*தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக நடந்து வரும் மிகப்பெரிய ஊழல் எது என்றால்?*
நம்பர் 2 பில்கள் -
இது சாதாரன வியாபாரி முதல்-
தமிழக அரசின் அத்துனை துறைகளிலும் பரவிக் கிடக்கிறது -
போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்க முக்கிய காரணம் இந்த நம்பர் 2 டிக்கட்கள் -
இப்பொழுது நான் எனக்கு மிகவும் தெரிந்த மணல் குவாரிகளில் நடக்கும் கொடுமைகளைப் பட்டியலிடுகிறேன் -
தமிழகத்தில் அரசு நடத்தும் எந்த ஒரு மணல் குவாரியிலும் நடப்பது இதுதான் -
ஒவ்வொரு வருடம் பட்ஜெட்டின் போது அரசாங்கம் மணல் குவாரிகளின் மூலம் அரசுக்கு 5000 கோடி வருமானம், 6000 கோடி வருமானம் என்று தகவல் தரும் -
ஆனால், உண்மையான மணல் குவாரி வருமானம் தெரிந்தால் நீங்கள் எல்லோரும் மயங்கி விழுந்து விடுவீர்கள் -
ஒரு யூனிட் மணலின் விலையாக அரசு நிர்ணயித்திருப்பது 324 ரூபாய் -
இதற்கு Loading Contract_
ஆறுமுகசாமி, படிக்காசு, SR, சேகர்ரெட்டி போல வெகு சிலருக்கு தமிழ்நாடு முழுவதும் கொடுக்கப்பட்டிருக்கும் -
நிர்னயிக்கப்பட்ட Loading கூலி ஒரு யூனிட்டிற்கு நூறு ரூபாய் அளவில் இருக்கும் - இதை அரசாங்கம் இவர்களுக்குக் கொடுக்கும் -
ஒவ்வொரு குவாரியிலும் PWD - ஊழியர் இரண்டு பேர் இருப்பார்கள் -
மாலை சரியாக 6 மணிக்கு ஒவ்வொரு ஊழியரும் தலைமை பொறியாளருக்கு எத்தனை யூனிட் விற்பனை செய்யப்பட்டது என்ற கணக்கைத் தருவார்கள் -
ஆனால்,
அதற்குமுன் அங்கு நடப்பதை பற்றி தெரிந்து கொள்வோம் -
ஒரு யூனிட் மணல் ரூ 324 அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும் என்ற நிலையில் நம்மிடம் ஒவ்வொரு குவாரியைப் பொருத்து 2000 முதல் 3000 வரை வசூல் செய்வார்கள் - ஒரு யூனிட்டிற்கு -
அதைக் கொண்டு செல்ல பாஸ் வழங்குவார்கள் - (இது கனிமவளத்துறை கொடுப்பது, PWD அதிகாரிகளின் கையொப்பங்களும் இருக்கும்)
இதில் 20 லிருந்து 25% மட்டுமே ஒரிஜினல் பாஸாக இருக்கும் -
மீதம் 75 லிருந்து 80% பாஸ் நம்பர் 2-
அதாவது இவர்களே அச்சடிப்பது -
ஒரிஜினல் பாஸில் கையெழுத்திட்டவர்கள் இதிலும் கையெழத்திட்டிருப்பார்கள் -
இப்பொழுது இவர்கள் அரசுக்கு கொடுப்பது வெறும் 20 லிருந்து 25% கணக்குத்தான் ஒன்று -
இரண்டாவதாக வசூல் எவ்வளவு செய்தாலும் ஒரு யூனிட்டிற்கு 324 ரூபாய்தான் கணக்கில் வரும் -
இன்னும் எளிமையாக -
ஒரு 100 யூனிட் மணல் 50 லாரிகளில் வெளியேறினால் - இவர்கள்
வசூல் செய்வது - 200000 (இரண்டு லட்சம் ரூபாய் முதல் 300000 மூன்று லட்சம் ரூபாய் வரை )
கணக்கு கொடுப்பது - 6,480 முதல் 8, 100 வரை -
வித்தியாசம் புரிகிறதா?
அதாவது வசூலாகும் பணத்தில் 2.5% (இரண்டரை சதவீதம்) தான் கருவூலத்திற்குச் செல்கிறது -
மீதிப் பணம் எல்லாம் -
கருப்புப் பணமாக அரசியல்வாதிகள் முதல் அடிமட்டம் வரை செல்கிறது -
இதுவரை இத்துனை ஆண்டுகளில் எத்துனை லட்சம் கோடிகள் இது போல அரசாங்கத்திற்குச் சேர வேண்டிய பணம் கொள்ளை போய்க் கொண்டிருகிறது தெரியுமா?
இது ஒரு துறையில் மட்டும் -
இதே போல் தான் அத்துனை துறைகளிலும் -
Tasmac - க்கில் நடப்பதும் இதுதான் -
பஸ் டிக்கெட்டில் கூட இரண்டாம் எண் டிக்கெட் இருக்கிறது -
இது தொடர்ந்து 40 வருடங்களாக நடந்து வருகிறது -
நமது இயற்கை வளங்களை சுரண்டுவது மட்டுமன்றி -
அதில் வரும் வருமானம் கூட நமக்கில்லை என்பதுதான் உண்மை நிலை -
நமது கோவில்களில் கூட அர்ச்சனை சீட்டு முதல் தரிசன டிக்கெட் வரை அத்துனையும் நம்பர் 2 பில்கள் தான் -
இந்தக் கட்டுரை கற்பனையாக மிகைப்படுத்தி எழுதப்பட்டதில்லை -
அத்தனையும் உண்மை -
உண்மையில் இதற்குத்தான் நாம் கோபப்பட வேண்டும்.
போராட வேண்டும் -
இந்த ஊழல்களை மக்களிடம் கொண்டு சேர்த்து இவர்களின் முகமூடிகளைக் கிழிக்க வேண்டும் -
No comments:
Post a Comment