வீசிங் என கூறப் படுகின்ற மூச்சு திணறல் அல்லது ஆஸ்துமாவிற்கு எத்தனை மருத்துவங்கள் இருந்தாலும் போதாது என்று தான் சொல்ல வேண்டும். காரணம் ஆஸ்துமாவின் தாக்கம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.. இன்று இதற்கான தீர்வை தான் பார்க்கப் போகின்றோம்
ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வீட்டில் கண்டிப்பாக் இருக்க வேண்டிய ஒன்று கடுகு எண்ணெய். மூச்சு திணறல் ஏற்படும் போது கடுகு எண்ணெய்யில் கற்பூர வில்லை ஒன்றை போட்டு மிக்ஸ் செய்து சுவாசியுங்கள். அடுத்து பூண்டு ஆஸ்துமாவை முற்றிலும் தடை செய்யும் சக்தி பூண்டுக்கு உள்ளது.
*உங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா?... கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்... உடனே சரியாகிடும்...*
வீசிங் என்பது மூச்சுத் திணறலின் ஒரு வகை. இதனை கட்டுப்படுத்த மருத்துவரின் பரிந்துரையின்படி சிலர் இன்ஹெலர் பயன்படுத்துவார்கள். ஆனால் நள்ளிரவுகளில் கூட இது நோயாளியை பாதுகாக்கும் என்பதை தீர்மானமாக கூற முடியாது. ஆகவே வீசிங் வரமால் தடுப்பது மட்டுமே சிறந்த ஒரு தீர்வாகும். ஆகவே வீசிங் வராமல் தடுப்பதற்கான சில எளிய குறிப்புகளை இந்த பதிவில் இப்போது காணலாம். தொடர்ந்து படித்து இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி வீசிங் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
*வீசிங் தடுப்பு முறைகள்*
மருத்துவர் உங்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது என்று அறிவிக்கும்போது அதன் உண்மையான பாதிப்பை பற்றி நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள். தண்ணீரில் இருந்து வெளியேறி வந்த மீன், துடிப்பது போல் தான், இன்ஹெலர் இல்லாமல் நீங்கள் இருப்பது. எந்த நேரத்தில் வீசிங் ஏற்பட்டாலும், உடனடியாக இன்ஹெலர் பயன்படுத்துவதால் நிலைமை கட்டுக்குள் இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் இதனை கையில் வைத்திருப்பது என்பது சாத்தியப்படாத ஒன்று. ஆகவே, இயற்கை தீர்வுகள் மூலம் இந்த பாதிப்பை முற்றிலும் போக்குவது அல்லது கட்டுக்குள் வைப்பது மட்டுமே நல்ல தீர்வாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள தீர்வுகள் அனைத்தும் நிச்சயமாக ஆஸ்துமா பாதிப்பிற்கு எதிராக போராடும் அல்லது ஒரு சில நேரங்களில் முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் நிச்சயம் இவற்றை முயற்சிக்கலாம்.
*மஞ்சள்*
மஞ்சள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜெனேற்ற எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம். கூடுதலாக, மஞ்சள் வீசிங் பாதிப்புக்கு ஒரு சிறந்த சிகிச்சையையும் அளிக்கிறது. ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் அரைத்த மஞ்சள் தூளை சேர்த்து கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால், வீசிங் குறைகிறது. இதனை குடிப்பதால் உண்டாகும் அறிகுறிகள் நோயாளிகளுக்கு நன்மையைத் தருவதாக அறியப்படுகிறது. ஆஸ்துமா பாதிப்பும் கட்டுக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
*கற்பூரம் மற்றும் கடுகு கடுகு எண்ணெய்,*
மூக்கில் சளி சேருவதை குறைக்க உதவுகிறது. இதனால் சுவாச மண்டலம் சீராக செயலாற்றுகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த தன்மையால் ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது. கடுகு எண்ணெயுடன் கற்பூரத்தை சேர்த்து பயன்படுத்துவதால் இதன் பலன் மேலும் அதிகரிக்கிறது. கடுகு எண்ணெய்யை சிறிதளவு எடுத்து சூடாக்கி, ஒரு ஜாடியில் வைத்துக் கொள்ளவும். இதனை நுகர்வதால் உங்களுக்கு ஆஸ்துமாவில் இருந்து நிவாரணம் கிடைக்கலாம்.
