Monday, August 19, 2019

இன்று_நாள்_எப்படி...???

புலிகள் எனும் கயவர்களால் படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தி பிறந்த தினம் இன்று...
🏁 இந்தியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் அரசியல்வாதியுமான ராஜீவ் காந்தி 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.
🏁 இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரென கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.
🏁 இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வும் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியும் முயன்றார்கள்...
இதை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்...
சிங்கள அதிபர் பிரேமதாசா வுடன் இணைந்து இந்திய அரசின் அமைதிப்படைக்கு எதிராக...
நாங்கள் அண்ணன் தம்பி களுக்கிடையே ஆயிரம் இருக்கும் இதில் மூன்றாவது நபரான இந்திய மாமாவுக்கு என்ன வேலை வெளியேறுங்கள்...
என்றதால் வேறு வழியின்றி அமைதிப்படை வெளியேறியது...
இருப்பினும் 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூரில் பாசிச புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
🏢 இந்தியாவின் புகழ் வாய்ந்த தொழிலதிபரும், சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய சமூகப் பணிகளை மேற்கொண்டு வருபவருமான என்.ஆர்.நாராயண மூர்த்தி 1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூரில் பிறந்தார்.
🏢 இவர் 1981ஆம் ஆண்டு மிக குறைந்த முதலீட்டுடன் சில நண்பர்களுடன் சேர்ந்து 'இன்ஃபோசிஸ்" மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். அடுத்த ஆண்டே பெங்களூரில் தன் அலுவலகத்தினை தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம், விரைவில் அதுவே அதன் தலைமை அலுவலகமாகவும் மாறியது.
🏢 இவரது தன்னலமற்ற தொண்டுகளைப் பாராட்டி, அமெரிக்காவின் கௌரவம் மிக்க 'ஹூவர் பதக்கம்" வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகளுக்காக, பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டுள்ளன.
👉 உலகில் முக்கியமாக 3 வகை கொசுக்கள்தான் கொடிய நோய்களை பரப்புகிறது. அனோபிலஸ் என்ற கொசு மலேரியா காய்ச்சலையும், ஏடிஸ் ஏஜிட்டி என்ற கொசு டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோயையும், கியூலக்ஸ் என்ற கொசு யானைக்கால் நோயையும், ஜே.இ. என்ற கொசு ஜப்பானிய மூளை காய்ச்சலையும் பரப்புகிறது என கடந்த 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி சர் ரெனால்ட் ராஸ் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார். அந்நாளே கொசு ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
👉 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் ஈரோ சாரினென் பின்லாந்தில் பிறந்தார்.
👉 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாசா, வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.
👉 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நாசா, வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...