Friday, November 3, 2023

சாந்தாராம் ஜி அவர்களின் பாதம் தொட்டு வணங்கியது என் பாக்கியம். மும்பையில் குறும்பட விழாவில்.

 அதிபயங்கர குற்றவாளிகள் என சர்க்கார் முடிவெடுத்த 6 கைதிகளை நல்வழிப்படுத்தி, அவர்களை பண்புள்ளவரகளாக ஆக்கி சமூகத்தில் அவரகளது பொறுப்பை உணர்த்துகிறார் ஒரு காவல் அதிகாரி. உண்மையில் நடந்த இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்கிற படத்தை எடுத்தார். 1957-ம் ஆண்டு வெனிஸ் உலகத்திரைப்பட விழாவில் இத்திரைப்படம் வெள்ளிக்கரடி விருதினை பெற்றது.

1959-ல் வெளியான அவரது ஜனக் ஜனக் பாயல் பஜே திரைப்படம், வட இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். கதக் நடனத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த கதையில் பாரம்பரிய கலைவடிவடிவமான கதக் நடனத்தை படம் எடுக்கப்பட்ட காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றியமைத்து அதேசமயம் அதன் மெருகு குறையாமல் எடுத்தார். இந்த திரைப்படம் கதக் நடனத்திற்கு சமூகத்தில் இருந்த மதிப்பை பெருமளவில் உயர்த்தியதோடு சாந்தாராமுக்கு பல திசைகளிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுத்தந்தது. உலக திரைப்பட ஆளுமைகள் வரிசையில் வைத்து புகழப்பட்டார் சாந்தாராம்.
படத்தின் கதாநாயகி சந்தியாவின் கதாபாத்திரத்தால் கவரப்பட்டவர்களில் குறிப்பிட்ட மக்கள் என்றில்லாமல் நடுத்தர குடும்பம் முதல் பெரிய வீட்டுப்பெண்கள்வரை கதக் பயில ஆர்வம் கொண்டனர். வட இந்தியாவில் நிறைய கதக் நடனப்பள்ளிகள் உருவாகக் காரணமான இந்த திரைப்படம்தான் இந்தியாவின் முதல் வண்ணப்படமும் கூட.
முழுக்க முழுக்க வணிக சினிமாவில் இயங்கினாலும் தனது வாழ்வின் இறுதிவரை சமரசம் செய்துகொள்ளாத ஒரு சிறந்த இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக சாந்தாராம் விளங்கினார்.
ஒப்புயர்வற்ற சாதனையாளரான சாந்தாராம் மீது தமிழக ஆளுமைகள் பலருக்கு ஈர்ப்பு இருந்தது. “தன்னிகரில்லாத சிறந்த கலை ரசிகரான சாந்தாராம்தான் என் பட உலக குரு” என ஒரு மேடையில் அவரை பெருமைப்படுத்தினார் ஜெமினி அதிபர் வாசன். “நான் சாந்தாராமின் மாணவன்” என உருகினார் ஸ்ரீதர்.
சாந்தாராமின் பன்முக ஆளுமைத்திறமையால் கவரப்பட்ட இன்னொரு தமிழக பிரபலம் எம்.ஜி.ஆர். இந்தியாவின் பிரலங்கள் திரண்ட மிகப்பெரும் திரைப்பட விழா ஒன்றின் மேடையில் சாந்தாராமின் காலில் விழுந்து வணங்கினார் எம்.ஜி.ஆர். தன் வாழ்நாளில் எம்.ஜி.ஆர் பொது இடத்தில் இருவரது கால்களில் மட்டுமே விழுந்து வணங்கியிருக்கிறார். ஒருவர் அவரது நாடகம், சினிமா உலக வாழ்விற்கு அடித்தளமிட்ட எம்.கந்தசாமி முதலியாரின் மகன் எம்.கே. ராதா. மற்றொருவர் சாந்தாராம். சாந்தாராமின் 'தோ ஆங்கேன் பாரா ஹாத்' என்ற படம் எம்.ஜி.ஆரின் ஃபார்மூலாவை ஒட்டியிருந்ததால் அதை தமிழில் 'பல்லாண்டு வாழ்க' என்ற பெயரில் எம்.ஜி.ஆர். எடுத்தார். இந்த படத்திற்கு விமர்சனம் எழுதிய வெளிநாட்டுப்பத்திரிகைகள் இந்தியா நமக்கு பாடம் கற்றுத்தருகிறது என எழுதியது. இது சாந்தாராம் என்ற கலைமேதையின் திறமைக்கு சான்று. இதேபோல சாந்தாராமின்
'அப்னாதேஸ்' என்கிற படம்தான் 'நம் நாடு' என்ற பெயரில் எம்.ஜி.ஆர் ' நடிப்பில் வெளியானது.
சமூக சீர்திருத்தக் கருத்துகளை கலைவடிவத்துக்கு மாற்றி திரைப்படமாக்கும் கலையில் இன்றுவரை இந்தியத்திரையுலகிற்கு சாந்தாராம்தான் முன்னோடி.இந்திய திரையுலகிற்கு சாந்தாராம் ஆற்றிய சேவையை பாராட்டி 1985ம் ஆண்டு அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருதும், 1992 ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டன. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகத் திறமையோடு சுமார் அரைநுாற்றாண்டுகாலம் சினிமாவில் இயங்கி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான சாந்தாராம் 1990 ஆம் ஆண்டு தனது 89-வது வயதில் காலமானார்.
இந்திய ஒருமைப்பாட்டை தனது பல படங்களில் திரும்பதிரும்ப வலியுறுத்தியவர் சாந்தாராம். “தீன் பத்தி ச்சார் ரஷ்தா“ என்ற அவரது திரைப்படத்தில் ஒரு மாநிலத்தை சேர்ந்த கதாநாயகன் இன்னொரு மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். ஒருமைப்பாட்டை திருமண கலாச்சாரம் வழியே பொருத்தி அதை திரைப்படமாக வழங்கிய சாந்தாராம், திரைப்படத்தில் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளவில்லை; நிஜவாழ்விலும் அதை கடைபிடித்தார். ஆம், அவரது மருமகன்களில் ஒருவர் மராத்தி, மற்றொருவர் குஜராத்தி, மூன்றாமவர் அமெரிக்கர்.
1973 ல் ஒரு சினிமா இதழுக்கு பேட்டி அளித்த அவர் பேட்டியில், தனது மருமகன்களைப் பற்றி குறிப்பிட்ட சாந்தாராம், “இந்த காரணங்களுக்காக நீங்கள் என்னை அகில உலக மாமனார் என்று கூட அழைக்கலாம்” என்று முகத்தில் குறும்பு புன்னகையை தவழவிட்டபடிச் சொன்னார்.
#இந்தியத் திரையுலகின் சாதனையாளர்
சாந்தாராம் நினைவுநாள் இன்று !
May be an image of 3 people and wedding
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...