Friday, November 3, 2023

பசும்பொன் ஐயா தன் அந்திம காலங்களில் சொன்னது.

 "அடியேன் உடல்நலம் பாதிக்கபட்டிருப்பது உண்மை, என்மேல் அன்பானவர்களும் தேசாபிமானிகளும் எம்மை ஒரு அறுவை சிகிச்சைக்கு வலியுறுத்துகின்றார்கள், என்னை இன்னும் வாழ சொல்கின்றார்கள்

ஆனால் ஒரு சுத்தமான சனாதன தர்மத்தை பின்பற்றும் நான் எப்படி என் தர்மத்தை மீறமுடியும்?
ஒருவனுக்கு என்ன வந்தாலும் அவன் தன் கர்மத்தை ஏற்றுகொள்ள வேண்டுமே தவிர கேவலம் உடல்மேல் ஆசைகொண்டு வாழ்வதற்காக திசைமாறினால் அவன் தன் கர்மத்தில் இருந்து தப்பிக்க வழிதேடுபவன் அல்லவா?
எம் தர்மம் எமக்கு அப்படி போதிக்கவில்லை, வருவதை ஏற்றுக்கொள் என்கின்றது. எம்கர்மத்தை நானே சுமக்க இப்பிறவிக்கு வந்திருக்கின்றேன் அதை முழுக்க சுமக்காமல் போகமாட்டேன்
உயிருக்கு ஆபத்து என்கின்றார்கள், நல்ல சனாதான தர்மவாதி உடல் அழியகூடியது ஆத்மா அழியாதது என்பதை உணர்ந்தவன், அவ்வகையில் நான் இந்த உடலை விட்டு நீங்கினாலும் இன்று எம்மால் செய்யமுடியாத காரியங்களை மீள செய்ய இன்னொரு பிறப்பாக நான் வருவேன் என்பதை நம்புகின்றேன்
நான் இறப்பைபற்றி கவலைப் படவில்லை, நல்ல இந்து அப்படி கவலைபடவும் கூடாது, நான் இந்த உடலை பிரிந்தபின் இன்னொரு உடலில் குடியேறி இந்த இந்துஸ்தானத்துக்கும் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் எதையெல்லாம் செய்ய நினைத்தேனோ அந்த திருத்தொண்டை செய்துகொண்டே இருப்பேன்
முருகப்பெருமான் என்றும் என்னோடு இருப்பான். என்னோடு நடத்துவான் எனும் நம்பிக்கையில் நான் அடுத்த பிறப்பெடுத்து வந்து தேசபணியாற்ற தயாராகின்றேன்
எதை எல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்து, இந்த மண்ணை மீட்டெடுக்காமல் எம் கர்மா கழியாது, அதுவரை நான் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருப்பேன்.
ஏதாவது ஒரு உருவில் வந்து இந்த நாடும் எனது இந்து மதமும் வாழ நான் உழைத்துகொண்டே இருப்பேன், அதை யாராலும் தடுக்கமுடியாது.
May be an image of 3 people
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...