இந்த ரயில் விபத்தை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம்.
அஸ்வினி வைஸ்ணவ், சிறந்த நிர்வாகி, நேர்மையான உழைப்பாளி, படிப்பின் உச்சம், அகந்தை இல்லாத மனிதன், இவரின் கீழ் இந்திய ரெயில்வே அபாரமான வளர்ச்சியை கண்டு கொண்டு இருந்த வேளையில் இயற்கைக்கே அது பொறுக்க வில்லை போல.தடங்கல் ஏற்படுத்துகிறது.ஆனால் அஸ்வினி அவர்கள் இதை அனுபவமாக ஏற்றுக் கொண்டு இந்திய ரயில்வேயின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார். இரண்டு நாட்களாக மக்களோடு மக்களாக, பணியாளர்களோடு பணியார்களாக இருந்து சீரமைக்கும் பணியில் தன்னை மந்திரியாக இல்லாமல் சக மனிதனாக ஈடுபட்டு இருப்பது இது போன்று விபத்துகள் நடக்கும் போது அதிகாரத்தில் இருப்போர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மிக சிறந்த உதாரணம்.விபத்தில் தப்பியவர்கள் ரயில்வே நிர்வாகம் சிறந்த மருத்துவ உதவி மற்றும் நல்ல உணவு கொடுத்தார்கள் கொடுத்து கொண்டு உள்ளார்கள் என பேட்டி அளிப்பதை கேட்கும் போது பாஜக அரசு சொல்வது மட்டுமல்ல செயலிலும் உறுதியாக உள்ளார்கள் என்பதை தெளிவு படுத்துகிறது. 7ஆம் தேதி முதல் இந்த வழியாக வழக்கம் போல எல்லா ரெயில்களும் ஓடும் என்பதை ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளதிலிருந்து நிவாரணப் பணி எவ்வளவு துரிதமாக நடைபெறுகிறது ( 4 நாட்களுக்குள் )என்பது தெரிகிறது.
இறந்த அனைத்து மனிதர்களின் ஆன்மாக்களும் சாந்தி அடையட்டும்
காயம் அடைந்தவர்கள் உடல் வலி மன வலியில் இருந்து விடுபட்டு சிறப்பான வாழ்க்கை அமைய பெறட்டும்.
இதுவரை நாம் கேள்விப்பட்டிலேயே மிகச் சிறந்த ரயில்வே அமைச்சராக இருந்து வருகிறார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். இந்த இக்கட்டான நேரத்தில் மக்களோடு மக்களாக களத்தில் இருக்கிறார் அவர்.
இந்த படங்களை பாருங்கள் நண்பர்களே... அவர்கள் நம்மை விட அதிகம் கவலைப்படுகிறார்கள். எதற்கெடுத்தாலும் கண்மூடித்தனமாக மத்திய அரசை விமர்சனம் செய்வது என்பது தமிழர் அறம் அல்ல.
No comments:
Post a Comment