நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன் (வயது 74). அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பி.எச்.பாண்டியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
No comments:
Post a Comment