முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இதுவரை 24 முறை கைது செய்வதற்கான தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தவிர இவரது வங்கிக் கணக்கையும் மத்திய அரசு முடக்காமல் இருக்கிறது.
நீதிமன்றத்தில் இருக்கும் பல நீதிபதிகள் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள். இதனால், யார் நினைத்தாலும் சிதம்ரபத்தை எதுவும் செய்ய முடியாது. நிச்சயம் அவரை கைது செய்ய முடியாது. அந்த அளவிற்கு நீதிமன்ற நீதிபதிகள் சிதம்பரம் கட்டுப்பாட்டில் உள்ளனர். பா.ஜ., ஆட்சிக்கு வந்த 6 வருடம் ஆன நிலையிலும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மாறாக. அவர் தொடர்ந்து ஜாமீன் பெற்று வருகிறார். இதுவே சாதாரண மக்களுக்கு இப்படிப்பட்ட தடை நீடிப்பு கிடைக்குமா? என முகநூலில் பலர் பொங்குவதை பார்த்து வருகிறேன். இவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.
உண்மையை சொன்னால் தன்னை கைது செய்வதற்கான தடையை நீதிமன்றம் நீடித்து வருவது சிதம்பரத்திற்கே சற்று அதிர்ச்சிதான். சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. இருந்த போதும் சிதம்பரத்தின் கைது நீடிப்பு குறித்து காவி நண்பர்கள் பா.ஜ., மற்றும் பிரதமரை கடுமையாக விமர்சிக்கின்றனர். இதனால், இதைப் பற்றி ஓருமுழுமையான பதிவை பதிவு செய்கிறேன்.
காங்கிரஸ் கட்சி மற்றும் சோனியா குடும்பத்தை விட இன்றைய தினம் சிதம்பரத்திடம்தான் அதிக பணம் இருக்கிறது. இவருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பத்திற்கும் மேற்பட்ட நாடுகளில் சொத்து இருக்கிறது. இவரது சொத்து விவரத்தை கேள்விப்பட்ட பிரதமர் மோடியே சற்று ஆடிப் போய்விட்டாராம். சில நீதியரசர்களும் மிரண்டு போயினர். இவ்வளவு ஏன், சோனியா மற்றும் ராகுலும் சிதம்பரத்திடம் இவ்வளவு சொத்தா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். தவிர, கட்சிக்கு பணம் சேர்ப்பதிலும் சிதம்பரம் கெட்டிக்காரர். எனவேதான் சோனியாவில் சிதம்பரத்தை எதுவும் செய்ய முடியவில்லை. தவிர, காங்கிரஸ் மற்றும் சோனியாவின் சில ரகசியங்கள் சிதம்பரத்திற்கு தெரியும் என நம்பப்படுகிறது. இதனால்தான், கார்த்தி சிதம்பரம் மீது காங்கிரஸ் மேலிடத்திற்கு இருந்த எதிர்ப்பையும் மீறி சிவகங்கையில் தன்மகனை வேட்பாளராக நிறுத்தி கட்சியில் தனது செல்வாக்கு என்ன என்பதை சிதம்பரம் நிரூபித்தார்,
சரி, மத்திய அரசுக்கு இவ்வளவு தெரிந்தும் சிதம்பரத்தை ஏன் கைது செய்யவில்லை. அவர் மீதான குற்றசாட்டுகள் 100 சதவீதம் உண்மை என நிரூபிக்கப்பட்டு விட்டதே என நீங்கள் கேட்பது காதில் கேட்கிறது. இங்குதான் பிரதமர் மோடியின் ராஜதந்திரம் இருக்கிறது. 2014க்கு முன் இந்தியாவின் கறுப்பு பணம் அனைனத்தும் ‘சுவிஸ்’ வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது. பிரதமராக மோடி வந்த பிறகு ‘சுவிஸ்’ வங்கிக்கு நெருக்கடி கொடுக்க அவர்கள் பணம் வைத்துள்ள இந்தியர்களின் லிஸ்டை இந்திய அரசுக்கு அனுப்பியது. இப்போது அந்த கருப்பு பணம் எல்லாம் சுவிஸ் வங்கியிலிருந்து துபாய் சென்றுவிட்டது. இன்றைய உலகத்தில் கருப்பு பணம் பதுக்கும் நாடாக துபாய் உள்ளது. தாவூத் இப்ராஹிம் துபாயில் இருக்கிறார்.
(இந்த நேரத்தில் காங்கிரஸ் காலத்தில் கருப்பு பணம் எவ்வாறு வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது என்பதை சுப்பரமணிய சாமி ஒரு வீடியோ வெளியிட் டுள்ளார். அதைப் பார்த்தால் உங்களுக்கு
எல்லா விவரங்களும் தெரிய வரும்.)
எல்லா விவரங்களும் தெரிய வரும்.)
சரி விஷயத்திற்கு வருகிறேன். மத்திய அரசின் கருணை இல்லாமல் சிதம்பரத்திற்கு இத்தனை முறை ஜாமீன் வழங்க வாய்ப்பில்லை. இது அரசியல் நன்கு தெரிந்தவர்களுக்கு தெரியும், புரியும். இருந்த போதும் சிறிய மீனை பிடிப்பதில் மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை. திமிங்கலம் கண்டிப்பாக மாட்டும். அதற்கான வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது. கிட்டதட்ட அது முடியும் தருவாயில் உள்ளது, அது என்ன என்பதை என்னால் வெளியிட முடியாது. சிதம்பரத்தை போலத்தான் மாறன் பிரதர்ஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்படவில்லை. இதில் உங்களுக்கான பதில் இருக்கிறது. இந்த பாராவை திரும்ப ஒருமுறை படியுங்கள். நன்கு புரியும்.
கருப்புப்பணம் வைத்திருக்கும் பல திமிங்கலங்களின் ரகசியம் மத்திய அரசிடம் உள்ளது. அனைத்தும் நல்லபடியாக முடிவடைந்த பின், பிரதமர் மோடி சொன்னதுபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஊழல்வியாதிகள் சாரி ஊழல்வாதிகள் அனைவரும் திகாருக்கு செல்வது உறுதி. அப்போது பிரதமர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்கு தெரியவரும். அதுவரை கைது செய்வதற்கான தடையை நீடிக்கும் செயலை ‘ரசித்துவிட்டு’ செல்லுங்கள். நன்றி. ஜெய்ஹிந்த்.
No comments:
Post a Comment