Thursday, May 4, 2023

தமிழ் நாட்டு மக்களையும் மத்திய அரசுயையும் முட்டாள் என்று நினைத்துள்ளார்கள்.

 நோ அப்பயிண்ட்மெண்ட் மறுத்த டெல்லி மேலிடம்..வேதனையில் முதல்வர்

அடுத்தடுத்து சிக்கும் சபரீசனின் நெருங்கிய சகாக்கள்..கலக்கத்தில் முதல் குடும்பம்
பிடிஆர் உட்பட 4 விக்கெட் அவுட்.. முதல்வரிடம் கெஞ்சிய பிடிஆர்
ஆளுநரின் ஆறாத ரணம்..அமித்ஷாவிடம் கொடுத்த முக்கிய டாக்குமெண்டுகள்
ஒரு ஷிண்டே அல்ல பல ஷிண்டேக்கள்..சிக்கிய அமைச்சர்
சபரீசனுக்கு காஸ்ட்லி வாட்ச் வாங்கிக்கொடுத்த பெண் நண்பர் சொன்ன திடுக் தகவல்
சிறை செல்லும் ‘பவர்’புல் அமைச்சர்
”என்னண்ணே முதல்வர் மாதிரி சோர்வா வர்ற” குமார்ஜி கோபாலை பார்த்து கிண்டலடிக்க. ”எருது புண் காக்கைக்கு கொண்டாட்டம்னு சொல்வாங்க அதுமாதிரி இருக்கு உன் பேச்சு” என்ற கோபால் ”வெயில்ல சுத்திட்டு விவரம் சேகரிச்சுட்டு வந்தா கிண்டலடிக்கிறாயா” என்றபடி ”போஸ் பாண்டியும், கமால் பாயும் எங்கே” என்று கேட்க வந்துட்டோம் என்று இருவரும் உள்ளே நுழைந்தனர்.
”என்னண்ணே இப்பல்லாம் அடிக்கடி சந்திக்கிறோம்” என்று கமால் பாய் கேட்க, ”நாட்டுல பரபரப்பா விஷயம் போகும்போது நாமளும் ஸ்பீடா இருக்கணும் பாய்” என்ற கோபால் ”நேரா விஷயத்துக்கு போய்டுவோம் ஏராளமான தகவல் இருக்கு அவரவருக்கு தெரிஞ்சத சொல்லுங்க” என்றார். ”நீயே சொல்லுண்ணே 7 நாட்களை கடந்து ரெய்டு போய்கிட்டிருக்கு, தோண்ட தோண்ட பூதமா வருது. போகிற போக்கை பார்த்தால் சிபிஐ, அமலாக்கத்துறை எல்லாம் வந்துடும் போல இருக்கே” என்று கமால் பாய் கேட்க, ”ஆமாம் அப்படித்தான் போகுது கொஞ்சம் சுருக்கமா சொல்லிவிடுகிறேன் பிறகு மற்றதை பேசுவோம்” என்று கோபால் ஆரம்பித்தார்.
”ஜி–ஸ்கொயர் ரெய்டு ஆரம்பித்த முதல் நாள் திமுகவினர் தலைமை உட்பட தெம்பாகத்தான் இருந்தார்கள். நமக்கும் ஜி.ஸ்கொயருக்கும் நேரடி சம்பந்தமில்ல அப்புறம் என்ன பிரச்சினை. மாப்பிள்ளைக்கே பிரச்சினை வராது. அப்புறம் அல்லவா நம்ம கிட்ட வர்றதுன்னுதான் தெம்பா இருந்தாங்க. ஆனால் வருமான வரித்துறை ரெய்டு என்பது சாதாரணமான ஒன்று அல்ல. இன்று ரெய்டு பண்ணனும் என்றால் அதற்காக தனி டீம் போட்டு ரெய்டு போகும் ஆட்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், தொடர்பில் உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். அனைவரது போன் பேச்சு, அவர்களது வங்கி கணக்கு இன்னபிற விஷயங்களை எல்லாம் சேகரித்து ஒரே நாள், ஒரே நேரம் நாள் குறித்து இறங்குவார்கள்.
இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா ரெய்டு போற இடம் பட்டியலிடப்பட்டு அதன் விலாசம் அனைத்தும் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே இருக்கும். ரெய்டு போகும் அன்று வருமான வரித்துறை வாகனங்களையும் பயன்படுத்த மாட்டார்கள். டிரைவர் மூலம் விஷயம் போகலாம், வாகனங்களை வைத்து ஆட்கள் உஷாராகலாம் என்பதற்காக வாடகை வாகனத்தை மட்டுமே எடுப்பார்கள். அதுவும் நள்ளிரவே வந்துவிடும். ரெய்டு அதிகாலை கிளம்பும்போதுதான் விலாசத்தை டீம் கிட்ட கொடுத்து போகச் சொல்வார்கள். அந்த அளவுக்கு சீக்ரெட்டாக இருக்கும் ரெய்டு ஜி.ஸ்கொயர் விஷயத்திலும் அப்படித்தான் இருந்தது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் ஒன்று சொல்லட்டுமா? ரெய்டு ஆரம்பித்தவுடன் திமுகவுக்குள்ளே இருந்தே அதிகாரிகளுக்கு இன்னார் இன்னாருடன் தொடர்பு என்றெல்லாம் தகவல் சொல்லி இருக்கிறார்கள். இதிலும் பல இடங்கள் ரெய்டு நடந்துள்ளது. இன்னும் சில இடங்கள் ரெய்டின் போது கிடைத்த தகவலை வைத்து அடுத்து அடுத்து சம்பந்தப்பட்ட இடத்திலும் ரெய்டு போயுள்ளனர். இதில் சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால் அண்ணாநகர் மோகன், அவரது மகன் சின்னமலை ஐடிவிங் கார்திக் சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்த ரெய்டுதான் திமுக மேலிடத்தை அசைத்து பார்த்துள்ளது.
