காலில் ஏற்பட்ட காயம் அதற்க்கு அறுவை சிகிச்சை என இரண்டாண்டு அணியில் நீடிப்பதில் சிக்கல்..
2 ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம் பிடிக்க நடந்த யோயோ டெஸ்டில் தோல்வி..மோசமான பார்ம் வேறு.
தொடர்ந்து மனைவியுடன் தகராறு.அவர் மீது சூதாட்ட குற்றசாட்டு பிற பெண்களுடன் தொடர்பு தன்னை கொலை செய்ய முயற்சி
இந்த புகார்கள் எதுவும் நிரூபிக்க முடியாத நிலையில்மீண்டும் கிரிக்கெட்டிருளு வந்தார். அதோடு அவர் மனைவியுடன் விவாகரத்தும் ஆனது.
இதன் நடுவே இரண்டு முறை தற்கொலை முயற்சி..
இந்த உலக கோப்பையிலும் தேர்வாகி ஷர்துல் தாக்கூரை முன்நிறுத்தி சில போட்டிகளில் இவரை பெஞ்சில் அமர்த்தினார்கள்.
அத்தனை சூழ்ச்சிகளுக்கு பிறகும் புறக்கணிக்கவே முடியாத அளவுக்கு ஒரு மனிதன் தன் இருப்பை இவ்வளவு ஆணித்தரமா பதிய வைக்க எவ்வளவு தார்மீக பலம் இருக்கனும்.
அந்த தார்மீக பலத்துடன் தனக்கு வந்த அத்தனை சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி இந்தியா இறுதி போட்டிக்கு தேர்வாக காரணமானவர்களில் ஒருவர். .
முகமது ஷமி...
இந்த உ.கோ ஆட்டங்களில் ஆக்ரோஷமான அதே சமயம் மிக துல்லியமான தந்திரமான பந்து வீச்சு ஷமியினுடையது...
ஒரு நாள் உலக கோப்பை கிரிக்கெட்டில் 7 விக்கெட்களை வீழ்த்திய இந்தியாவின் முதல் பவுலர் ஷமி..
50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் மிக வேகமாக 50 விக்கெட்கள் கைப்பற்றிய வீரர் ஷமி..
என்னையா நாலு மேட்ச்ல பெஞ்ச்ல உக்கார வச்சீங்க என ஆறே ஆட்டங்களில் இந்த உலக கோப்பையின் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் ஷமி.
சாதனைகளின் சொந்தகாரராக நிற்கிறார் ஷமி
இன்று இந்தியா நியுசிலாந்தை வென்றது !
முகமது ஷமி இந்தியர்களின் மனதை வென்றார் !
No comments:
Post a Comment