாம்.
என்னடா மூணாவது தடவையா ஒரே ஆள்ட்ட இருந்து ரிக்வெஸ்ட் வருதுன்னு, அவரே வரலாம்ன்னு பாத்தா, வேற நிறைய ரிக்வெஸ்ட்ஸ் வந்துட்டதால, பக்கத்துல காவி டிரவுஸர் போட்டு இருவது பேர் மழைல, தண்ணில வேலை பாத்துட்டு இருந்தாங்களா, அவங்கக்கிட்ட அந்தாளைக் காப்பாத்துங்கன்னு சொல்லி இருக்காரு. அவங்களும் மொட்டை மாடில போய், அவனை வரச் சொன்னா, அப்பவும் கடவுள் வருவாருன்னு சொல்லி அவங்களை அனுப்பிட்டு கடவுள்ட்ட வேண்டினானாம்.
அடுத்தத்தடவை அவன் வேண்ட, கடவுள் ஹெலிகாப்டர் அனுப்ப, அப்பவும் அவன் வர மாட்டேன்னு சொல்ல, மறுபடியும் வேண்டுதல்.
கடவுள் செம காண்டாகி, ஏண்டா லூசுப்பயலே, நீ கேட்டேன்னு தான நான் நாலு தடவை உனக்கு ஹெல்ப்புக்கு அனுப்பினேன். நீ ஏண்டா போகாம, என்னைய டிஸ்டர்ப் பண்றேன்னு கேட்டிருக்காரு.
அதுக்கு அவன், ஆமா நீ யாருன்னு கேட்டானாம்.
நான் தாண்டா கடவுள்ன்னு அவர் சொல்லி இருக்காரு.
நான் நம்ப மாட்டேன்னு, அவன் சொல்லியிருக்கான்.
உனக்கு நம்பிக்கை இல்லேன்னா ஏண்டா எண்ட்ட மறுபடியும் மறுபடியும் ஹெல்ப் பண்ணுன்னு கேட்டுட்டு இருந்தேன்னு, கடவுள் கோவத்துல கேட்டிருக்கார்.
உன்னைய யாரு கேட்டா, நான் என் கடவுள், அதான் கொளத்தூர்ல ஜெயிச்சார்ல அவர்ட்டல்ல என்னைய காப்பாத்தச் சொல்லி, அவரு தான் வந்து காப்பாத்தனும்ன்னு வேண்டிட்டு இருந்தேன்னு சொல்லி இருக்கான்.
ஏண்டா, நீ என்னையவே நம்பல, இத்தனை வருஷமா ஜெயிச்சும் இத சரி பண்ணாத ஒரு ஆளையா நம்பறன்னு, தலைல அடிச்சுக்கிட்டு, சித்திரகுப்தண்ட்ட ஃபோன் போட்டு மானுடர்களில் ஒரு எண்ணிக்கையக் குறைக்கச் சொல்லிட்டுப் போய்ட்டாராம்.
🤓🤓😂😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...