எடப்பாடியாரின் மைனஸ்களை சுருக்கமாக உரைக்கலாம் என்று தான் ஆரம்பித்தோம்!
தொடரை நீட்டிக்க முடிவு செய்திருக்கிறோம்
காரணம்??
கண்ணா,,,,,உன்னை மிகத் தீவிரமாகவும் நெருக்கமாகவும் நேசிப்பது யார்??
கிருஷ்ணன் சொல்கிறான்--
சகுனி!!
அவனுக்கே என் நெஞ்சில் முதலிடம்??
அர்ஜுனனுக்கு பயங்கர ஷாக்??
உயர்ந்த ரிஷிக்களும்--கோபியரும்--அவர்களையெல்லாம் விட--24 மணி நேரமும் கூடவே இருக்கும் தம்மையும் புறக்கணித்துவிட்டு--
சகுனி பெயரைச் சொல்கிறானே சக்ரதாரி??
கண்ணன் சிரித்துக் கொண்டே சொல்கிறான்--
ஆம் அர்ஜுனா! என் அருள் வேண்டி மற்றவர்கள் என்னை நினைக்கும்போது--
என்னை எப்படி அழிக்கலாம் என்று மிக ஆழமாக 24 மணி நேரங்களும் நினைத்துக் கொண்டிருப்பவன் சகுனியே!
என்னை,,,,,அழிக்கவோ--இல்லை--ஆராதிக்கவோ--
எப்படி நினைத்தால் என்ன?
என்னைப் பற்றி நினைப்பதில் உள்ள ஆழம் தானே முக்கியம்??
இந்தக் கதையின்படிப் பார்த்தால்--
இங்கே,,,,அ.தி.மு.கவினர்--குறிப்பாக ஊடகங்களில் உலா வரும் பெரும்பாலான அக்கட்சி நிர்வாகிகள்--
அவர்களது தலைமையை நினைப்பதை விட--
அண்ணாமலையையே அதிகம் நினைக்கின்றனர்??
ஒரு முக நூல் தோழர்--என் நட்பிலிருந்து விலக்கப்பட்டவர்---
எதற்கு என்னுடன் வாதம் செய்வதாக இருந்தாலும்--
அந்த விஷயத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல்--
சங்கிகளையும்--அண்ணாமலையையும்--மோடியையும் திட்டித் தீர்ப்பார்???
அடக்க மாட்டாத சிரிப்பு அடியேனிடம் கிளம்பும்!
நேற்றைய என் பதிவில் கூட--
கோவையார் என்று என்னால் மிக அன்பாக அழைக்கப்படும்--
எஸ்.எம்.ராமச்சந்திரன் கூட அண்ணாமலையைத் திட்டி தன் ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டார்??
இன்னொரு பயங்கரக் காமெடி என்னவென்றால்--
எடப்பாடியார் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவார்!
காலம் பதில் சொல்லும்!!--
இவைகள் என் அன்புத் தம்பி எஸ்.எம்.ராமச்சந்திரனின் அடுக்கடுக்கான சபதங்கள்--இல்லை--சப்தங்கள்??
நேற்றையப் பதிவில் எடப்பாடியார் ஆட்சிக்கு வரக் கூடாது என்றோ--
அவர் இனி வர மாட்டார் என்றோ எங்கேயாவது துளியாவது நாம்சொல்லியிருக்கிறோமா?
இல்லை,,,,,
அண்ணாமலை தான் வருவார் என்று ஆரூடம் சொல்லியிருக்கிறோமா?
எடப்பாடியாரின் நல்ல பண்பையும் பதிவிட்டிருக்கிறோம்
அவரது நாலரை வருட ஆட்சி நிர்வாகத்தையும் பலமுறை சிலாகித்திருக்கிறோம்!!
முகத்துக்கு நேரே விமர்சி!
முதுகுக்குப் பின்னே பாராட்டு!!---
இது தனி மனித வாழ்வின் நெறி என்றால்--
முகத்துக்கு நேரே மண்டியிடு
முதுகுக்குப் பின்னே குழி பறி!--
இது அரசியல் சாஸ்த்ரம்??
இப்படித் தானே---
ஜெ என்னும் ஆண்மை மிகு பெண் யானையை--
முகஸ்துதி என்னும் தழைகளாள் மறைக்கப்பட்ட
வஞ்சகம் என்றக் குழியில் தள்ளி அவரை முடித்தார்கள் சிலர்??
அதே நிலை எடப்பாடிக்கும் ஏற்பட வேண்டும் என்று அவரது விசுவாசிகள் நினைக்கலாமா??
எம்மைப் போன்றவர்களுக்கு ஒன்றுமே இல்லை--
அவுட் ஆஃப் பாலிடிக்ஸ்--
ஜஸ்ட் வேடிக்கை மட்டுமே பார்க்கும் வெகு ஜன மக்கள்
ஒருவரை முகத்துக்கு நேரேப் புகழ்வதும்-- ஊக்கப்படுத்துவதும்--- அரசியல்-- விளையாட்டு போன்ற தளங்களில் தேவையே!
காரணம்
மோடிவேஷன் என்னும் ஊக்கப்படுத்துதல் தான் அங்கே
ஆக்டிவேஷன் என்னும் செயலாக்கத்துக்கு அடிப்படை!!
ஆனால் அதுவே ஓவராக அமைந்துவிட்டால்??
தலை கணத்து நிமிரும்போது
கனத்த தலைக் கவிழ்ந்து போகும்??
ஆண்டவரே விமர்சனத்துக்கு உட்பட்டவர் என்னும் போது--
எடப்பாடி அவர்கள்,,, அந்த இறைவனை விட எந்த விதத்தில் உசத்தி??
எம்.ஜி.ஆர் காலத்தில் கொஞ்சமும் ஊடகங்கள் இல்லை
இருந்த ரேடியோ ஒன்றும் மத்திய அரசின் ஏவலாள்!!
அவரை விடுங்கள்--
இந்தக் கட்சியின் கரை வேட்டிகளால்--
அம்மன் என்றும்,,, ஆதிபராசக்தி என்றும் அழைக்கப்பட்ட ஜெ வின் காலத்திலும்-- ஊடகங்கள் அவ்வளவாக இல்லை??
அவர் தனியாக இருந்து களம் காணவில்லையா--
வாகை சூடவில்லையா???
விமர்சனங்களை ஏற்பவன் தான் விவேகமான தொண்டன்
அந்த விமர்சனங்களை ஆராய்ந்து உள் வாங்குபவன் தான் தலைவன்
அதை விடுத்து--
தலையை சுற்றி எப்போதும் ஆடிக் கொண்டே இருந்தால்
தலையைச்சுற்றி கீழே விழ வேண்டியது தான்??
இன்றைக்கு இவ்வளவு பேசியதற்குக் காரணம்---
இந்தத் தொடரைப் புரிந்து உள் வாங்குங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளவே!!
நாளை---எடப்பாடியார் மீது
சிலக் கடுமையான விமர்சனங்களோடு வரப் போகிறோம்???
No comments:
Post a Comment