முதல்நாள் சாதாரணமாக இருந்த முதல்வர் அடுத்தடுத்த நாட்கள் வந்த தகவலால் சற்றே டென்ஷன் ஆனாராம். ‘நான் ஆறு மாதத்துக்கு முன்னரே சொன்னேன் ஆட்சிக்கு வந்திருக்கிறோம் கொஞ்சம் நிதானமாக இருங்கள் என்று என் பேச்சை கேட்டால் தானே, இங்கு நடக்கும் எதுவுமே எனக்கு தெரிவதில்லை, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கினால் கூட எனக்கு உடனடியாக தகவல் வருவதில்லை என்று சொன்னவர் அனுபவிக்கட்டும்’ என்று மனம் நொந்து பேசியதாக தகவல். ஆனாலும் பாசக்காரர் ஆச்சே விட்டுகொடுக்க முடியுமா? அவரால் முடிந்ததை செய்ய பார்க்கிறார், இதுவரை அது பயனளிக்கவில்லை என்பது டெல்லி தகவல்.
இதே ஆதங்கத்துடன் தான் தானும் பேசியதாக பிடிஆர் முதல்வர் குடும்பத்திடம் விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை ஏற்க அவர்கள் தயாராக இல்லை. மறுப்பு கொடுங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். என்னை தனியே விட்டுவிடாதீர்கள் என்று முதல்வரிடம் பிடிஆர் தனியாக கூறியதாக தகவல். ஆனாலும் அவர் நாட்கள் எண்ணப்படுகின்றன என்கிறார்கள். அவருடன் சேர்த்து கூடுதலாக 3 அமைச்சர்களை நீக்க முடிவு செய்துள்ளார்கள். மெல்ல நடக்கும் என்கிறார்கள்.
மாப்பிள்ளைக்கும் வீட்டில் மவுசு குறைந்துவிட்டதாம். கட்சியிலும் முணுமுணுப்பு ஆரம்பமாகி இருக்காம். ஒரு மூத்த அமைச்சர் கஷ்டப்பட்டு நாம கைக்காசு செலவழித்து வாக்காளர் காலில் விழுந்து ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்தால் இவர் மருமகன் நோகாம வந்து எல்லாத்தையும் கையில் எடுத்துக்குவாராம், 2 ஜியில இருந்து மீளவே 10 வருஷம் ஆச்சு மறுபடியும் ஜி.ஸ்கொயரா? எப்படி போய் மக்களை சந்திக்க முடியும் மருமகனா வந்து தொகுதியில ஓட்டு கேட்கப்போகிறார் என்று புலம்பித்தள்ளி இருக்கிறாராம். இதே மனநிலையில் தான் கட்சியில் பெரும்பாலான அமைச்சர்கள், நிர்வாகிகள் இருக்கிறார்களாம்.
தலைவர் கலைஞர் கிட்டயாவது கொஞ்சம் ஜனநாயகம் இருக்கும், அறிவாலயத்துக்கு தினம் வருவாரு, பேராசிரியர், ஆற்காட்டார்னு யார்கிட்டயாவது சொல்லி மேட்டர கொண்டு போவோம். இவர் என்னடான்னா பேசவே மாட்டேங்கிறாரு. வீட்டிலும் போய் பார்க்க அனுமதி இல்ல, அறிவாலயத்துக்கும் வர மாட்டேங்கிறாரு, தலைமை செயலகத்தில் பேசப்போனால் உதயச்சந்திரன் கூடவே இருக்காரு. இது கட்சியா கம்பெனியா? என்று புலம்பி தள்ளுகிறார்களாம்”. என்று சொன்ன கோபால் ”இன்னும் இருக்கு கொஞ்சம் தண்ணி குடிச்சிக்கிறேன்னு” ரெஸ்ட் எடுத்தார்.
”அது மட்டும் இல்லண்ணே. கட்சி தலைவர், முதல்வர் இவ்வளவு நெருக்கடியில இருக்காருன்னு கீழே உள்ளவர்கள் கவலைப்பட்டதாக தெரியல. நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் ஒரே தகராறு. இவர்களுக்கு கட்சி தலைமைப்பற்றி பயமே இல்லையா?” என்று கேட்டார் கமால் பாய். ”பாய் மேட்டர் அது இல்ல அங்க ஒரு அதிகாரி இருக்கார், அவர் கட்சிக்காரர்கள் அடிச்சிக்கிறத பயன்படுத்தி அவர் சரியா கல்லா கட்டுகிறாராம். அவர் என்ன செய்றாருன்னா கட்சி காரர்களை அவரே தூண்டி விடுறதா சொல்லி உளவுத்துறையே ரிப்போர்ட் போட்டிருக்காம்” என்றார் போஸ் பாண்டி.
