Thursday, May 4, 2023

இறைவனிடம்_பேசுகிறேன்...!

 காரில் இருந்து இறங்கிய ஒருவர் தன் கையிலிருந்த உணவுப் பொட்டலங்களை சாலையோரம் குழந்தைகளுடன் துவண்ட நிலையில் இருந்த பெண்மணியிடம் கொடுத்தார். இந்தாம்மா இதில் சாம்பார் சாதம், தயிர் சாதம், பிரிஞ்சின்னு மூனு பொட்டலம் இருக்கு சாப்பிடுங்க என்றார். அவள் சந்தோஷத்தில் பொங்கி பிள்ளைகளை எழுப்பினாள். டேய் பசங்களா எந்திரிங்க... எந்திரிங்க... சாப்பாடு வந்துருச்சி சாப்பிடலாம் என்று...

குழந்தைகளுக்கு மாற்றி மாற்றி ஊட்டி தானும் ஒரு வாய் சாப்பிட்டாள். இவரை இடையில் பார்த்து புன்னகைத்த வண்ணம் கண்களால் நன்றி கசிய உண்டு மகிழ்ந்தாள். திடீரென ஏதோ சிந்தித்த வண்ணம் அவர் காரின் அருகே நோக்கி நகர்ந்தார். காரின் உள்ளிருந்த பழம் பையையும், பிஸ்கட்ஸ் பையையும் கொண்டு வந்து, இந்தாம்மா குழந்தைகளுக்கு கொடு என்றார். அந்தப் பெண் அவர் காலில் விழுந்தே விட்டாள். அய்யா..... ஆஆஆ என்று.
இந்தாம்மா எழுந்திரு மனுஷா காலில் விழாத. கோயில் போயி சாமி காலில் விழுமா என்றார். அவள் சொன்னால் இன்று என் பசியையும், என் குழந்தைகள் பசியையும் தீர்த்த கடவுள் நீங்கதான் சாமி. அதான் காலில் விழுந்தேன் என்றாள். நம்ம கடவுள் இப்படி மனித உருவில் மாறுவேடத்தில் தான் வருவார். இன்று உங்களுள் இறைவனைக் கண்டேன். கண்டது மட்டுமில்லை. பேசுகிறேன் .. ஆம்! #இறைவனிடம் #பேசுகிறேன். நீங்களே இறைவன் என்றாள்.
அம்மா! நானோ உங்களுள் இறைவனைக் கண்டு சிலிர்த்து போயி மீண்டும் காருக்குள் இருக்கும் பழங்களை எல்லாம் கொண்டு வந்து கொடுக்க எண்ணினேன். நீங்களோ என்னை இறைவன் என்கிறீர். அந்த சாப்பாட்டை உண்ணும் அந்த நொடியில் உங்கள் முகத்திலும், குழந்தைகள் முகத்திலும் ஒரு புன்னகை எனைப்பார்த்து வந்ததே....!
அதில் ஒரு தேஜஸ் கண்டேன். மெய் சிலிர்த்து போனேன். நானும் இறைவனைக் கண்டேன் உங்களுள். மேலும் இறைவனிடம் பேசுகிறேன் என்றாரே பார்க்கனும்.
இவ்வளவு தாங்க எல்லோரும் இறைவனிடம் பேசலாம்....
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று சும்மாவா சொல்லி இருப்பாங்க?
வாழ்வோம்
வாழ வைப்போம்
வாழ வைத்து வாழ்வோம் 🙏🏻
வாழ்த்துக்கள்
எல்லோருக்கும் 💐
May be an image of 2 people and text that says "இறைவனிடம் பேசுகிறேன்...!"
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...