பஞ்சாங்கத்தில் உள்ள கரிநாள் என்பதை அந்த நாள் நல்ல நாள் இல்லை. அன்று சுப காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என நினைக்கிறார்கள்
*ஆனால்...*
முழு விளக்கமாக ஏன் எதற்கு எந்த அடிப்படையில் இன்று கரிநாள். ஏன் இந்த கரிநாளில் , சுபகாரியங்கள் தவிர்கப்பட வேண்டும் என்று பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை !
அதாவது, கரிநாள் என்பது, “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” அன்றைய நாளில் சூரிய கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும்.
நமது இந்துமத முன்னோர்கள் பலஆண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து உலகிற்கு தெரிவித்து வைத்திருக்கும் நாட்கள் இவை..!
கரிநாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை என்பது குறிப்பிடத்தக்கது (Constant )...!
தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள் நமது இந்துமத ஆசான்கள் .
*உதாரணமாக ....*
தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள். மாறாக, இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது "பரணி, கிருத்திகை"போன்றோ. திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையிலோஅமைந்தது அல்ல...!
சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும் பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும். ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன.
இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல். ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். .!
இது போன்ற காரணங்களால், கரிநாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்க்கச்சொல்லி வலியுறுத்திருக்கிறார்கள் நமது இந்துமத ஆசான்கள் .
இது வானவியல் ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி , ஜோதிட ரீதியாக கடைபிடித்து வரும் விஷயம் அல்ல..!
*ஒவ்வொரு தமிழ் வருடமும்*
*வரும் கரிநாட்களின் விபரம்
சித்திரை-6, 15,
வைகாசி- 7, 16, 17,
ஆனி- 1, 6,
ஆடி-2, 10, 20,
ஆவணி-2, 9, 28,
புரட்டாசி- 16, 29,
ஐப்பசி-6, 20,
கார்த்திகை-1, 10, 17,
மார்கழி-6, 9, 11,
தை-1, 2, 3, 11, 17,
மாசி-15, 16, 17,
பங்குனி-6, 15, 19.
ஆகியநாட்கள் கரிநாள்.
*வரும் கரிநாட்களின் விபரம்
சித்திரை-6, 15,
வைகாசி- 7, 16, 17,
ஆனி- 1, 6,
ஆடி-2, 10, 20,
ஆவணி-2, 9, 28,
புரட்டாசி- 16, 29,
ஐப்பசி-6, 20,
கார்த்திகை-1, 10, 17,
மார்கழி-6, 9, 11,
தை-1, 2, 3, 11, 17,
மாசி-15, 16, 17,
பங்குனி-6, 15, 19.
ஆகியநாட்கள் கரிநாள்.
No comments:
Post a Comment