“சிவராமகிருஷ்ணன் ஐஏஎஸ்தானே அங்க இருக்காரு. அவரு என்ன பண்ணுறாராம் ?”
“மாநகராட்சி மேயருக்கும் எம்.எல்.ஏவுக்கும் நடுவுல இருக்க தகராறுல, எந்த பில்லும் க்ளியர் ஆகுறதில்ல. இதை பயன்படுத்திக்கிட்டு, சிவராமகிருஷ்ணன், தனியா கட்டிங் போட ஆரம்பிச்சிட்டாரு. அவரே காண்ட்ராக்டர்களை கூப்பிட்டு டெண்டர்களை முடிவு பண்ணுறாரு. இவங்க வெளிய அடிச்சிக்கிட்டு இருக்காங்க.” என்று கமால் பாய்க்கு பதிலளித்தார் பாண்டி.
”பாண்டி அப்படின்னா உங்க ஆட்கள் மேல தப்பே இல்லன்னு சொல்ல வர்றியா? தொடர்ந்து தென் மாவட்டங்களில் கோஷ்டி பூசல் இருக்கு. அமைச்சர்களே கோஷ்டிய வளர்க்கிறார்கள்.மேலிடம் என்னதான் செய்யுது. உளவுத்துறை இதையெல்லாம் கட்சித்தலைவர் கவனத்திற்கு கொண்டு போகாதா?” என்று காட்டமாக கேட்டார் குமார்ஜி. ”அதெல்லாம் சிதைஞ்சி போய் ரொம்ப நாளாச்சு குமாரு, அதனாலதான் கட்சியில் தடி எடுத்தவன் எல்லம் தண்டல்காரன் போல் ஆட, அதிகாரிகள் தனியாக ஆட, மணல்கொள்ளை, சட்டம் ஒழுங்கு பாதித்து 2 வருடத்தில் ஸ்டாலின் கலைஞர், ஜெயலலிதா போல் திறமையான முதல்வர் இல்லைன்னு பதிவாகிட்டே வருது”. என்றார் கமால் பாய்.
”காலையில் சட்டம் போடுகிறார்கள், மாலையில் வாபஸ் வாங்குகிறார்கள். பொதுமக்கள் என்ன நினைப்பார்கள் என்கிற கவலையே இல்லை. நல்லவேளை கல்யாண மண்டபங்களில் மது பார்ட்டிக்கு அனுமதி அரசாணையை கைவிட்டார்கள். இல்லன்னா மக்கள் குறிப்பாக பெண் வாக்காளர்கள் கைவிட்டிருப்பார்கள்”. என்றார் குமார். ”ஆனாலும் தன் முயற்சியில் மனம் தளராத செந்தில் பாலாஜி மது விற்பனையை 50,000 கோடி ரூபாய்க்கு உயர்த்தியே தீருவேன்னு கங்கணம் கட்டிகிட்டுத்தான் திரியிறாரு. புதுசா ஏடிஎம் போல ஒரு மது விற்பனை மிஷின் கொண்டு வந்திருக்காங்க. அதை பொது இடங்களில் வைக்க போறதா தகவல். குடிமகன்களுக்கு ஜாலிதான், பொதுமக்களுக்கு வேதனைதான்” என்றார் கமால்பாய்.
“இன்னொரு டாஸ்மாக் மேட்டர் சொல்றேன் பாய். டாஸ்மாக் எம்.டி சுப்ரமணியம் மட்டுமே டாஸ்மாக்குல மாசம் 6 சி தேத்துறாரு. ஒரு கேஸ்க்கு 10 ரூபா. பியர் கேஸ்க்கு 5 ரூபா. எல்லாரும் செழிப்பா இருக்காங்க இந்த ஆட்சியில” என்றான் பாண்டி.
”சரிப்பா ஜி.ஸ்கொயருக்கு வருவோம்” என்று ஆரம்பித்தார் கோபால். ”ஜி.ஸ்கொயர் ரெய்டு மெல்ல மெல்ல காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறி மருமகன் சபரீசனை நோக்கி நகர்கிறது. ஒவ்வொன்னா சொல்கிறேன். சபரீசன் தனது நண்பர் விஜிபி வினோத்துடன் லண்டன் சுற்றுலாவில் இருக்க, முதலில் ஜி.ஸ்கொயர் அலுவலகங்களில் ரெய்டு சாதாரணமாக ஆரம்பித்தது. அண்ணாநகர் எம்.எல்.ஏ மோகன், அவரது மகன் கார்த்திக், சபரீசனின் உறவினர் நவீன் வீடு, சபரீசனின் ஆடிட்டர் சண்முகராஜ், அவரது உதவியாளர் ஈஸ்வரி, மாலதி (சகல பணபரிமாற்றங்களும் அறிந்தவர்கள்) என சபரீசன் சம்பந்தப்பட்டவர்களை நோக்கி ரெய்டு போனது.
