புதியதாக ஒரு கிராமத்து பையனும் அவன் குடும்பமும்பட்டணத்துக்கு வந்தாங்களாம். அங்கே ஒரு ஷாப்பிங்மாலுக்கு போனாங்களாம். அங்கே அந்தப் பையன்ஒரு அபூர்வமான விஷயத்தைப் பார்த்தானாம்.
உடனே அப்பாவைக் கூப்பிட்டு, ‘‘அப்பா, அதோ அந்தசுவர் தானாவே ரெண்டா பிரிஞ்சி தானா மூடிக்குது!’’என்று காட்டினானாம்.
முன்ன பின்ன லிஃப்ட்டைப் பார்க்காத அப்பாவும்,‘‘நானும் இப்பதான் இப்டி ஒன்றை பாக்கறேன் மகனே!’’னு வாயைப் பிளந்தானாம்.
அந்த நேரம் பார்த்து ஒரு 40 வயது ஆன்ட்டி, பட்டனைத் தட்டி லிஃப்ட்டை திறந்து உள்ள போனாளாம். கதவும் மூடிக்கிச்சாம்.இந்த கிராமத்து அப்பாவும் மகனும் வாய மூடாம என்னதான் நடக்குதுனு பார்த்துக்கிட்டே இருந்தாங்களாம்.
பக்கத்துல இருந்த டிஸ்ப்ளேவுல நம்பர் ஒண்ணு ஒண்ணாகூடிக்கிட்டே போச்சாம் 1… 2… 3… 4… 5… 6… அப்புறம் திரும்ப ஒண்ணு ஒண்ணா குறைஞ்சு 1க்கே வந்ததும் கதவு திறந்துதாம்,
🤔உள்ள இருந்து ஒரு 24 வயதுப் பெண் – சூப்பர் அழகி வெளியில வந்தாளாம்.
உடனே அந்த அப்பன் பையன்கிட்ட சொன்னானாம்…‘‘டேய் மகனே! உடனே போய் உங்கம்மாவ கூட்டி வா!’’😂😂😂😂
No comments:
Post a Comment