*எலுமிச்சை சாறு*
எலுமிச்சை சாற்றை தினமும் பருகுவதால் சளி கட்டுக்குள் இருக்கிறது. மேலும், சுவாசம் தடைபட்டு வீசிங் ஏற்படுவதை தடுக்கிறது. ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை தினமும் காலையில் பருகுவதால் வீசிங் வராமல் தடுக்கலாம். தினமும் சர்க்கரை சேர்க்காமல் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு பருகுவதால் உங்கள் சுவாச பாதை சீராகிறது மற்றும் சளி மற்றும் இருமல் குறைகிறது.
*தேன்*
தேனுக்கு இயற்கையாகவே குணப்படுத்தும் தன்மை உண்டு. தேனுக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண் கிருமிகள் எதிர்ப்பு தன்மை உண்டு. தேனுக்கு இருக்கும் இந்த தன்மைகள் இருமலை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. ஆஸ்துமா வீசிங்கை அதிகப்படுத்தும் அழற்சியை தடுக்க தேன் உதவுகிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்தை அதிகரிக்கவும் தேன் உதவுகிறது. ஆர்கானிக் தேனின் வாசனையை நுகர்வதன் மூலம் வீசிங்கை கட்டுப்படுத்தலாம்.
*கிங்க்கோ பிலோபா*
வீசிங் மற்றும் மூச்சுத்திணறல் நோய் சிகிச்சைக்கு பல நூற்றாண்டுகளாக இந்த மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நுரையீரலின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது. இந்த மூலிகையை தண்ணீரில் கொதிக்க வைத்து டீயாக பருகலாம். கொதிக்கும்போது அந்த ஆவியில் உங்கள் முகத்தையும் காட்டலாம். இது மாத்திரை வடிவத்திலும் கிடைக்கிறது. மாத்திரையில் இந்த மூலிகையுடன் பூண்டு மற்றும் இஞ்சியும் சேர்க்கப்படுகிறது.
*பூண்டு*
ஆஸ்துமா வீசிங் போன்ற பல்வேறு வகையான நோய்களின் சிகிச்சைக்கு பயன்படும் பூண்டு, இருமல் போன்ற பக்டீரியா தொற்றையும் தடுக்க உதவுகிறது. தொற்று பாதிப்புகள் மூச்சு குழாயில் சளி உற்பத்தி மற்றும் சளி படிவதற்கு காரணமாக உள்ளது. இதுவே வீசிங்கின் மூலக்காரணம் ஆகும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு பூண்டுகளை சாப்பிடுவதன் மூலம் கடுமையான ஆஸ்துமாவைக் கூட தடுக்கலாம். பூண்டு மாத்திரைகளும் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் அவை இயற்கை பூண்டை விட சக்தி வாய்ந்ததாக இருக்காது.
*ஆளி விதைகள்*
ஆளி விதைகள் அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்டவை. மேலும் அவை ஒமேகா கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக இருப்பவை. ஆளி விதைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதால் வீசிங் நிச்சயம் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆளி விதை எண்ணெய்யை எடுத்துக் கொள்வதால் நோயாளிகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு குறைவதாக அறியப்படுகிறது. தினமும் ஒரு தேக்கரண்டி ஆளி விதை எண்ணெய்யை பருகுவதால் வீசிங் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இதற்கு மாற்றாக, தினமும் அரை தேக்கரண்டி ஆளிவிதைகளையும் மென்று சாப்பிடலாம்.
*வீசிங் பிரச்சனை*
*சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!*
*சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!*
ஆஸ்துமா என்னும் நோய் நுரையீரலுக்குக் காற்றைக் கொண்டுசெல்லும் மூச்சுப்பாதை (Airway)வீங்கி (Inflammation) குறுகுவதால் ஏற்படுகிறது.