அன்று மதியமே சபரீசனின் நெருங்கிய நண்பர் லண்டன் வெங்கட் மற்றும் நவீனின் நெருங்கிய சகா சேலம் மூர்த்தி இல்லத்திலும் ரெய்டு பாய்ந்தது. ஜி ஸ்கொயர் ரெய்டின்போது கிடைத்த ஆவணங்களில் வருமான துறையினருக்கு மணல் கடத்தல் மாஃபியாக்கள் ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோர் அதிக அளவில் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாம். இதனால் மூவரும் ஐடி வலைக்குள் வந்துவிட்டனர். இவர்கள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் எந்த அளவுக்கு என்றால் சமீபத்தில் துரைமுருகன் கரிகாலனை துபாய்க்கு அழைத்துச் சென்றார். அந்த அளவுக்கு நெருக்கம். இந்த 3 பேருக்கும் விசாரணைக்கு ஆஜராக விரைவில் சம்மன் போகும்.
அடுத்து முதல் நாளே லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் (சபரீசனின் பெனின்சுலா நிறுவனத்தை கவனித்துக்கொள்பவர், உதய நிதிக்கும் நெருக்கமானவர்) அவரது போயஸ் கார்டன் அலுவலகத்திலும் ரெய்டு போனது. இந்த பெனின்சுலா என்பது ஐபேக் மாதிரி அரசியல் உத்தியை உருவாக்கும் டீம். 120 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள். இதுபோல் 3 பெரிய நிறுவனங்கள் நடத்துகிறார் சபரீசன். எல்லாம் திமுகவுக்கு பின்னணியில் இயங்கும் நிறுவனங்கள், அர்ஜுனை தொடர்ந்து அங்கும் ரெய்டு போனால் என்னாகும்” என்றார் கோபால்.
இதெல்லாம் ஏற்கெனவே வந்த கதைத்தானே அண்ணே 5 நாள் கதையை சொல்லு என்று குமார்ஜி ஆவலாக கேட்க, உங்கள் காட்டில் மழை ஜாலியாக இருக்கிறாய் என்று சிரித்தப்படி சொல்ல ஆரம்பித்தார் கோபால். முதல்நாளே சபரீசனின் நெருங்கிய தொழில் சகா லண்டன் வெங்கட்டின் (இவர் ஜி.ஸ்கொயரின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்) ஜெம் கிரானைட்ஸ் அலுவலகத்திலும் ரெய்டு போனது. இதற்கிடையே லண்டன் வெங்கட் மாயமானார். அவரை கண்டறியும் வேலையை செவ்வாய்க்கிழமை தொடங்கினார்கள் அதிகாரிகள்.
செவ்வாய்கிழமையும் நடந்த ரெய்டில் ஜி ஸ்கொயரின் பாலா என்கிற ராமஜெயம் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பதிவு செய்துள்ளது தெரியவந்தது. வருமான வரித்துறையினரை குழப்பவும், முதலீடுகள் வருவதை மற்றவர்கள் கண்காணிக்காமல் இருக்க பல பெயர்களில் நிறுவனங்கள் பலரை பார்ட்னர்களாக சேர்த்திருந்தது தெரியவந்தது. பெரும்பாலான நிறுவனங்களில், பாலாவும் அவரது மனைவி ஸ்ரீ கலாவும் அண்ணாநகர் கார்த்திக்கின் மனைவி ஸ்ருதி கார்த்திக், அண்ணாநகர் எம்எல்ஏ மோகனின் மனைவி கீதா மோகன் பங்குதாரராக இருப்பதும் தெரியவந்தது.
இதற்கிடையே ஆதவ் அர்ஜுன் மட்டுமல்லாமல், செவ்வாய்க்கிழமையே சபரீசனின் ஆஸ்த்ரேலியா வங்கி பார்ட்னர் லிபரா ரத்திசன் சார்ந்த அலுவலகங்கள், எலீசியம் ரியல் எஸ்டேட் அதிபர் சுபாஷ் சம்பந்தப்பட்ட இடங்களிலும் ரெய்டு போனது. இது ஜி.ஸ்கொயர் ரெய்டா சபரீசனை குறி வைக்கும் ரெய்டா ’அம்மையப்பன் என்றால் என்ன உலகம் என்றால் என்ன?’ என்கிற பாணியில் அனைத்து உடன்பிறப்புகளும் குழம்பிப்போய் சைலண்டானார்கள். ஒரே ஒருவர் மட்டும் வாய்த்திறந்தார். அவர்தான் பிடிஆர். அடப்பாவிகளா தாத்தா வாழ்நாளில் சம்பாதிக்காத அளவு சொத்தை ஒரே வருஷத்தில் சம்பாதித்துள்ளார்களே என்று அவர் பேசியதாக வெளியான ஆடியோ ஸ்டாலின் குடும்பத்தையே அசைத்து பார்த்தது.
இதற்கிடையே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின் பன்நோக்கு மருத்துவமனை திறப்பை சாக்காக வைத்து டெல்லி போக முடிவெடுத்தார். அதற்கு முன் ஆளுநர் ரவிக்கு அவசர அழைப்பு வர முக்கிய ஃபைல்களுடன் அவர் டெல்லி பறந்தார். இம்முறை ஆளுநர் ரவி வலுவாக திரட்டப்பட்ட ரகசிய தகவல்களுடன் உள்துறை அமைச்சரை சந்தித்தார். ஆளுநர் எப்போது டெல்லி சென்றாலும் அவரது சந்திப்பில் ஐபி உள்ளிட்ட ஏஜன்ஸிகளின் முக்கிய அதிகாரிகள் சந்திப்பு இருக்கும். இம்முறையும் இருந்திருக்கலாம்”. என்றார் கோபால்.
