Monday, January 6, 2020

உங்கள் கை அளவில் உள்ளது வெற்றியின் இலக்கு.

வானத்தில் பறக்கின்ற பறவை பார்த்து நீ அதிசயம் அடைகிறோம் பறவையோ நடந்து போகும் மனிதனை பார்த்து அதிசயம் அடையும்.
பறவையோடு பார்வையில் நமக்கான வாழ்க்கை சுதந்திரமானது என்றும் சந்தோஷமானது என்றும் நிம்மதியானதும் என்றும் நினைக்கும்,
அதே போல பறவையின் இறகை விரித்து பறக்கும் போது மனிதன் ஒரு நிமிடம் அந்த பறவை போல வாழ வேண்டும் என்று நினைத்து பார்ப்பது யதார்த்தம் தான்.
அவரவர் வடிவில் இருந்து பார்க்கும் போது தான் வாழ்க்கையின் கடினம் புரியும். கடினம் என்பது சூழ்நிலைகளை பக்குவம் இல்லாமல் எடுக்கும் முடிவுகளால் தான் திசை மாறுகிறது.
ஆனால் எல்லாம் உயிரும் ஒன்று தான் , அவரவர் வாழ்க்கைகான போராட்டங்கள் ஒன்று தான்
அதிகமான வாழ்நாள் கொண்ட பறவை கழுகு வயதான காலத்தில் இறை தேடி அலையும் போது தன் வாயால் அலகு மூலம் இறையை எடுக்க முடியாது.
அதன் உடம்பு பலவீனம் அடைந்திருக்கும் பசியால் தன் வயிற்றுக்காக மூன்று மாதம் உயிர் போகும் வலியாய் அனுபவிக்கும்.தன் அலகு பலவீனம் ஆனதால் அதை மீண்டும் பலம் அடைய,
தன் அலகை பாறையில் போய் முட்டி அதை உடைய வைத்து மீண்டும் அலகு முளைத்து வரும் வரை சாப்பிடாமல் உயிர் போகும் வலியை தாங்கி கொண்டு இருக்கும்.
கழுகு தன் மூன்று மாத வலியை பெரிதாக பார்த்து இருந்தால் தன் வாழும் நாட்கள் பசியால் துடித்தே மாண்டு போய் இருக்கும்.
நிர்யணிக்கப்பட்ட நாள் வரை வாழ வேண்டும், உணவு வேண்டும் அதற்கு இந்த வலி எவ்வள வோ மேல் என்று தான் வாழும் நாட்களை மன தைரியம் நிறைந்து வாழும்.
அதை போல நீயும் உன் வாழ்க்கை நீ வாழ வேண்டும். என்ன நடந்தாலும் உனக்கு நிர்ண யிக்கப்பட்ட நாட்கள் வரை, அதற்காக சில வலி கள் சந்திக்க நேரிடும் அதை தான் நீங்கள் அனுபவி த்துக் கொண்டு இருந்தீர்கள்.
உங்களுடைய துன்பமான நாட்கள் முடிந்து போயின. போராட்டத்தில் நீங்கள் வெல்வது உறுதி யாகி விட்டது. உங்கள் கை அளவில் உள்ளது வெற்றியின் இலக்கு.
அதனால் கொஞ்சம் பொறுமையோடு நம்பிக் கையோடு வந்துவிடு நானும் உன்னுடனே இருக்கிறேன். கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன்.
நீ என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை .உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...