ஆஸ்துமாவை ஏற்படுத்தும் காரணிகள்:
ஒவ்வாமையின் விளைவாகவே பெரும்பாலும் ஆஸ்துமா ஏற்படுகிறது. தூசு, குளிர்ந்த காற்று, புகை, மூச்சுப்பாதையில் ஏற்படும் தொற்றுகள், ரசாயனப் பொருட்கள், புகைபிடித்தல், மகரந்தங்கள், வளர்ப்புப் பிராணிகளின் முடிகள், வாசனைத் திரவியங்கள் போன்றவை ஏற்படுத்தும் ஒவ்வாமையின் விளைவுதான் ஆஸ்துமாவின் வெளிப்பாடு.
அறிகுறிகள்:
சளியுடனோ அல்லது சளி இல்லாமலோ இருமல் தொடர்ந்து இருக்கும். ஒரு சுவாசத்துக்கும் அடுத்த சுவாசத்துக்கும் இடைப்பட்ட நேரம் குறைந்து காணப்படும். இழுப்பானது அதிகாலை மற்றும் இரவில் அதிகமாக இருக்கும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
முசுமுசுக்கை இலைப்பொடி, மற்றும் தூதுவளை இலைப் பொடி சம அளவு கலந்து, அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உண்ணலாம்.
உத்தாமணி இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, சம அளவு தேன் சேர்த்து அருந்தலாம்.
முட்சங்கன் இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிடலாம்.
நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து அதில் 500 மிகி அளவு மூன்று வேளைகள் தேனில் குழைத்து அருந்தலாம்.
திப்பிலிப் பொடியுடன் கம்மாறு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.
செடி, திப்பிலி, நாயுருவி விதை, சீரகம், இந்துப்பு சமஅளவு எடுத்துப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.
கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் சம அளவு எடுத்துப் பொடித்து, வெல்லம் கலந்து இருவேளை உண்ணலாம்.
சீந்தில் கொடி, ஆடாதோடை, கண்டங்கத்திரி இவற்றைச் சம அளவு எடுத்து, அரைத்து, அதில் நெய் சேர்த்துக் காய்ச்சித் தினசரி இருவேளை ஒரு ஸ்பூன் அருந்தலாம்.
லவங்கம், சாதிக்காய், திப்பிலி வகைக்கு 1 பங்கு, மிளகு 2 பங்கு, தான்றிக்காய் 3 பங்கு, சுக்கு 4 பங்கு சேர்த்துத் தூள் செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து அரை ஸ்பூன் காலை மாலை உண்ணலாம்.
இஞ்சிச்சாறு, மாதுளம்பூச்சாறு, தேன் சம அளவு கலந்து 30 மிலி இருவேளை பருகலாம்.
இம்பூறல் இலைப் பொடியுடன் இரண்டு பங்கு அரிசி மாவு சேர்த்து அடையாகச் செய்து சிற்றுண்டி போலச் சாப்பிடலாம்.
ஆடாதோடை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து அருந்தலாம்.
மூங்கிலுப்பை வேளைக்கு அரை ஸ்பூன் வீதம் கொடுக்கலாம்.
மூக்கிரட்டை வேரை அரைக் கைப்பிடி எடுத்து ஒன்றிரண்டாகச் சிதைத்து, 4 பங்கு நீர் சேர்த்து 1 பங்காக வற்றவைத்து இருவேளை அருந்தலாம்.
மிளகரணை இலையை உலர்த்திப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து உண்ணலாம்.
சிற்றரத்தை, ஒமம், அக்கரகாரம் சம அளவு எடுத்துப் பொடித்து, அரை ஸ்பூன் எடுத்துத் தேன் கலந்து சாப்பிடலாம்.
துளசி, தும்பை இலை சம அளவு எடுத்து, உலர்த்திப் பொடித்து, அதில் அரை ஸ்பூன் தேன் கலந்து உண்ணலாம்.
*தவிர்க்க வேண்டியவை:*
கிரீம் பிஸ்கட், குளிர்பானங்கள், கலர் சேர்க்கப்பட்ட உணவுகள், எண்ணெய், கொழுப்பு, வாழைப்பழம், திராட்சை, எலுமிச்சை, வாசனைத் திரவிங்கள், ஜஸ்கிரீம், கத்திரிக்காய், அதிகக் குளிர், பனி, குளிரூட்டப்பட்ட அறை.
*நோய்யற்ற வாழ்வே குறையற்ற செல்வம்*
No comments:
Post a Comment