ஏண்ணே ஆளுநரை தேவையில்லாமல் உரண்ட இழுத்தார்களே அதெல்லாம் சிக்கலா என்று கேட்டார் கமால் பாய், பின்ன இல்லாமலா பாய். ஆளுநரை எந்த அளவுக்கு வம்பிழுத்தார்கள் என்றால் அனைவரும் சட்டமன்றத்தில் விமர்சிக்க பிடிஆர் ஒருபடி மேலே போய் பன்வாரிலால் காலத்து மேட்டரை ஆளுநர் என்று பொத்தாம் பொதுவாக பதிவு செய்தார். ராஜ்பவன் கணக்கு வழக்குகளை இண்டர்னல் ஆடிட்டிங், சிஏஜி அறிக்கை போல் சிறிய செலவுகளையும் குறிப்பிட்டு வீண் செலவு என்று பதிவிட்டார்.
இதில் காமெடி என்னவென்றால், டிஐபிஆர் அதிகாரிகளும், ஆளுநர் மாளிகை அதிகாரி முக்கிய அதிகாரி உட்பட ராஜ்பவன் செலவுகளில் புகுந்து விளையாடிய முறைகேடு கணக்குகளை ஆளுநர் லிஸ்ட் எடுத்து வைத்துள்ளார். இவர்களைப்போல் அவர் அறிக்கை எல்லாம் விட முடியாது என்பதால் கண்டதையும் பேசினார்கள், ராஜ்பவன் மாளிகை கடைகோடி ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் கொடுத்ததைக்கூட கொச்சை படுத்தினார்கள் என்று ஆளுநர் உள்ளூர கோபத்துடன் இருக்கிறாராம். இவைகள் அவரது வேறு நடவடிக்கைகள் வேகமெடுக்க உதவியாக இருக்காதா? சட்டமன்றத்தில் இவர்கள் பதிவு செய்ததுதான் அவரது கோபத்துக்கு காரணமாம்.
இது தவிர பல ஊழல் முறைகேடு புகார்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முறைகேடு லிஸ்ட் ஆளுநர் மூலம் திரட்டப்பட்டு டெல்லிக்கு அளிக்கப்பட்டுள்ளதாம். நேரம் வரும்போது ஷிண்டேக்களை உருவாக்க அது பயன்படும் என்கிறார்கள். இம்முறை ஒரு ஷிண்டே இல்லையாம், பல ஷிண்டேக்கள் தனித்தனி அசைன்மெண்ட் என்கிறார்கள். அதில் ஒரு அமைச்சரை திமுக தலைமை மோப்பம் பிடித்து விட்டதாம். அடுத்து பிடிஆருடன் சேர்த்து நீக்கப்படும் அமைச்சர்களில் அந்த அமைச்சரும் ஒருவராம்”. என்றார் கோபால்.
“அண்ணே ரெய்டு மேட்டர் பாதியில் நிக்குது” என்றார் கமால் பாய், ஆமாம் பாய் செவ்வாய்க்கிழமையை அடுத்து புதன்கிழமையும் ரெய்டு தொடர்ந்தது. முதல் நாள் ரெய்டில் மணல் கடத்தல் மாஃபியாக்கள் 3 பேர் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் சிக்கியது என்று சொன்னேன் அல்லவா, புதன் கிழமை அதில் முன்னேற்றமாக மணல் கடத்தல் ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோரிடம் இருந்து ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதற்கான ஆதார ஆவணத்தை கண்டுபிடித்த ஐடி அதிகாரிகளே ஆடிப்போனார்களாம்.
இந்தப்பணம் அண்ணாநகர் கார்த்திக் மூலம் ஆடிட்டர் சண்முகராஜிடம் சென்று பின்னர் ஹவாலா ஆபரேட்டர்கள் மூலம் துபாய், கனடா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது என்று ஐடி அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்களாம். இதை அடுத்து, மணல் கடத்தல் 3 பேர் மீது, ஐடி அதிகாரிகள் பார்வை திரும்பியுள்ளது. இதற்கிடையே சென்னை திரும்பவிருந்த சபரீசன் மூன்றாம் நாள் ரெய்டில் சிக்கிய விபரங்களை அறிந்து சென்னை திரும்பும் முயற்சியை தள்ளிப்போட்டதகவல் கசிந்தது. இரண்டாம் நாளாக லண்டன் வெங்கட் அதிகாரிகளிடம் சிக்காமல் புதன்கிழமை வரை ஆட்டம் காட்டினார்.
