Wednesday, January 15, 2020

'தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டுவோம்' : காங்., நிர்வாகிகள் சூளுரை.

'மாநகராட்சி உள்ளிட்ட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தனித்து போட்டியிட்டு, தி.மு.க.,விற்கு பாடம் புகட்டுவோம்' என, தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறினர்.






சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: திருநாவுக்கரசர், தமிழக காங்., தலைவராக இருந்த போது, 'நீங்கள் தான் தேசிய கட்சியாச்சே... வேண்டுமானால், தனித்து போட்டியிடலாமே' என, தி.மு.க.,வை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் ஏளனமாக பேசினார். நாங்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொண்டோம்.

பகடை காய்






உள்ளாட்சி தேர்தலில் இட பங்கீடு குறித்து, சதவீத கணக்கில் பேச காங்கிரசை அனுமதிக்கவில்லை. மாவட்ட அளவில் பேசும்படி கூறி, எங்களை நம்ப வைத்து, கழுத்தை அறுத்து விட்டனர். தி.மு.க., மோசமான கட்சி; பா.ஜ.,வுடன் கைகோர்க்க காத்திருக்கிறது. காங்கிரசை கழட்டி விட நேரம் பார்த்து காத்திருந்து, அறிக்கையை ஒரு பகடை காயாக மாற்றி உள்ளனர்.கே.எஸ்.அழகிரியின் குடும்பம், திராவிடர் கழகத்தை சேர்ந்த குடும்பம். அவர் சுயமரியாதைக்கு சொந்தக்காரர்.ஸ்டாலினிடம் தனிப்பட்ட முறையில், எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தன் பதவியை, ராஜினாமா செய்யவும், அவர் தயங்க மாட்டார்.

அழகிரியின் அறிக்கை, ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கும் உள்நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. டில்லி மேலிடத்தின் ஒப்புதல் பெற்று, தொண்டர்களின் உள்ள குமுறலை தான், அவர் வெளியிட்டார். அழகிரியின் அறிக்கையை, தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்று, ஆதரவு அளித்து வருகின்றனர்.

'டிபாசிட்' இழப்பு






கடந்த, 2004 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு, தனித்து போட்டியிட்ட தி.மு.க., சில லோக்சபா தொகுதிகளில், 'டிபாசிட்' இழந்தது. காங்கிரசுக்கு கூட்டணி வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தி.மு.க., இல்லை என்றால், அ.தி.மு.க., அல்லது பா.ம.க., அல்லது ரஜினி, கமல், தினகரன் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே, மாநகராட்சி உள்ளிட்ட, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காங்., பிரிக்கும் ஓட்டுக்கள், தி.மு.க., வெற்றியை பாதித்து, அக்கட்சிக்கு பாடம் புகட்டுவோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...