ராணுவ ஒழுங்கை வரித்துக்கொண்டு வாழ்ந்த கம்யூனிஸ்ட்.
2000க்கு முந்தைய கம்யூனிஸ்ட்டுகள் மட்டும்
எப்படி இப்படி இலகு வாழ்க்கை வாழ்கிறார்கள்?
என்று ஆச்சர்யப்பட்டே
என் ஆயுளில் பாதியை கழித்திருக்கிறேன்...
தெருமுனை பிரச்சாரத்திற்கு வருவதற்கே தலைவர்கள்
கேரவன் கேட்கும் இந்தக்காலத்தில் இவர்
சட்டை போட்ட காந்தி!
கேடி கே தங்கமணி கல்யாணசுந்தரம் சிந்தன் ரமணி உமாநாத் நல்லகண்ணு மாணிக்கம்
என சகாப்த மனிதர்களில்
மகுடமாய் வாழ்ந்தவர் சங்கரைய்யா...
ஆழ்ந்த இரங்கலை சொல்லி விட்டு அமைதி காக்கும் மரணம் இல்லை இவர் மரணம்......
பொதுவுடைமை சிந்தனையின் தமிழ்நாட்டின் மிச்சமிருந்த
இரண்டு அடையாளங்களில் ஒன்று நின்று போனது.........
மிதி வண்டியை மட்டுமே வாகனமாக கொண்டு கட்சி வளர்த்த அரசியல் தலைவர்.....
நேர்மையும் மக்கள் நலனும் மட்டுமே உயிர் மூச்சாக கொண்டு
வாழ்ந்த ஐயா..
இந்த பாழாய்ப்போன
மதுரை பல்கலைக்கழக
டாக்டர் பட்ட சர்ச்சை இல்லாதிருந்திருந்தால் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருப்பாரோ?...
சிரமப்படுத்தி சீக்கிரம்
அனுப்பியவர்கள் சார்பில்
நான் சிரம் தாழ்த்தி ஐயாவிடம் மன்னிப்பு
கேட்டுக்கொள்கிறேன்.
நாடு வாழும்வரை நல்லவர் சங்கரைய்யா புகழ் வாழும்"
வசதியில் திளைக்காத சில அற்புத கம்யூனிஸ்ட் தோழர்களில் #முதன்மையானவரும் மரியாதைக்குரியவருமான திரு.சங்கரைய்யா அய்யா அவர்களுக்கு என் பணிவான
#இறுதி வணக்கம்.#ஆழ்ந்த_இரங்கல் ..
No comments:
Post a Comment