இந்த நேரத்தில் ஐடி அதிகாரிகள் சபரீசனுக்கு நெருக்கமான அமானா ஹாசன் என்கிற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தும் தகவல் கசிந்தது திமுக குடும்பத்தை கலக்கத்தில் ஆழ்த்தியது. காரணம் சபரீசன் கையில் கட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வாட்சுகளை இந்த அமனா ஹாசன் தான் வாங்கித்தந்துள்ளார்”. என்றார் கோபால். “அவ்வளவு பெரிய கோடீஸ்வரரா அவர் துபாய் ஷேக் அம்மாவா?” என அப்பாவியாக கேட்டார் கமால் பாய். டாஸ்மாக் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் தரமாட்டேன்னு சட்டம் பேசும் குடிமகனை கேவலமாக பார்க்கும் கடைக்காரர்போல் கமால்பாயை ஒரு பார்வை பார்த்த கோபால், ”பாய் அந்தம்மா சாதாரண போலீஸ் பிஎஸ்ஓவாக வந்து பழக்கமாகி இதுபோன்ற காரியங்களுக்கு உதவியாக இருக்கு அதுகிட்ட நடத்திய விசாரணையில் பல கோடி மதிப்புள்ள பல வாட்சுகள் குறித்த பல திடுக் தகவல்களை சேகரித்துள்ளார்கள் அதிகாரிகள்” என்றார் கோபால்
அண்ணே ஜி.ஸ்கொயர் ரெய்டு மேட்டருக்கு வாண்ணே என்று குமார்ஜி டிராக்குக்கு இழுத்துட்டு வர, அதைத்தானேப்பா சொல்கிறேன், வாட்ச் மேட்டரும் அது சம்பந்தப்பட்டது தானேன்னு சொல்லிவிட்டு இப்பத்தான் சபரீசன் நேரடியாக லிங்க் ஆகிறார், அவருக்கும் ஜி.ஸ்கொயருக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னவர்கள் வாயை அடைக்கும் விதமாக ஐடி அதிகாரிகள் ஜி.ஸ்கொயரின் ஒரு நிறுவனமான தெலங்கானாவில் உள்ள பிரசாந்த் ரெட்டி என்பவருக்கு சொந்தமான Lotus Bhevin Developers, என்கிற நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த நிறுவனத்தின் இன்னொரு பார்ட்னர் யாரு தெரியுமா? மாப்பிள்ளை சபரீசன் தான், இப்ப தானாக ஜி.ஸ்கொயருக்குள் மாப்பிள்ளை வந்துட்டாரா? ”என்று கேட்டார் கோபால்.
நீ கில்லாடிண்ணே சும்மா கில்லி மாதிரி இவ்வளவு மேட்டர் சொல்கிறாயே நானும் தினமும் எல்லா சானலையும் வைத்து பார்க்கிறேன் ஒருத்தர் கூட இவ்வளவு தகவலை சொல்லலியே என்று ஆதங்கப்பட்டார் குமார். அதெல்லாம் சொல்ல மாட்டார்கள் குமாரு, அப்புறம் பீஸ் கட்டைய புடுங்கிடுவார்கள் அல்லவா? தமிழ் ஊடகங்கள் அனைத்தும் ஓபிஎஸ் மாநாடு பற்றியும், கர்நாடகா தேர்தல் பற்றியும் விவாதம் நடத்திகிட்டு இருந்தாங்க அதைவிடு, நாம் சப்ஜக்டுக்கு வருவோம் என்ற கோபால் தொடர்ந்தார்.
தெலங்கானா Lotus Bhevin Developers நிறுவனம் ஜி.ஸ்கொயரின் அங்கம், அதில் சபரீசன் பார்ட்னர் என்றவுடன் ஏற்கெனவே ஆடிட்டர் சண்முகராஜ் சொன்ன தகவல், மற்ற இடங்களில் கிடைத்த ஆவணங்கள் அனைத்தையும் வைத்து சபரீசனை சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்கள் அதிகாரிகள். இதற்கிடையே வியாழக்கிழமையும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு தொடர்ந்தது. இம்முறை அண்ணாநகர் கார்த்திக்கின் மாமனார் வித்யாசாகர் வீடு, அலுவலகம், ஸ்பின்னிங் மில், பம்ப் ஃபேக்டரி, புளியங்குளம் பட்டறை உள்ளிட்ட இடங்களில் ரெய்டு. போத்தனூரில் உள்ள ஒரு பகுதியிலும் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது, அதேபோல் பீளமேடு வெட் கிரைண்டர் டீலர் ராஜன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு போனது.
இதற்கிடையே போக்கு காட்டி வந்த சபரீசனின் நெருங்கிய நண்பர் லண்டன் வெங்கட் ஐடி அதிகாரிகளிடம் சிக்கினார். அவரை ஒரு குழு தனியாக வைத்து விசாரித்தது. இதற்கிடையே சபரீசனுடன் சென்றுள்ள விஜிபி வினோத்தையும் விசாரிக்க ஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இருவரும் சென்னை வந்தவுடன் விசாரிக்க முடிவு செய்து காத்திருக்கின்றனர். ஐந்தாவது நாளாக 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமையும் ரெய்டு தொடர்ந்தது இவர்கள் பெரிய முன் தயாரிப்புடன் இறங்கியதை காண்பித்தது. இதற்கிடையே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி, அதன் உள் தகவலை பிறகு சொல்கிறேன், அதற்கு முன் அமித்ஷாவிடம் பிடிஆர் டேப், அவர் சொன்ன விஷயங்கள் குறித்து விசாரணைநடத்த வைத்த கோடிக்கையை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்த எடப்பாடி இந்த ரெய்டு உள்ளிட்ட விஷயங்கள் எதிலும் ஸ்டாலின் வாய்திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் ஸ்டாலின் என்ன செய்வார் பாவம், பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்கவில்லையாம். எப்போதும் டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கும் முதல்வர் இம்முறை செய்தியாளர்களையும் தவிர்த்துவிட்டு சென்னை திரும்பினார். சப்ரீசன் விஷயம் சிக்கலாகத்தான் போகிறது என்கிறார்கள். முதல்வர் தனிமைப்பட்டுவிட்டதாக இவ்விஷயத்தில் உணறுகிறார். அடுத்து ரெட் ஜெயண்ட் விஷயங்கள் தோண்டப்படும் என்றும் சொல்கிறார்கள். ஆனால் ரெய்டு எல்லாம் ஒரு மேட்டரே அல்ல திமுக அதையெல்லாம் கண்டு பயப்படாது என்று சொன்னார் சின்னவர், ஆனால் அதற்க்காக அவர் பயத்தை மறைத்து சாதாரணமாக இருப்பதுபோல் மெனக்கிட்டதை பார்க்கும்போது இப்படி சினிமாவில் இவர் நடித்திருந்தால் ஒரு தேசிய அவார்டாவது வாங்கியிருப்பார் என்று திமுகவினரே முணுமுணுப்பதை பார்க்க முடிந்தது.
