Saturday, June 17, 2023

எனக்கொரு விஷயம் புரியல்லை .

 சேத்துப்பட்டு ஸ்டேஷனில் பிக்பாக்கெட் அடித்து (150 ரூபாய்!) ஒருவன் மாட்டினால் நூறு பேர் கூடி தர்ம அடி போடுகிறார்கள். போலீஸ் அவனைப் பிருஷ்டத்தில் உதைத்துக் கூட்டிச் செல்கிறது. ஸ்டேஷனில் இன்னும் அதிக கவனிப்பு.

அதே போலவே வீடுகளில் ஒரு பவுன் இரண்டு பவுன் நகையும், சில ஆயிரம் பணமும் திருடியவர்களை சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துப் போய் ஜட்டியோடு உட்கார வைத்து விசாரிக்கிறார்கள். ‘எனக்கொண்ணும் தெரியாதுய்.....’வாக்கியத்தை முடிக்குமுன் புறங்கையால் செவிட்டில் அடிக்கிறார்கள்.
’அடிக்காதீங்க சார்’ என்றால் இடுப்பில் உதை.
அதுவே கோடிக் கணக்கில் சுருட்டியவர்கள் என்றால்,
1. மனித உரிமை ஆணையம்
2. கைது முறைமைகள்
3. ஆஸ்பத்திரி
4. ஆப்பரேஷன்
5. பழிவாங்கல் என்று அறிக்கைகள்
6. திருப்பி அடிச்சா தாங்க மாட்டே என்கிற சவால்கள்
என்னங்க இது?
திருடினா கோடிக் கணக்கில்தான் திருடணுமா? அதுதான் பாதுகாப்பா? சோத்துக்காக பிக்பாக்கெட் அடிக்கிறவன் தேசத் துரோகியா?
திருடர்களிலும் லோ கிளாஸ், மிடில் கிளாஸ், ஹை கிளாஸ் இருக்கிறதா?
சேத்துப்பட்டில் பிக்பாக்கெட் அடித்தவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு புரண்டால் இவ்வளவு உபச்சாரங்கள், வழக்குகள், வியாஜ்யங்கள் இருக்குமா?
வீட்டில் திருடியவன் வலியில் புரண்டால் இந்த உபச்சாரம் இருக்குமா?
என்ன குற்றவியல் சட்டம் இந்நாட்டில்?
நூறு ரூபாய்த் திருட்டுக்கும் கோடி ரூபாய்த் திருட்டுக்கும் சட்டத்தில் வேறுபாடுகள் சொல்லப்பட்டுள்ளனவா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...