கடந்த, 50 ஆண்டுகளுக்கு முன், காமராஜர், தமிழகத்தின் முதல்வராக இருந்தார். அவருக்கு கீழே, ராமையா என்று ஓர் அமைச்சர் பணிபுரிந்தார். விவசாயமோ, உணவு இலாகாவோ, அவர் பார்த்து வந்ததாக ஞாபகம்.
ராமையாவின் கீழே, ஸ்ரீனிவாசன் என்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இலாகாவின் முதன்மைச் செயலராக பணியில் இருந்தார். அவருக்கு கீழ், துணைச் செயலர்களும், இணைச் செயலர்களும், பல அதிகாரிகளும் இருந்தனர். ஒரு கூட்டத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ஸ்ரீனிவாசன், சில கருத்துகளை முன் வைத்தார். அப்போது, அமைச்சர் ராமையா, "என்னைய்யா பேசறே நீ? உன் கருத்து சரியா இருக்கா? நீயெல்லாம் எப்படி ஐயா, ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ணினே?' என்று, மற்ற அதிகாரிகளின் முன்னிலையில், ஸ்ரீனிவாசனை கேவலப்படுத்தினார்.
இதனால், மனமுடைந்த ஸ்ரீனிவாசன், மூன்று மாதம் விடுப்பு எடுத்துக் கொண்டு போய் விட்டார். நான்கைந்து நாட்கள் விடுப்பு எடுத்து போனாலே, சொல்லிவிட்டுப் போகும் ஸ்ரீனிவாசன், தன்னிடம் சொல்லாமல், மூன்று மாத விடுப்பில் சென்றதும், "ஏதோ தவறு நடந்திருக்கும்' என்று, யூகித்த காமராஜர், அவர் இலாகாவிற்கு சென்று விசாரித்தார். உண்மை தெரிய வர, மிகுந்த கோபம் அடைந்த காமராஜர், சுற்றுப்பயணத்தில் இருந்த ராமையாவை, உடனே, தன்னை வந்து பார்க்கும்படி உத்தரவிட்டார். அதேபோல், ஸ்ரீனிவாசனுக்கும், போன் செய்து வரச் செய்தார்.
எந்த அதிகாரிகளின் முன், ஸ்ரீனிவாசனை, ராமையா அவமதித்தாரோ, அந்த அதிகாரிகளின் முன்னிலையில், அமைச்சரை பொரிந்து தள்ளி விட்டார் காமராஜர். "உனக்கு என்னய்யா தெரியும்? ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விட நீ கெட்டிக்காரனா? ஸ்ரீனிவாசனை, நீ ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ணினேன்னு கேட்டியாமே? உன்னால், ஐ.ஏ.எஸ்., பாஸ் பண்ண முடியுமா? ஸ்ரீனிவாசன் வேலையை, ராஜினாமா பண்ணிட்டு, ஒரு கட்சியில் சேர்ந்து, எம்.எல்.ஏ., ஆகி அமைச்சராகலாம். ஆனா, நீ நெனைச்சா, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆகிவிட முடியுமா? அடுத்த தேர்தல்ல நீ, தோத்தா வீட்டுல தான் இருக்கணும். ஆனா, ஸ்ரீனிவாசன், ரிடையர் ஆகிற வரைக்கும், அதிகாரியா இருக்கலாம். அவர் கிட்ட மன்னிப்பு கேளு...' என்றார். அமைச்சர் ராமையா மன்னிப்பு கேட்டார். பின், அதே இலாகாவில் ஸ்ரீனிவாசன் இருந்தால், ராமையா மறுபடியும் தொந்தரவு கொடுப்பார் என்பதால், ஸ்ரீனிவாசனை வேறு இலாகாவுக்கு மாற்றினார் காமராஜர். இது அந்தக் காலத்து நடப்பு. தனக்கும், தன் கட்சிக்காரர்களுக்கு வேண்டாத, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, உடனே மாற்றவோ, பணி இடைநீக்கம் செய்வதோ, இந்தக் கால அரசியல்.

No comments:
Post a Comment