ரெய்டு நடந்து கொண்டிருந்தபோதே, வருமான வரித் துறை அதிகாரிகள் ஜி ஸ்கொயர் ஊழியர்களிடம் விசாரணையை தொடங்கினார்கள். ஊழியர்களோ சொல்லி வைத்தார்ப்போல “எங்களுக்கு எதுவும் தெரியாது” என்பதையே திருப்பித் திருப்பிச் சொல்ல, ‘சரி நீங்கள் தடயங்களை அழித்தீர்கள் என்று உங்கள் மீது, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறோம் என்று சொல்லவும், ஊழியர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்து விட்டார்கள்” என்றார் கோபால்.
”அண்ணே அதிமுக மேட்டரை நான் சொல்கிறேன்” என்று போஸ்பாண்டி வர ”வாய்யா, சொல்லுய்யான்னு” கோபால் சொல்ல போஸ்பாண்டி சொல்ல ஆரம்பித்தார். ”அண்ணாமலையிடம் தொகுதி பங்கீடு இல்லை ஸ்ட்ரெய்ட்டா டெல்லிதான்னு சொன்ன எடப்பாடிக்கு அமித்ஷாவும், நட்டாவும் நேரம் கொடுக்க பொதுச் செயலாளர் ஆன சந்தோஷத்தில் சகாக்களுடன் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி. ’வாங்க 2026 முதல்வர் அவர்களே’ன்னு அமித்ஷா வரவேற்றதும் முக மலர்ச்சியுடன் நன்றி சொல்லியுள்ளார் எடப்பாடி. ஆனால் அதன் பின் ஒளிந்துள்ள சில்மிஷத்தை அவர் கவனிக்கவில்லை. முதலில் எடப்பாடி, தம்பித்துரை அமித்ஷா மட்டும் தனியறையில் சந்தித்துள்ளனர். அப்போது அமித்ஷா சில விஷயங்களை கூறியுள்ளார். உங்களுக்கு ஆட்சிக்கு வர அனைத்து உதவியும் செய்தவர்கள் நாங்கள், 4 ஆண்டுகள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம் அது தொடரணும் என்று கண்டிஷனாக சொல்லி சில பழைய ரெய்டுகளை ஞாபகப்படுத்தியுள்ளார் அமித்ஷா.
பின்னர் அனைவரையும் அழைத்து அமர வைத்தவர் அண்ணாமலையையும் அமர வைத்து அனைத்துக்கும் பின்னால் இருப்பது நாங்களே என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார். பின்னர் அனைவருக்கும் பொதுவாக தமிழ்நாட்டில் ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தால் தான் வெல்ல முடியும், சண்டை போட்டால் எதுவும் நடக்காதுன்னு பொதுவாக சொல்லி சரியாக நடக்கவேண்டும் என்று முடித்துள்ளார். அதன் பின்னர் கூட்டணி தொகுதி பங்கீடு எல்லாம் கூடுதல் குறைச்சல் எல்லாம் பின்னால் பேசிக்கொள்ளலாம் அதற்கு முன் ஒரு கண்டிஷன் இந்த 6 தொகுதிகள் எங்களுக்கு கட்டாயம் வேண்டும் என்று 7 தொகுதிகள் பட்டியலை கொடுத்துள்ளார். பெரும்பாலும் தென் மாவட்டம், மேற்கு மாவட்டங்களின் உள்ள தொகுதிகள் அவை. எதுவும் சொல்லாமல் பட்டியலை வாங்கிக்கொண்டு தலையாட்டிவிட்டு வந்துள்ளனர் அதிமுக தலைவர்கள்”. என்றார் போஸ் பாண்டி
கிட்டதட்ட அதிமுகபாஜக கூட்டணி உறுதி ஆகிவிட்டதுஇதனால் திமுகவுக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளதுவேகமாக அதிமுக பாஜக கூட்டணியை எதிர்க்க முடியாதுஎதிர்க்காமல் அரசியலும் செய்ய முடியாது என்ன செய்யப்போகிறோம் என்கிற இருதலைக்கொள்ளி மனநிலையில் உள்ளது திமுக தலைமைஎன்று குமார்ஜி தன் பங்குக்கு கூடுதல் தகவலை சொன்னார்ஒரு விஷயம் மறந்துட்டேன் வெள்ளிக்கிழமை ஜிஸ்கொயரின் முக்கிய அதிகாரி புருஷோத்தமன் குமார் என்பவரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர் ஐடி அதிகாரிகள்இந்த புருஷோத்தமன் குமார் ஜிஸ்கொயரின் அனைத்து பரிமாற்றங்களையும் அறிந்தவர் என்பது கூடுதல் தகவல்இதுதான் இதுவரை உள்ள ரெய்டு தகவல்இன்னும் வரும் வரவர அவ்வப்போது சொல்கிறேன்என்றார் கோபால்
