அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக தேவர் குரு பூஜைக்கு நேற்று சென்றார்.
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் அங்கே சென்றார்.
இங்கே எடப்பாடி மரியாதை செலுத்தும் போதே.. அவருக்கு எதிராக கடுமையான கோஷம் எழுப்பப்பட்டது.
எடப்பாடி ஒழிக.. இபிஎஸ் ஒழிக என்று கோஷம் எழுப்பப்பட்டது .
எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோரில் எதிர்க்கப்பட்டது திட்டமிட்டது அல்ல.
அது தென்னெழுச்சியான எதிர்ப்பு.
எடப்பாடி பழனிசாமி சசிகலாவிற்கு துரோகம் செய்துவிட்டார். அதே போல் டிடிவி தினகரனுக்கு துரோகம் செய்துவிட்டார்.
அதை எல்லாம் அவர் செய்த தவறு ..
ஓ பன்னீர்செல்வத்திற்கு துரோகம் செய்தது.
அதை தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தொண்டர்கள் இதனால் கோபம் அடைந்துள்ளனர்.
பன்னீர்செல்வத்தை கருவேப்பிலை மாதிரி எடப்பாடி மீது தூக்கி எறிந்துவிட்டார் என்று முக்குலத்தோர் கருதுகிறார்கள்.
முக்குலத்தோர் மட்டுமில்லை. பொதுமக்களும் இதைதான் கருதுகிறார்கள்.
அதனால்தான் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கப்பட்டார்.
இது தேர்தலில் எதிரொலிக்கும்.
நான் இதை உணர்ந்த காரணத்தினாலேயே இப்படி சொல்கிறேன்.
2019ல் மனோஜ் பாண்டியன் நல்ல வாக்கு எடுத்தார். பன்னீர் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.
ஓ பன்னீர்செல்வம் இருந்ததால் இதை வென்றனர்.
அவர் இல்லாமல் இந்த தென் மாவட்ட வாக்குகளை எடப்பாடி வாங்க முடியும். அவருக்கும் இது தெரியும்.
அதனால்தான் தென் மாவட்ட மக்களை கவர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி களமிறங்கிவிட்டார் .
இதனால்தான் அவர் குரு பூஜைக்கு செல்கிறார்.
பன்னீர் செல்வம் இல்லாமல் அவர் வென்று நிரூபிக்க வேண்டும்.
அதனால் எடப்பாடி அவமானம், அசிங்கம் அனைத்தையும் சகித்துக்கொள்ள வேண்டும்.
கூட்டணியில் அவருக்கு யாரும் இல்லை.
அப்படி இருக்க தென் மண்டலத்தில் அவர் பிரபலம் அடைய இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை.
கூட்டணிக்கு இவர்கள் வருகிறார்கள். அவர்கள் வருகிறார்கள்.. காங்கிரஸ் வருகிறது .. விசிக வருகிறது என்றெல்லாம் சொல்லலாம்.
ஆனால் இவர்கள் எல்லாம் வராமல் எடப்பாடி எந்த முடிவும் எடுக்க முடியாது.
முக்குலத்தோர் இல்லாமல் வெல்ல முடியாது.
முக்குலத்தோரை எதிர்த்தால் தெற்கு தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்று எடப்பாடிக்கு தெரியும்.
அதனால்தான் அவர் குரு பூஜைக்கு சென்றுள்ளார்.
இதனால் அவருக்கு எந்த பலனும் கிடைக்காது.
எந்த வகையிலும் அவருக்கு ஆதரவாக வாக்குகளை இந்த விஷயம் பெற்றுத்தராது.
இது எல்லாம் தெரிந்துதான் அண்ணாமலை எடப்பாடியை விரட்டினார்.
எடப்பாடிக்கு பலம் இல்லை என்று அண்ணாமலைக்கு தெரியும்.
அண்ணாமலை கோவையில் ஜெயிக்க வாய்ப்பு உள்ளது, மந்திரி ஆவார் என்றெல்லாம் கூறினார்கள்.
கடந்த தேர்தலில்பாஜக அதிமுகவுடன் இருந்தும் கூட குறைவான வாக்குகளை பெற்றது.
பாஜக அதிமுக இல்லாமலே அதற்கு முன்பே நல்ல வாக்குகளை வென்றுள்ளது.
இதை எல்லாம் புரிந்துகொண்டுதான் அண்ணாமலை எடப்பாடியை விரட்டி அடித்துள்ளார்.
அண்ணாமலைதான் எடப்பாடியை விரட்டி அடித்துள்ளார்.
எடப்பாடி கிறிஸ்துவ, முஸ்லீம் வாக்குகளுக்காக கூட்டணியை உடைத்தார் என்பதெல்லாம் கதை.
அதிமுக கட்சி எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வந்ததில் இருந்தே வரிசையாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
லோக்சபா தேர்தல் தோல்வி , இடைத்தேர்தல் தோல்விகள், சட்டசபை தோல்வி, உள்ளாட்சி, நகராட்சி தோல்வி என்று வரிசையாக தோல்விகளை சந்தித்தது.
பாஜக கூட்டணியில் இருந்து வந்தாலும் எடப்பாடி பழனிசாமி பாஜகவை எதிர்க்க மாட்டார்.
அவர் இந்துக்களை பகைக்க விரும்ப மாட்டார்.
அதேபோல் ஐடி ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து பேச மாட்டார்.
பாஜகவை எதிர்க்காமல் அவர் திமுகவை மட்டுமே எதிர்ப்பார்.
தென் மண்டலத்தில் எடப்பாடிக்கு பெரிய பலம் இல்லை.
வன்னியர் இடஒதுக்கீட்டையும் கூட அவர் முழுமையாக செய்யவில்லை.
ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கூட அவர் முயற்சி செய்யவில்லை.
இதை ராமதாஸ் கையில் எடுப்பார். ஜாதிவாரி கணக்கெடுப்பை ராமதாஸ் கையில் எடுப்பார் .
அப்போது எடப்பாடிக்கு மேலும் நெருக்கடி ஏற்படும்.
வன்னியர் தரப்பில் இருந்தும் எடப்பாடிக்கு நெருக்கடி ஏற்படும்.
எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது.
அவர் மீண்டும் முதல்வராகவே முடியாது. அதுதான் உண்மை.
எடப்பாடி 10.5 சதவிகிதம் கொடுத்ததால் பல சமூகங்கள் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளன.
அதையும் கூட முழுமையாக கொடுக்காத காரணத்தால் வன்னியர்களும் கூட எடப்பாடிக்கு ஆதரவு தரவில்லை.
மற்றபடி எடப்பாடிக்கு இரண்டு பக்கமும் சிக்கலாக மாறும்.
அவரின் தற்போதைய செயல்பாடுகள் மேலும் முக்குலத்தோர் இடையே கோபத்தை ஏற்படுத்தும்.
அவர் முக்குலத்தோரை மதிக்கவில்லை.
இப்படியே தொடர்ந்தால் முக்குலதோர் எடப்பாடிக்கு எதிராக திரும்புவார்கள்.
2024ல் எடப்பாடி மோசமாக சிக்கிக்கொண்டார்.
அதனால் 2024ல் எடப்பாடி தோல்வி அடைவார்.
No comments:
Post a Comment