ஒரு முக்கியமான விஷயம் சொல்கிறேன் கேளுங்கள் என்ற கோபால் ஆரூத்ரா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக பிரமுகர் ஹரீஷ் சக கைதி ஒருவரிடம் கேஷுவலா சில தகவல்களை பேசியிருக்கிறார். என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் எப்படியும் 90 நாட்கள் வைக்க முடியுமா? அடுத்து நான் வெளியே வந்து வழக்கை வாதாடுவேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது. அனைத்து பணத்தையும் பத்திரமாக வைத்துள்ளேன். வெளியில் வந்தவுடன் சினிமாவில் நடிக்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இவ்வளவு தைரியமா பேசுறியேண்ணே எப்படி என்று கேட்டபோது பணம் இருந்தால் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் சந்திக்கலாம். அதுவும் இல்லாமல் பாஜகவில் இருக்கும் ஆஜானுபாகுவான அந்த நபர் அமலாக்கத்துறை வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் நான் பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கார். அவரது டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி எனக்காக பல தடவை டெல்லிக்கு சென்று பேசியிருக்கிறார். ஒவ்வொரு தடவையும் அவர் எனக்காக செல்வதற்கும் அங்கு தேவைப்படும் வேலைக்களுக்காகவும் 2 சி, 3 சின்னு கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.
அப்படியா இதுவரை எவ்வளவு வாங்கியிருக்கிறார் அவர் என்று கேட்டதற்கு 60 சி வரை கொடுத்திருக்கிறேன் என்று ஹரீஷ் சொன்னதைக் கேட்டு சக கைதிகள் மலைத்து போய்விட்டார்களாம். வெவரமான ஆளுண்ணே நீ என்று பாராட்டியுள்ளார்கள். பாஜகவில் இருக்கும் அந்த ஆஜானுபாகுவான நபர் யாருன்னு நாம் சொல்லத்தேவையில்லை என்ற கோபால் அவர்கிட்ட என்றைக்கு தமிழக போலீஸ் போகப்போகிறார்களோ, இது தெரிந்துதான் அண்ணாமலைக்கு பின்னால் அவர் ஒளிந்துக்கொண்டு அரசை கடுமையாக விமர்சிக்கிறார் என்று சிரித்த கோபால், தம்பிகளா ஒருவிஷயம் பார்த்தீர்களா? எத்தனையோ ஆண்டுகளாக பாஜகவில் மூத்த தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். கொள்கை ஏற்று கட்சிக்காக தமிழகத்தில் பல அவமானங்களை தாங்கி கட்சியை வளர்த்து அதில் சிலர் ஓரங்கட்டப்பட்டும் இருக்காங்க. செந்தில்பாலாஜி மாதிரி பல கட்சிகள் போய் நேற்று பாஜகவுக்கு வந்தவர் எல்லாம் கோடியில் திளைக்கிறார்கள் பார்த்தீர்களா?, இதை நான் சொல்லல பாஜக முக்கிய தலைவர் ஒருத்தரே சக நண்பரிடம் சொல்லி குறைப்பட்டிருக்கார்” என்றார் கோபால்.
“திரும்ப செய்திகள் நிறைய சேந்துச்சுன்னா, விரைவாவே கூடுவோம். தமிழகம் பரபரப்பாகிட்டு இருக்கும். நாம அடிக்கடி பேச வேண்டி வரும்” என்று கூறியபடியே கமால் பாய் கிளம்ப, மற்றவர்களும் கிளம்பினார்கள்.
பாசறை எக்ஸ்க்ளூசீவ்
முதல்வர் கனவோடு இருக்கும் “பவர்”புல் அமைச்சர் மே இறுதிக்குள் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவார். அதையொட்டி தமிழகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்.
வெளிநாடு சென்றுள்ள ‘ஈசன்’ இந்தியா திரும்புவதா வேண்டாமா என்ற மனக் குழப்பத்தில் இருக்கிறார். அனைத்து விவகாரங்களையும் இங்கிருந்தே பார்த்துக் கொள்கிறோம்; எதற்கு இந்தியா போய், விசாரணையை எதிர்கொண்டு… என யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
ஆட்சியில் நிலவி வரும் குழப்பங்களை குறைக்க, வாரிசுக்கு துணை முதல்வர் அளித்து அரை டஜன் துறைகளை ஒப்படைக்கலாமா என்று மூத்தவர் யோசிக்கிறார்.
ஜி ஸ்கொயர் ரெய்டு தொடங்கியதிலிருந்து, அதிகாரிகளிடம் முதல்வர் குடும்பம் பற்றி ஒரு அலட்சிய உணர்வு தெரிகிறது. இவ்வளவுதானா இந்த குடும்பத்தின் செல்வாக்கு என்ற போக்கு நிலவுகிறது.
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...